Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, August 16, 2011

கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் பரிசோதித்து கொள்ள வேண்டிய ஒன்று?

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் எச்.ஐ.வி., பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் "நம் நலம், நம் கையில்' என்ற தலைப்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நாட்டுப்புற கலைநிகழ்ச்சி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் மீனா பிரியாதர்ஷினி துவக்கி வைத்தார். நெகமம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் பூங்கொடி வரவேற்றார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையத்தின் திட்ட அலுவலர் முகமதுஅலி பேசியதாவது: மாவட்டம் முழுவதும் 50 நாட்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. கடந்த மாதம் 28ம் தேதி விழிப்புணர்வு பிரசாரம் துவங்கப்பட்டு, பெரியநாயக்கன்பாளையம், அன்னூர், கோவில்பாளையம், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு பகுதிகளில் நிறைவடைந்துள்ளது.

பொள்ளாச்சியில் வரும் 21ம் தேதி வரையிலும் வடக்கு, தெற்கு, ஆனைமலை ஒன்றியங்களில் மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடக்கவுள்ளது. பாதுகாப்பற்ற முறையில் பலருடன் உடலுறவு கொள்வதாலும், பரிசோதிக்கப்படாத எச்.ஐ.வி., கிருமி உள்ள ரத்தம் பெறுவதாலும், சுத்திகரிக்கப்படாத ஊசிகளை பயன்படுத்துவதாலும் எய்ட்ஸ் பரவுகிறது. கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் எச்.ஐ.வி., பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

எச்.ஐ.வி., தொற்றுள்ளோருடன் விளையாடுவதாலும், அவர்களின் இருமல் தும்மல் மூலமும், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மூலமும், கொசுக்கடிகள் மூலமும் எய்ட்ஸ் பரவாது. அதனால், எச்.ஐ.வி., பாதிக்கப்பட்டோரை ஒதுக்கி துன்புறுத்த வேண் டாம். அவர்களை அரவணைத்து ஆறுதலாக இருக்க வேண்டும். பாதுகாப்பான உடலுறவு முறைகளை கையாண்டால் எய்ட்ஸ் பரவுவதை தவிர்க்க முடியும் என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!