Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, August 21, 2011

செல்போன் மூலம் சேவை வங்கிகளில்

கோயம்பேடு : கரூர் வைஸ்யா வங்கியில் இருந்து மற்ற வங்கிகளுக்கு, பண பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து வங்கி சேவைகளையும், மொபைல்போன் மூலம் செயல்படுத்தும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது'' என, கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன் பேசினார்.

கரூர் வைஸ்யா வங்கியில் ஆண்டுக்கணக்கில் வாடிக்கையாளராக இருந்து வரும் மர வியாபாரிகளின் சந்திப்பு நிகழ்ச்சி, நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து மரங்களை இறக்குமதி செய்து வியாபாரம் செய்யும் அதிபர்கள், மொத்த மர வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் உள்ளிட்ட பலதரப்பிலும் இருந்தும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். குறிப்பாக வங்கி சேவையில் மர வியாபாரிகளின் எதிர்பார்ப்புகளையும், அவர்களது கோரிக்கைகளையும் அலசும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன் பேசியதாவது; எங்களது வங்கியின் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களாக நீங்கள் இருப்பது சிறப்பு. உங்களது வளர்ச்சியில் வங்கியின் பங்கு உள்ளது. இதே போல, எங்களது வளர்ச்சியில் உங்களது பங்கும் உள்ளது. மர வியாபாரிகளுடான சந்திப்பு நான்கு வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இனி, ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும்.மர வியாபாரிகளின் மூலம் மொத்தத்தில் 600 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு சென்னை மர வியாபாரிகளின் பங்கு உள்ளது. இந்த வகையில், உங்களை 40 ஆண்டுகளாக தக்க வைத்திருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

மொத்தம் 372 வங்கி கிளைகள் உள்ள நிலையில், மேலும் 70 கிளைகள் திறக்கவுள்ளோம். வங்கியின் மொபைல்போன் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான விருது, சிறந்த வங்கிக்கான விருது என இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளோம். கரூர் வைஸ்யா வங்கியில் இருந்து மற்ற வங்கிகளுக்கு பண பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து வங்கி சேவைகளையும் மொபைல்போன் மூலம் செயல்படுத்தும் திட்டம் சோதனை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு வெங்கட்ராமன் பேசினார்.

வங்கியின் பொது மேலாளர் சுகுமார், துணை பொது மேலாளர் பாலாஜி, சென்னை மண்டல துணை பொது மேலாளர் சங்கரவடிவேல், சென்னை மண்டல உதவி பொது மேலாளர் ராமலிங்கம் உள்ளிட்டோர் வங்கியின் வளர்ச்சி குறித்தும், அதில் மர வியாபாரிகளின் பங்கு குறித்தும் பேசினர். இறுதியாக மர வியாபாரிகளுடன் வங்கி நிர்வாகத்தினர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதற்கான தீர்வுகளையும் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன் விளக்கினார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!