வாஷிங்டன் : அமெரிக்காவில் பல்வேறு பிரிவு பட்டப்படிப்புகளுக்கு படிப்பதற்காக வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தகவல்வெளியிட்டுள்ளது. எனினும் சீனா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
அமெரிக்காவில் சி.ஜி.எஸ் எனப்படும் பட்டப்படிப்பு தொடர்பான கல்லூரிக்கு இந்தியா மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இந்நிலையில் சி.ஜி.எஸ். பட்டப்படிப்பு கல்வி நிறுவனத்தின் தலைவர் திப்ரா டபிள்யூ. ஸ்டீவார்ட் கூறுகையில், சி.ஜி.எஸ். பட்டப்படிப்பு கல்லூரிக்கு சர்வதேச நாடுகளிலிருந்து மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா, சீனா, தென்கொரியா நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர். கடந்த 2006-ம் ஆண்டிலிருந்து இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கடந்த 20010-2011-ம் ஆண்டுகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை 11 சதவீதமாக உள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் கணக்கிடும் போது 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனினும் சீன மாணவர்கள் எண்ணிக்கை 23 சதவீதமாக உள்ளது. இவர்கள் தான் தொடர்ந்து முதலிடம் வகிக்கி்ன்றனர். இந்த கல்லூரியில் வர்த்தகம், மேலான்மை படிப்புகளை தான் மாணவர்கள் விரும்பி தேர்வு செய்கின்றனர். வர்த்தகம் (பிஸினஸ்) தொடர்பான படிப்புகளை 16 சதவீத மாணவர்களும், புவி அறிவியல் (ஈர்த் சயின்ஸ்) தொடர்பான படிப்புகளை 15 சதவீத மாணவர்களும், சமூக அறிவியில் (சோஸியல் சைன்ஸ்) படிப்புகளை 3 சதவீத மாணவர்களும் தேர்வு செய்து படிக்கின்றனர் என்றார்.
0 comments :
Post a Comment