ஹூஸ்டன் : பெரும்பான்மையான அமெரிக்கர்கள், இந்தியா மற்றும் சீன கார் தயாரிப்பு நிறுவனங்களின் கார்களை வாங்க விரும்பவில்லை என, சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சீனாவின் பி.ஒய்.டி., செரி மற்றும் இந்தியாவின் மகிந்திரா போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள், விரைவில் அமெரிக்காவில் தங்கள் தொழிற்சாலைகளைத் துவக்க இருப்பதாகக் கூறி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் "ஜி,எப்.கே., ஆட்டோமோடிவ்' குழுமம், கார்கள் பற்றி மக்களிடையே பரவியுள்ள விழிப்புணர்வு குறித்து, ஓர் ஆய்வு நடத்தியது. அதில், 95 சதவீதம் பேர் அமெரிக்க கார் நிறுவனத் தயாரிப்புகளையும், 76 சதவீதம் பேர் ஜெர்மனி கார்களையும், 75 சதவீதம் பேர் ஜப்பான் கார்களையும், 49 சதவீதம் பேர் கொரிய கார்களையும் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், 38 சதவீதம் பேர் சீன கார்களையும், 30 சதவீதம் பேர் இந்திய கார்களையும் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் சீன, இந்திய கார் தயாரிப்பு நிறுவனங்கள், அமெரிக்க மக்களிடம் நம்பகத் தன்மை பெறுவதற்கு, கடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என, அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment