கொழும்பு : இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி.,) தனது பணியாளர்களுக்கு கூட, சம்பளம் தர வழியில்லாமல் பெரும் நிதிச்சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. இந்தியா, வங்கதேசத்துடன் இணைந்து இலங்கையும், சமீபத்தில் முடிந்த உலக கோப்பை தொடரை நடத்தின. இதற்காக இலங்கையில் அம்பாந்தோட்டை பகுதியில் புதிய மைதானம் கட்டியது மற்றும் கொழும்பு, கண்டியில் இரண்டு மைதானங்களை புதுப்பிப்பதற்காக, 14 கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டது. ஆனால், திட்டமிட்டதை விட அதிகளவு செலவு ஏற்பட்டது.
இப்போது இதைச் சரிசெய்ய இலங்கை அரசு, அங்குள்ள வங்கிகளை எஸ்.எல்.சி., அணுகியுள்ளது. இதுகுறித்து எஸ்.எல்.சி., பொருளாளர் சுஜீவா ராஜபக்சே கூறுகையில், இலங்கையின் மிகப்பெரிய விளையாட்டு அமைப்பு, நிதிச்சிக்கலில் சிக்கித் தவிப்பது உண்மை தான். இதற்காக அரசு மற்றும் வங்கிகளை உதவி செய்யுமாறு கேட்டுள்ளோம்,என்றார்.
இலங்கையில் இருந்து வெளியாகும் "டெய்லி மிரர்' என்ற பத்திரிகையில், தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு, சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலையில் எஸ்.எல்.சி., உள்ளது. இந்த சிக்கலில் இருந்து எஸ்.எல்.சி.,யை காப்பாற்ற, ரூ. 8 கோடி வரை கொடுக்க இலங்கை அரசு முன்வந்துள்ளது,'' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சி., செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில், மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படும் எண்ணிக்கைக்கு ஏற்பத்தான், கட்டணம் வழங்கப்படும். மைதானம் கட்டுவதற்கு ஆகும் செலவுகள் குறித்தெல்லாம், ஒப்பந்தம் எதுவும் இல்லை,'' என்றார்.
0 comments :
Post a Comment