சென்னை : நான் சுவிஸ் வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாய் வைத்திருப்பதாக வந்த செய்தி குறித்து, கோர்ட்டில் வழக்கு தொடர ஆலோசித்து வருகிறேன். சமச்சீர் கல்வி தொடர்பான தீர்ப்பு தமிழர்களுக்கு கிடைத்த தீர்ப்பு, ஆரிய வந்தேறிகளுக்கு ஆப்பு !? என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று அளித்த பேட்டி : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எப்படியிருந்தாலும், அதை அப்படியே நிறைவேற்றுவேன் என முதல்வர், பேரவையில் அறிவித்துள்ளாரே. அதை நிறைவேற்றுவாரா? தொடர்ந்து கவனிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.
புதிய தலைமைச் செயலகம் கட்டியது குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதே? புதிய கட்டடத்தில்தான் கவர்னர் உரை, பட்ஜெட் உரையும் நடந்துள்ளது. அமைச்சர்கள் தாராளமாக உட்கார்ந்து பத்து கூட்டங்களுக்கு மேல் நடத்தியுள்ளனர். அத்தகைய இடம் போதுமானதாக இல்லை, வசதியானதல்ல என ஒரு பொய்யைக்கூறி, அதைப் புறக்கணிப்பது ஜெயலலிதா அரசை பொறுத்தவரை, சமச்சீர் கல்வியைப் புறக்கணித்தது போலத்தான்.
தமிழக அரசின் செயல்பாட்டால் மாணவர்களின் 100 நாட்கள் படிப்பு கெட்டுப்போயுள்ளதே. அந்த 100 நாள்கள் இழப்பை எப்படி சரிகட்டலாம்?,கல்வியாளர்களையும், குறிப்பாக பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகளையும் கலந்து, மாணவர்களுக்கு ஏற்பட்ட இடைக்கால இழப்பை எப்படி சரிசெய்வது என முடிவெடுக்க அரசு முன்வரவேண்டும்., இவ்வாறு கருணாநிதி கூறினார்.
1 comments :
இவங்களுக்கு வேற வேலை இல்லையா? அரசியலை விடு..கல்வியிலும் பிரச்சனையா
Post a Comment