Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, June 16, 2011

முதல்வரை திருப்தி படுத்த கட்டவுட், அதிர்ச்சியில் பொது மக்கள்

நேற்று முன்தினம் டில்லியில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்று, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பிலும், செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் செந்தமிழன் சார்பிலும், சென்னை விமான நிலையம் முதல், அண்ணா சாலை வரை பிரமாண்டமான வரவேற்பு பேனர்கள், கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

கிண்டி கத்திப்பாராவில் இருந்து சைதாப்பேட்டை வரையில், சாலையின் மீடியனிலும், ஓரங்களிலும் வட்டம், நீள்வட்டம், சதுரம், செவ்வகம், டைமன்ட் என பல அளவுகளில், பிரமாண்ட பேனர்கள் இடம் பெற்றிருந்தன.

இவை, முதல்வரை திருப்திபடுத்துவதற்காக சைதாப்பேட்டை எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான செந்தமிழனால் வைக்கப்பட்டவை. இந்த பேனர்களை நிலை நிறுத்த கட்டப்பட்டிருந்த சாரங்கள், சாலையை மறித்த நிலையில் இருந்ததால், வாகன போக்குவரத்தில் பெரும் இடையூறு ஏற்பட்டது.

இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்தித்தனர். ஏற்கனவே மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடந்து வருவதால், சென்னை விமான நிலையம் துவங்கி, தொடர்ச்சியாக கடும் நெரிசல் நிலவி வரும் நிலையில், முதல்வரை வரவேற்று வைத்த பேனரால் மேலும் நெரிசல் அதிகமானது. இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!