Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, June 6, 2011

கூத்தடிக்கும் கொள்கைக்கும் சம்பத்தம் உண்டா? ரொம்ப ஆடுனே அடக்கிடுவாங்க மக்கள் !

நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் 2010-ம் ஆண்டு பொதுப்பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சட்டம் இயற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தில் நூற்றுக்கணக்கான வல்லுநர்கள் உழைப்பைச் செலுத்தி பொதுப்பாடத்திட்டத்தை உருவாக்கினர். இந்த வரைவு பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு பொதுமக்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளும் கேட்டறியப்பட்டன.

இவ்வாறு பெறப்பட்ட ஆலோசனைகளைப் பரிசீலித்தப் பிறகு பாடத்திட்டம் இறுதிசெய்யப்பட்டது. பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், மெட்ரிக், ஆங்கிலோ, ஓரியண்டல் பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகளை உறுப்பினர்களாகக் கொண்ட பொதுக்கல்வி வாரியம் இறுதிசெய்யப்பட்ட பொதுப்பாடத்திட்டத்துக்கு ஏற்பும் அளித்தது. இதனடிப்படையில், பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கொண்ட குழுவால் பாடநூல்களும் எழுதப்பட்டன.

தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் சுமார் 200 கோடி ரூபாய் செலவில் 1 முதல் 10 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு கிடங்குகளிலும், பள்ளிகளிலும் வைக்கப்பட்டுள்ளன. பொதுப்பாடத்திட்டமே சமச்சீர் கல்வி ஆகாது. ஆனால், பொதுப்பாடத்திட்டம், பொதுப்பாடநூல், பத்தாம் வகுப்பு இறுதியில் பொதுத் தேர்வு என்பது சமச்சீர் கல்வி முறையை நோக்கிய பயணத்தின் முதற்படி ஆகும். மீண்டும் பழையபடியே நான்கு வகை பாடத்திட்டத்துக்குச் செல்வது என்பது கல்வி வளர்ச்சியில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். இது வணிக நோக்கத்துடன் பள்ளி நடத்தும் தனியார் பள்ளி நிர்வாகிகளை மகிழ்விக்கும்.

இந்தச் சூழலில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பொதுப்பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி, கிடங்குகளில் இருக்கும் பாடநூல்களை மாணவர்களுக்கு அளித்து, பத்தாம் வகுப்பு இறுதியில் ஒரே பொதுத்தேர்வு என்ற நடைமுறையைக் கொண்டுவரக் கோருகிறோம். அதேபோல், அரசுப் பள்ளிகளை வலுப்படுத்துதல், தனியார் பள்ளியில் இடஒதுக்கீட்டை உறுதிசெய்தல், கட்டணக் கொள்ளையை தடுக்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளல், போதுமான ஆசிரியர் நியமித்தல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி தரமான கல்வி சமச்சீராக அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தனியார் பள்ளிகளை அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளாக மாற்றவும், புதிய பள்ளிகளை அரசு தொடங்குவதும் மட்டுமே பொதுப்பள்ளி என்ற பதம் நோக்கி சமச்சீர் கல்வி செல்லும். பொதுப்பள்ளி மூலம் கல்வி உரிமை பெறவும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவும் தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டு பள்ளிக் கல்வியில் இந்தியாவுக்கே வழிகாட்டும் முதல் மாநிலமாகத் திகழச் செய்ய வேண்டும்.

1 comments :

ரொம்ப ஆடுனே அடக்கிடுவாங்க மக்கள் !

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!