Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, August 8, 2011

காயம் காரணமாக கட்டாய ஓய்வு! ஜாகிர் !!

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான். ஆக்ரோஷமாக பவுலரான இவர் அடிக்கடி காயத்தால் அவதிப்படுகிறார். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் காயம் காரணமாக விலகியுள்ளார். இது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் 13 ஓவர் வீசி இருந்த நிலையில் இடது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதில் இருந்து அவரால் மீள முடியாததால் தற்போது தொடர் முழுவதும் விலகியுள்ளார். உடல் தகுதி குறித்த அக்கறையின்மையால் அவர் அடிக்கடி காயத்தால் சிக்குகிறார்.

முன்னணி பவுலரான அவர் தனது உடல் தகுதி குறித்து கவலைப்படாமல் இருப்பது ஆச்சரியமானது.12 ஆண்டு கால தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஜாகீர்கான் பலமுறை காயத்தால் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் குதிங்காலில் ஏற்பட்ட காயத்தால் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து பாதியில் விலகினார். 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக போட்டியில் ஆடவில்லை.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் காயத்தால் விலகினார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் தசைப்பிடிப்பால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடவில்லை. இந்த ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு ஐ.பி.எல். போட்டியில் விளையாடினார்.

அதில் ஏற்பட்ட காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடவில்லை. முழு உடல் தகுதி பெறாமலேயே தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பெற்றார். ஒரு இன்னிங்சில் கூட அவரால் முழுமையாக பந்து வீச முடியாமல் போனது ஏமாற்றமே. பொதுவாக வேகப்பந்து வீரர்கள் காயப்படுவது தவிர்க்க முடியாது.

துள்ளி குதித்து பந்துவீசும் போது கணுகாலில் காயம் ஏற்படுவது சகஜமானது. பெர்ட்லீ, மெக்ராத் போன்ற வீரர்கள் இதே மாதிரி காயம் அடைந்து இருக்கிறார்கள். ஆனால் சரியான உடற்பயிற்சி இருந்தால் இது மாதிரியான காயத்தை தவிர்க்கலாம்.

ஏற்கனவே பரிதாப நிலையில் இருக்கும் இந்திய அணிக்கு ஜாகீர்கான் தொடர்ந்து ஆடாதது மிகப்பெரிய இழப்பாகும். 32 வயதான ஜாகீர்கான் 79 டெஸ்டில் விளையாடி 273 விக்கெட்டும், 191 ஒருநாள் போட்டியில் விளையாடி 273 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!