உங்களுக்கு நீச்சல் தெரியுமா? என்று கேட்டால், நம்மில் பலர் தேமே என்று விழிப்பார்கள். கிராமப்புற மக்களின் வாழ்வியலோடு ஒன்றாக கலந்துவிட்ட நீச்சல், நகர்புறங்களில் நீச்சல் குளம் கொண்ட மிகப்பெரிய பங்களாக்கள், பண்ணை வீடுகளில் வசிக்கும் மேல் தட்டு மக்களுக்கு உரிய ஒன்றாகத்தான் இருந்து வருகிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், தண்ணீரில் அடிக்கடி நீந்துவதன் மூலம் மருத்துவ ரீதியான பல்வேறு பலன்களையும் நாம் பெறலாம். அவை...
* முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது நீச்சல்.
* இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் நீச்சல் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்.
* நீச்சலின்போது நீரானது உடலுக்கு தேவையான இயற்கை தடுப்பு ஆற்றலாகப் பயன்படுகிறது.
* உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன.
* மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற உள்ளக் கோளாறுகள் நீங்குகின்றன. நீந்தும்போது மனச் சிதறல் நீங்கி, மனம் ஒருநிலை அடைகிறது.
* உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.
* கை, கால், தொடைப் பகுதி தசைகள் அதிக சக்தி பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்குகிறது.
* தொடர்ச்சியான இடுப்பு வலி உள்ளவர்களுக்கு அது குறைவதுடன், முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுகின்றன.
* கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்றவை நீங்குகிறது.
* செரிமான சக்தியைத் தூண்டுகிறது. அஜீரணக் கோளாறைப் போக்குகிறது. நன்கு பசியைத் தூண்டச் செய்கிறது. மலச்சிக்கல் பிரச்சினையும் நீங்குகிறது.
* மிக முக்கியமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு நீச்சல் அருமருந்தாகும். அதனால் நீங்களும் உடலுக்கும், உள்ளத்திற்கும் பயன்தரும் நீச்சல் பயிற்சியை இன்றே கற்று ஆரோக்கியமான வாழ்க்கை வாழப் பழகுங்கள்.
1 comments :
unmai neenthum poothu ithai unaikiren.. vaalththukkal
Post a Comment