நியூயார்க் : அமெரிக்காவில் மாபெரும் மருத்துவ காப்பீட்டு மோசடியில் ஈடுபட்ட 19 அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாபுபாய் படேல் (49) என்ற அமெரிக்க வாழ் இந்தியர் அங்கு மருந்தாளுநர் ஆக உள்ளார். அமெரிக்கா முழுவதும் பல பினாமி பெயர்களில் 26 மருந்துக் கடைகளை அவர் நடத்தி வருகிறார்., மேலும், ஏராளமான மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்து, மருந்துகளை கட்டாயமாக தனது கடைகளில் வாங்க வற்புறுத்தியுள்ளார்.
மெடிகேர், மெடிக்எய்ட் மற்றும் தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களின் அட்டைகளை வைத்திருப்பவர்கள், காப்பீட்டு திட்டத்தில் பணத்தை பெற பாபுபாய் படேல் நடத்தும் மருந்து கடைகளில்தான் வாங்க வேண்டும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு டாக்டர்களும், மருத்துவமனைகளும் பாபுபாய் படேலுக்கு உடந்தையாக இருந்துள்ளதாக தெரிகிறது.
மேலும் நோயாளிகளுக்கு தாங்களே மருந்துகளைத் தரும் சில மருத்துவமனைகள், அதற்கான பில்களை பாபுபாய் படேலின் நடத்தும் மருந்துக் கடைகளின் பெயரில் தயாரித்துள்ளன., மிக்சிகன் மாகாணத்தில்தான் இந்த மோசடி பெரிய அளவில் நடந்துள்ளது. மன அழுத்தத்தைப் போக்கும் மருந்துகள், போதை பொருள் அடங்கிய வலி நிவாரணிகள் போன்ற மருந்துகளை, மருத்துவர்களின் பரிந்துறையின்றி பாபுபாய் படேல் நடத்தும பார்மஸிகள் விற்பனை செய்துள்ளன.
இதற்காக பல முக்கிய மருத்துவமனைகள், மனநல மருத்துவர்கள் லஞ்மாக பணம், பரிசுப் பொருள்களை பாபுபாய் படேல் கொடுத்துள்ளார்., இது போன்ற முறைகளில் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பணத்தை அவர்கள் சுருட்டியுள்ளனர். மோசடியின் முக்கிய புள்ளியான பாபுபாய் படேல் மீது 34 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் இவர்கள் மோசடியில் ஈடுபட்டு பல லட்சம் ரூபாயை சுருட்டியுள்ளனர்.
இந்த வழக்கில் 26 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 19 பேர் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ஆவார்கள். தினேஷ்குமார் படேல், அனிஷ் பவ்சார்,அஸ்வினி சர்மா,பினாகின் படேல், கார்த்திக் ஷா உள்ளிட்ட மருந்தாளுநர்களும், பால் பெட்டார் போன்ற பிரபல டாக்டர்களும், உளவியல் நிபுணர்கள் சன்யானி எட்வர்ட்ஸ் போன்றவர்களும் அடங்குவர்.
0 comments :
Post a Comment