திருச்சி,ஜூன் 25 முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் மனைவி மற்றும் உறவினர்களிடம் நேற்று திருச்சி வருமானவரி அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி நிர்வாக இயக்குநர் சரத்குமார் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். ராசா கைது செய்யப்பட்டபோது சி.பி.ஐ பெரம்பலூர் மற்றும் திருச்சியில் உள்ள அவரது வீடு மற்றும் உறவினர்களிடம் ஊழல் தொடர்பான விசாரணை நடைபெற்றது.
அப்போது ராசாவிற்கு சொந்தமான சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். கைப்பற்ற பட்ட சொத்து ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை துணை இயக்குநர் ஆல்பர்ட் மனோகரன் தலைமையில் திருச்சி, பெரம்பலூரில் விசாரணை நடைபெற்றுவந்தது. இது தொடர்பாக ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ராசாவின் சகோதரர் ராமச்சந்திரன், சகோதரி மகன் பரமேஸ்குமார், சகோதரி மகள் மற்றும் ஆடிட்டர்களான பிரான்சிஸ், முத்துக்குமாரசாமி, சுரேஷ்குமார் ஆகியோரும் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். அதன்படி நேற்று காலை அந்த 7 பேரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகினர்.
ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ராமச்சந்திரன், பரமேஸ்குமார் ஆகிய 3 பேரிடம் வருமான வரித்துறை அலுவலகத்தில் தனி அறையில் விசாரணை நடத்தினர்.
0 comments :
Post a Comment