கொழும்பு : இந்திய வெளியுறவு அமைச்சகம், "டிரேசிங் த ரூட்' என்ற பெயரில், இலங்கை வாழ் தமிழர்களின் பூர்வீகத்தை கண்டுபிடித்து தரும் பணியை துவக்கியுள்ளது.
இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், "இந்தியாவில் பூர்வீகத்தை அறிந்து கொள்ள விரும்பும் இலங்கை வாழ் தமிழ் மக்கள், கொழும்பில் உள்ள இந்திய தூதரகம், யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பன்தோட்டாவில் உள்ள இந்திய துணை தூதரகம், கண்டி நகரில் உள்ள துணை ஹை கமிஷன் அலுவலகம் ஆகியவற்றில் விண்ணப்பிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த 2008ம் ஆண்டில் துவங்கப்பட்டது.
விண்ணப்பத்திற்கான கட்டணத் தொகை 72 ஆயிரத்து 480 ரூபாய். விண்ணப்பிக்கும் போதே கட்டணத்தொகையை செலுத்திவிட வேண்டும். விண்ணப்பதாரரின் பூர்வீகத்தை கண்டுபிடிக்க முடியாவிட்டால், கட்டணத்தில், 48 ஆயிரத்து 320 ரூபாய் திரும்ப வழங்கப்படும்.
இலங்கையில், கடந்த 1981ம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அந்நாட்டு மொத்த மக்கள் தொகையில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் 5.5 சதவீதம், இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள் 12.7 சதவீதம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மத்தியில் உள்ள மலைப்பகுதிகளில் அதிகளவில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பலர், அரசியல், வர்த்தகம், விளையாட்டு ஆகிய துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். உதாரணத்திற்கு, விளையாட்டுத் துறையில், இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள விக்கெட்கீப்பர் முத்தையா முரளிதரனை கூறலாம்.
0 comments :
Post a Comment