Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, August 12, 2011

யு எஸ் பொருளாதார நிலையும் இந்திய ஐ டி துறையும் !

சென்னை, ஆக. 12 : அமெரிக்காவில் 2008-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதில் இருந்து மீளவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அமெரிக்காவின் கடன் தரமதிப்பீடு குறியீடு திடீரென குறைந்துள்ளது. கடன் தரமதிப்பீடு இதற்கு முன்பு உயர்ந்த குறியீடான “ஏஏஏ” என்ற அளவில் இருந்தது. அது இப்போது “ஏஏ+” என்ற அளவில் குறைந்துள்ளது.

ஒரு நாட்டின் கடன் தரமதிப்பீடு அதிகமாக இருந்தால் தான் மற்ற நாடுகள் அந்த நாட்டின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும். ஆனால் இப்போது அமெரிக்காவில் கடன் தரமதிப்பீடு குறைந்து விட்டதால் வெளிநாட்டில் இருந்து வரும் கடன் பத்திர முதலீடு குறைந்து விடும். இதனால் அமெரிக்காவுக்கு கடும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அமெரிக்கா போராடி வருகிறது.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு இந்தியாவை தாக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே அமெரிக்க கடன் தரமதிப்பீடு குறைந்ததுமே இந்தியாவில் பங்குசந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் பல நிறுவனங்கள் நஷ்டங்களை சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில் இந்திய கம்ப்யூட்டர் துறைக்கும் கடும் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இந்தியாவில் கம்ப்யூட்டர் துறை முன்னணி தொழில் துறையாக உள்ளது. இந்த துறையில் மட்டும் 25 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதன்மூலம் இந்தியாவுக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. இந்திய உள்நாட்டு உற்பத்தியில் இதன் பங்கு 5.19 சதவீதம் ஆகும்.

ஆனால் கம்ப்யூட்டர் துறை வருமானம் பெரும் பகுதி அமெரிக்காவில் இருந்தே வருகிறது. “அவுட்சோர்சிங் பணிகள்”, சர்ப்ட்வேர் ஏற்றுமதி மூலம் இந்த வருமானங்கள் கிடைக்கிறது. இந்திய சாப்ட்வேர் ஏற்றுமதியில் 61.5 சதவீத வருமானம் அமெரிக்காவில் இருந்தே கிடைக்கிறது. அதாவது ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி சாப்ட்வேர் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதைதவிர பெருமளவு அவுட்சோர்சிங் பணிகளும் அமெரிக்கா நிறுவனங்களுக்கே செய்யப்படுகின்றன.

அமெரிக்க பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இந்த பணிகளில் பாதிப்பு ஏற்படலாம் என கருதப்படுகிறது. அமெரிக்காவில் தற்போது பலருக்கு வேலைவாய்ப்பு இல்லை. அங்கு 9.1 சதவீதம் பேர் வேலையில்லாமல் தவிப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. எனவே அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே வேலை கொடுக்க வேண்டும் என்ற கோஷம் எழுந்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் பணிகளை அவுட்சோர்சிங் முறையில் வெளிநாட்டில் கொடுப்பதற்கும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. எனவே அவுட்சோர்சிங் பணிகளை அமெரிக்கா குறைத்து கொண்டால் அது கம்ப்யூட்டர் துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும்.

சமீபத்தில் ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார பாதிப்பால் இந்திய கம்ப்யூட்டர் நிறுவனங்களின் பங்குகள் பெருமளவு சரிந்துள்ளன. இன்போசிஸ் நிறுவன பங்குகள் 4.73 சதவீதமும், டிசிஎஸ் பங்குகள் 4.49 சதவீதமும், விப்ரோ பங்குகள் 2.5 சதவீதமும் சரிந்துள்ளன. இதைபோல மற்ற நிறுவனங்களின் பங்குகளும் சரிந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் இந்த நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டம் உருவாகும். இது ஊழியர்களையும் பாதிக்கும் நிலை உருவாகலாம்.

ஆனால் அமெரிக்க பொருளாதார பாதிப்பு கம்ப்யூட்டர் துறைக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை என்று இந்திய கம்ப்யூட்டர் நிறுவன கூட்டமைப்பான “நாஸ்காம்” தெரிவித்துள்ளது.

2008-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது நாங்கள் அமெரிக்க நிறுவனங்களுடன் சில மாற்றங்களை உருவாக்கி கொண்டோம். எனவே எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு நாங்கள் சில திட்டங்களை உருவாக்கி இருக்கிறோம். இதனால் அச்சப்பட தேவையில்லை என்று நாஸ்காம் கூறியுள்ளது.

விப்ரோ நிறுவன தலைமை நிர்வாகி குரியன் கூறும்போதும், எந்தவித எதிர்விளைவு வந்தாலும் அதை தாங்கும் வகையில் இந்திய கம்ப்யூட்டர் துறைகள் உள்ளன. எனவே பெரிய பாதிப்புகள் ஏற்படாது என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!