மண்ணில் பிறக்கையில் எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான். அது நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அதன் அன்னை வளர்ப்பதிலே என்று ஒரு பாடல் உண்டு. இது ஒருபுறம் இருக்க, கருவில் இருக்கும்போதே ஒரு குழந்தையை அறிவாளி ஆக்கிவிடலாம் என்று கண்டறிந்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணைந்துதான் ஒரு உயிர் உருவாகிறது. இருந்தாலும், அந்த உயிர் தாயின் கருப்பையில்தான் வளர்கிறது. இதன்மூலம், அந்த குழந்தைக்கும், அந்த தாய்க்கும் இடையேயான பாசப் பிணைப்பு அந்த உயிர் உருவாகும்போதே ஏற்பட்டு விடுகிறது.
சுமார் 10 மாதங்கள் தாயின் கருப்பையிலேயே அந்த உயிர் வளர்ந்து குழந்தையாகிறது. அந்த 10 மாத காலத்தில், கருவுற்ற பெண் அறிவுப்பூர்வமான விஷயங்களை அதிகம் படிப்பதாலும், பேசுவதாலும் மற்றும் மன மகிழ்ச்சியாக இருப்பதாலும், பிறக்கப்போகும் குழந்தையை அறிவுள்ள குழந்தையாக மாற்ற முடியும் என்று கண்டறிந்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது என்ன எண்ணுகிறாளோ, அதைப் பொறுத்துதான் குழந்தையும் உருவாகிறது. அதனால், தாயானவள் நிறைய விஷயங்களை அந்த கர்ப்பக் காலத்தில் கற்றுக்கொண்டால், அவளுக்கு பிறக்கும் குழந்தையும் அறிவுப்பூர்வமானதாக பிறக்கும் என்றனர்.
0 comments :
Post a Comment