Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, June 21, 2011

இந்நாள், முன்னாள், துணை முதல்வர் தேர்தல் சிலவு கணக்கு!!

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது தேர்தல் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளனர். சட்டசபைத் தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.16 லட்சம் வரை செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது.

ஆனால் முதல்வர் ஜெயலலிதா, ரூ.9.5லட்சமும், திமுக தலைவர் கருணாநிதி ரூ.4.47 லட்சம் மட்டுமே செலவு செய்ததாக கணக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா பொதுக் கூட்டங்களுக்காக-ரூ.20,650 துண்டுப் பிரசுரங்கள், போஸ்டர்கள், பிரச்சார வீடியோ-ஆடியோ செலவு-ரூ.14,170 டிவி, ரேடியோ, பத்திரிக்கை விளம்பரம்-ரூ.58,300 வாகன செலவு-ரூ.65,700 அலங்காரங்கள் மற்றும் பேனர்கள்-ரூ.32,300 செலவு செய்துள்ளார்

முன்னாள் முதல்வர் கருணாநிதி தேர்தலுக்காக ரூ.4,47,615 மட்டுமே செலவு செய்துள்ளதாகவும், இதில் வாகனங்களுக்கு மட்டும் ரூ.2 லட்சம் செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் வெறும் ரூ 3.32 லட்சம் மட்டுமே தேர்தலுக்காக செலவிட்டதாகவும், இதில் பொதுக் கூட்டங்களுக்காக ரூ.66,700ம் கட்அவுட்டுகள், பேனர்கள், அலங்கார வளைவுகளுக்காக வெறும் ரூ.980ம் செலவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தலுக்காக ரூ.7.97 லட்சம் செலவு செய்துள்ளதாகவும், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ரூ.4.04 லட்சமும் செலவு செய்துள்ளதாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர்., மேலும் தேர்தல் ஆணைய வட்டாரத் தகவலின்படி 223 வேட்பாளர்கள் இதுவரை தங்கள் செலவுக்கணக்கை தாக்கல் செய்யவில்லை. அவர்கள் மீது 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!