Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, June 15, 2011

ஈழ விடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரிட்டானியா அமைச்சர்!!

லண்டன் : இலங்கையில் சிறை வைக்கப்பட்ட தமிழர்கள் மீது, சிங்கள ராணுவ வீரர்கள் நடத்திய பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட போர்க்குற்றங்கள் அடங்கிய, "இலங்கையின் போர்க் களங்கள்' என்ற புதிய வீடியோவை, பிரிட்டனின் "சேனல் 4' நேற்று முன்தினம் வெளியிட்டது. இதையடுத்து, "போர்க்குற்றம் பற்றி இலங்கை விசாரிக்க வேண்டும் அல்லது சர்வதேச நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக வேண்டும்' என, பிரிட்டன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில், கடந்த 2009ல் ஏப்ரல், மே மாதங்களில், விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையில் நடந்த இறுதிக்கட்டப் போரில், இருதரப்பும் பல்வேறு போர்க் குற்றங்களை செய்துள்ளதாக சமீபத்தில் ஐ.நா., வெளியிட்ட அறிக்கை கூறியுள்ளது. சிங்கள ராணுவத்தின் அட்டூழியத்துக்கு ஆதாரமாக பிரிட்டனில் செயல்படும் "சேனல் 4' செய்தி நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட 4 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோ காட்சியை சுட்டிக் காட்டியிருந்தது. அந்த வீடியோவில், நிர்வாணமாக நிற்கும் தமிழ் ஆண், பெண்களை ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தும் காட்சி இடம் பெற்றிருந்தது. இலங்கை அரசு தரப்பில் அந்த வீடியோ போலியானது என்று மறுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் "சேனல் 4' செய்தி நிறுவனம் 50 நிமிடங்கள் ஓடக்கூடிய புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

"இலங்கையின் போர்க் களங்கள்' என்ற பெயரிலான இந்த வீடியோவில், சிறைப்பட்ட தமிழர்களை ராணுவத்தின் சுட்டுக் கொல்லுதல், ராணுவத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களின் சடலங்கள் நிர்வாணமாகக் கிடத்தல், பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கப்பட்ட இடத்தில் செயல்பட்ட மருத்துவமனைகள் மீது சிங்கள ராணுவம் குண்டுமழை பொழிந்ததை நேரில் கண்டவர்களின் சாட்சியங்கள், ஒரு பெண் உட்பட மூன்று பேரை ஒன்றாகக் கட்டி, அவர்களின் தலைகளில் சுட்டுக் கொல்லுதல் போன்ற கொடூரக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த வீடியோ குறித்து பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் அலிஸ்டெய்ர் பர்ட் கூறியதாவது, இந்த வீடியோவை பார்த்து நான் அதிர்ந்து விட்டேன். சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மீறப்பட்டதற்கு இது ஒரு உறுதியான ஆதாரம். இதுகுறித்து இலங்கை நடவடிக்கை எடுப்பதற்கு, சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து அந்நாட்டு அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்கு, பிரிட்டன் தயாராக உள்ளது. போர்க்குற்றம் குறித்து இலங்கை உடனடியாக விசாரிக்க வேண்டும். இல்லையென்றால், அந்நாட்டு எதிரான சர்வதேச நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக வேண்டும். இவ்வாறு பர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

## பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை ஐக்கிய நாடுகள் சபை போர் குற்றவாளி என்று அடையாளம் காட்டியுள்ள இந்த வேளையில், தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதகம் விளைவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்., இப்போதைய தீர்வு.

1 comments :

தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதகம் விளைவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்., இப்போதைய தீர்வு.all tamilars hope

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!