Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, June 26, 2011

மதுவுக்கு அடிமையாகும் மங்கைகள்

மதுரை:  உலக மது, போதை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மதுரை மிஷன் மருத்துவமனை சார்பாக நடந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் பெண்களும் குடிபோதைக்கு அடிமையாகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

பேரணிக்கு தலைமை வகித்து பேசிய மருத்துவமனையின் மனநல மருத்துவர் டாக்டர் எம். கார்த்திகேயன் கூறுகையில், மது உடல் நலத்தை கெடுப்பதுடன், மன நலத்தையும் பாதிக்கிறது. குடும்ப பிரச்சனை, விவாகரத்து, சாலை விபத்து, பொருளாதார பிரச்சனைகள் மற்றும் வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு மிகப்பெரிய காரணமாக அமைகிறது.

குடும்பத்தில் அப்பா குடித்தால், மகனும் குடிக்கும் சூழல் உருவாகிறது. 14 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இப்போதை பழக்கத்திற்கு மிகவும் அடிமையாக உள்ளனர். ஆண்களில் பெரும்பாலானோர் வாழ்வில் ஒரு முறையாவது மது அருந்தியுள்ளனர். 35 சதவீதம் பேர் தொடர்ச்சியாக மது அருந்துகின்றனர். இதனை தனி மனித சீர்கேடாக பார்க்காமல் இதனை ஒரு நோய் எனக்கருதி சிகிச்சை மேற்கொள்ளவேண்டும், தகுந்த மருந்து மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம். டாக்டரின் ஆலோசனை இல்லாமல் மருந்துக்கடைகளில் தூக்க மாத்திரைகள், வலி மாத்திரைகள் வாங்கி உட்கொள்ளும் நிலை உள்ளது. இது தவறு. இவ்வாறு அவர் பேசினார்.

பேரணியை துவக்கி வைத்த தேசிய மாணவர் படை குரூப் கமாண்டர் கர்னல் பி.வேணுகோபால் கூறுகையில், என்.சி.சி. மாணவர் படையைச் சார்ந்தவர்கள் இன்று சமுதாயத்தில் வரதட்சணை கொடுமை, தீவிரவாதம் மற்றும் மது, போதை ஒழிப்பதற்கு முழுமையாக பாடுபடவேண்டும் என்றார். நேற்று நடைபெற்ற பேரணியில் லேடிடோக் கல்லூரி, செளராஸ்டிரா கல்லூரி, பாத்திமா கல்லூரி, மீனாட்சி கல்லூரியைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியில் பல்வேறு சமூக சீர்கேடுகளை விளக்கும் அரக்கன் போன்ற பொம்மை செய்யப்பட்டு ஊர்வலமாக வந்தது.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!