Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, August 12, 2011

ஐ டி யை தொடர்ந்து இந்தியாவில் முதன்மை பெரும் பெங்களூர் !

பெங்களூர் : வீடியோ கான்பரன்சிங் மூலம், மருத்துவ ஆலோசனைகளை அளிப்பதில், பெங்களூரு நகரம், நாட்டின் மற்ற நகரங்களை விட, முன்னோடியாக உள்ளது' என, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் பிரபலமான, "கேபிள் மற்றும் ஒயர்லெஸ் வேர்ல்டுவைடு' என்ற தொலைத் தொடர்பு நிறுவனம், வீடியோ கான்பரன்சிங் மற்றும் தகவல் தொடர்பு மூலமாக, மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் நகரங்கள் குறித்த ஆய்வை நடத்தியது. இதில், சர்வதேச அளவில் சிறப்பாகச் செயல்படும் நகரங்களின் பட்டியலில்,பெங்களூரு இடம் பிடித்துள்ளது.

மிகத் தீவிரமான நோய்களைத் தவிர, சாதாரண நோய்களுக்கு, நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை பெறுவதை விட, வீடியோ கான்பரன்சிங் மற்றும் தகவல் தொடர்பு மூலமாகவே, மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று, அதன் வாயிலாக சிகிச்சை பெறுவதையே, 54 சதவீத இந்தியர்கள் விரும்புகின்றனர்' என்றும், ஆய்வில் கூறப்பட்டுள்ளது.பெங்களூரு நாராயணா ஹிருதாலயா மருத்துவமனையின், டெலிமெடிசின் பிரிவு தலைவர் டாக்டர் அபய் சிங்கவி இதுபற்றி கூறுகையில், தற்போது, நேரடியாக மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை, கணிசமாகக் குறைந்து விட்டது.வீடியோ கான்பரன்சிங் மூலம், தங்களுக்கு உள்ள பிரச்னைகளை விளக்கி, அதன் வாயிலாக சிகிச்சை பெறுவதையே, பெரும்பாலானோர் விரும்புகின்றனர்'' என்றார்.

பெங்களூர் மனிபால் ஹெல்த் என்டர்பிரைசஸ் தலைவர் டாக்டர் நாகேந்திர ஸ்வாமி கூறுகையில், எங்களுக்கு நாட்டின் பல நகரங்களில், 15 மருத்துவமனைகள் உள்ளன. இதுதவிர, காத்மாண்டுவிலும் ஒரு மருத்துவமனை உள்ளது.வீடியோ கான்பரன்சிங் மூலம் சிகிச்சை பெற, சிறப்பு மருத்துவர்கள், ஒரே இடத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும், நோயாளிகள், சிறப்பு மருத்துவர்களை தொடர்பு கொண்டு, தங்களுக்குத் தேவையான ஆலோசனைகளைப் பெற முடியும் என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!