வேலாயுதம்" படம் பற்றியும், இசை வெளியீட்டு விழா குறித்தும், ரசிகர்களுக்கு விஜய் அளித்து பேட்டியில் கூறியிருப்பதாவது, நான் ரொம்ப நாளாக எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிற படம் "வேலாயுதம்". இப்படத்தை ரசிகர்களை கொண்டுதான் ஆரம்பித்தோம்.
அதுபோல் ஆடியோ ரிலீசையும் ரசிகர்கள் முன்னிலையில் நடத்த விரும்பினோம். அதற்காக நானும் தயாரிப்பாளர், டைரக்டர் ராஜா எல்லாரும் யோசித்தோம். ரசிகர்கள் மத்தியில் என்கிறபோது சரியான இடம் தேவை. எனக்கு எல்லாமே ரசிகர்களாகிய நீங்கள் தான். என் எல்லா காரியங்களிலும் நீங்கள் தான் கூட இருக்க வேண்டும். உங்கள் முன்னாடி தான் வேலாயுதம் ஆடியோ ரிலீஸ் நடக்க வேண்டும். அப்படி யோசித்த போதுதான் வேலாயுதம் ஆடியோவை மதுரையில் ரிலீஸ் செய்ய முடிவு செய்தோம். நாளை 28ம் தேதி இந்த நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.
இந்த படத்தைபற்றி கேட்டால், எல்லா நடிகர்களுக்கும் சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் நடிக்க வேண்டும் என்று ஒரு கட்டத்தில் ஆசைப்படுவார்கள். அப்படி எனக்கும் ஆசை இருந்தது. அப்படிப்பட்ட ஒரு படம் தான் வேலாயுதம். ரசிகர்கள் எதிர்பார்க்கிற எல்லாமும் இந்தபடத்தில் இருக்கு.படத்தில் ஹீரோ செய்யும் ஒவ்வொரு செயலும் ரொம்பவும் லாஜிக்காக இருக்கும். வேலாயுதம் படத்தின் கதை பற்றி ராஜா சொல்ல வந்தபோது, படத்தின் கதைகேட்டு மிகவும் பிடித்து போனது. மேலும் படத்தில் அவர் சொன்ன கதை வலிமையாக இருந்ததால், உடன் நடிக்க ஒப்புக் கொண்டேன். படமும் ரொம்ப அழகாக வந்திருக்கிறது.
படத்தில் முக்கியமான விஷயம் ரயில் சண்டைக்காட்சி. இப்படிபட்ட சண்டைக்காட்சியில் நடிக்க ரொம்ப நாளா ஆசை. ஆனால் அதுவும் லாஜிக்காக இருக்க வேண்டும். இந்த ரயில் சண்டைக்காட்சிக்காக ஹாலிவுட் ஃபைட் மாஸ்டர் டாம்டேல்மரை வரவழைத்து சண்டைக்காட்சியை படமாக்கினோம். அதுஒரு புதிய அனுபவமாக இருந்தது. ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அடுத்தது படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை பற்றி சொல்ல வேண்டும். விஜய் ஆண்டனியை பற்றி எல்லோருக்கும் தெரியும். எங்களோட காம்பினேஷன் எப்படி இருந்தது என்று வேட்டைக்காரன் படத்திலேயே தெரியும். அதேபோல் வேலாயுதமும், வேட்டைக்காரனை காட்டிலும் பலமடங்கு வெற்றி பெறும். அவரிடம் எனக்கு பிடித்தது என்ன தெரியுமா...? படத்தில் ஐந்தாறு பாட்டு இருந்தாலும், எல்லாவற்றிலும் மெலடி மிஸ் ஆகாது. குத்துப்பாட்டு, நாட்டுப்புறப்பாட்டு, வெஸ்டர்ன் என எல்லாவற்றிலும் சுகமான அந்த இனிமை ஏதாவது இருக்கும். அதுதான் நீண்டகாலம் நிலைக்கும் என்கிற எண்ணம் அவருக்கு உண்டு.
ரசிகர்களிடம் உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், படத்தின் ஆடியோ வெளிவரும் முன்னே, இணையதளங்களில் வெளிவரலாம். தயவு செய்து யாரும் திருட்டி வி.சி.டி-யை ஆதரிக்க வேண்டாம். இது என்னுடைய படத்திற்கு மட்டுமல்ல, மற்ற எல்லா தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், நடிகர்கள் படத்துக்கும் தான்., மொத்தத்தில் "வேலாயுதம்" படம் ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை குறைக்காது, கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும் படியாக இருக்கும்.
1 comments :
Cini news good .vijay fans
Post a Comment