Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, June 14, 2011

ஆசிக்கு வெளிநாட்டு மாணவர்கள் வருகை குறைவு, பயத்தில் கல்வி நிறுவனங்கள்

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் படிக்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபலமான கல்வி நிறுவனங்களில் படிக்க, உலகளவில் மாணவர்கள் போட்டி போட்டு வந்தனர்.

இந்தியாவிலிருந்து செல்லும் மாணவர்கள் பலர் அங்கு சென்று பகுதி நேரமாக ஓட்டல்களிலும், பெட்ரோல் நிலையங்களிலும் வேலை பார்த்து வந்தனர். இரவு நேரத்தில் பணி முடித்து வீடு திரும்பும் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் கடந்தாண்டு அதிகரித்தது. இதனால், ஆஸ்திரேலிய அரசு விசா விதிகளை கடுமையாக்கியது.

மாணவர்கள் என்ற போர்வையில் விசா பெற்று வேலைக்காக நிரந்தரமாக ஆஸ்திரேலியாவில் தங்குவதை தடுக்க மாணவர்களின் வங்கி கணக்கில் போதுமான பணம் இருக்க வேண்டும். மருத்துவமனை உதவியாளர், அழகு கலை நிபுணர் போன்ற பயிற்சிகளுக்கு வருபவர் பயிற்சிமுடிந்ததும், அவரவர் நாடுகளுக்கு சென்றுவிட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளால், தற்போது இந்த பயிற்சிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை, 21 சதவீதம் குறைந்துள்ளது என, அந்நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதேபோல ஆங்கில மொழி பயிற்சிக்கான கல்விக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால், பட்டபடிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. தொழில் பயிற்சி படிப்புக்கான விண்ணப்பங்கள் குறைந்துள்ளதால், விசா நடைமுறைகளை தளர்த்தும்படி கல்வி நிறுவனங்கள் அந்நாட்டு அரசை கேட்டுக் கொண்டுள்ளன.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!