Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, June 26, 2011

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு இங்கலாந்தில் விருதுடன் ரூ 7.5 லட்சம்!

லண்டன்: பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஞ்சலி ஜோசப்,33 என்ற பெண் எழுதிய நாவலுக்கு, உலகின் கவுரவமான இரு விருதுகள் கிடைத்துள்ளன.

கடந்த 1978ல் மும்பையில் பிறந்த அஞ்சலி ஜோசப், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் ஆங்கிலம் பயின்றார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சோர்போன் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலம் கற்பித்தார். இவர் எழுதிய முதல் நாவல் "சரஸ்வதி பார்க்'. ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட இந்நாவல், மும்பையின் புறநகர்ப் பகுதி ஒன்றில் நடக்கும் காதல் கதையை மையமாகக் கொண்டது.

லண்டனில் இயங்கும், "தி சொசைட்டி ஆப் ஆதர்ஸ்' என்ற அமைப்பு ஆண்டு தோறும், "பெட்டி பிராஸ்க்' என்ற விருதை வழங்குகிறது. காமன்வெல்த் நாடுகளில் வசிக்கும், 35 வயதுக்குட்பட்டவர்கள் முதன் முதலாக எழுதும் நாவல்களில் சிறந்தவற்றுக்கு இவ்விருது வழங்கப்படும். அதேபோல் லண்டனில், டெஸ்மாண்ட் எலியட் என்ற பதிப்பாசிரியரின் பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளையால் "டெஸ்மாண்ட் எலியட்' விருதும், ஆண்டுதோறும் சிறந்த ஆங்கில நாவலுக்கு வழங்கப்படும். இந்தாண்டுக்கான இந்த இரு விருதுகளும், அஞ்சலி ஜோசப் எழுதிய "சரஸ்வதி பார்க்' நாவலுக்குக் கிடைத்துள்ளன.

இரு விருதுகளும் தலா, 10 ஆயிரம் பவுண்டுகள் (ஏழரை லட்ச ரூபாய்) ரொக்கப் பரிசு கொண்டவை.லண்டனில் இருந்து வெளிவரும், "தி டெய்லி டெலிகிராப்' பத்திரிகை, இந்தாண்டுக்கான, 40 வயதுக்கும் குறைந்த 20 நாவலாசிரியர்களுள் ஒருவராக அஞ்சலியை தேர்ந்தெடுத்துள்ளது. தற்போது, பாரிஸ், லண்டன் மற்றும் மும்பையில் நடக்கும் கதை ஒன்றை மையமாகக் கொண்டு, தன் இரண்டாவது நாவலை எழுதி வருகிறார் அஞ்சலி.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!