புதுடெல்லி : டாடா மோட்டார்ஸ் மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனங்கள் பெட்ரோனெட் நிறுவனத்துடன் இணைந்து வாகனத்துக்கான திரவ இயற்கை எரிவாயு பயன்பாட்டை அறிமுகப்படுத்த உள்ளன.
இந்தியாவின் பெட்ரோனெட் எல்.என்.ஜி. லிமிடெட் (பி.எல்.எல்.) நிறுவனம்தான், வெளிநாடுகளில் இருந்து அதிகளவில், திரவ இயற்கை எரிவாயுவை (எல்.என்.ஜி) இறக்குமதி செய்து வருகிறது. வாகனங்களுக்கு மாற்று எரிபொருளாக இயற்கை எரிவாயு பயன்பாட்டை அறிமுகப்படுத்த பெட்ரோனெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
நாட்டில் தற்போது வாகனங்களில் சி.என்.ஜி. எனப்படும் அடர்த்தியான இயற்கை எரிவாயு, எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.இதற்கு மாற்றாகவே, திரவ இயற்கை எரிவாயுவை அறிமுகப்படுத்த மேற்கண்ட இரண்டு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன. இது சிக்கனமானதும், மிகவும் பாதுகாப்பானதும் ஆகும்.
திரவ இயற்கை எரிவாயு திட்டத்தை பெட்ரோனெட் எல்.என்.ஜி. நிறுவனத்தின் கூட்டு முயற்சியுடன், டாடா, அசோக் லேலண்ட் நிறுவனங்கள் விரைவில் செயல்படுத்த உள்ளன.
இதுபற்றி, பெட்ரோனெட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஏ.கே. பலியான் கூறியதாவது : திரவ இயற்கை எரிவாயுவை சில்லறையில் நேரடியாக பயன்படுத்திக் கொள்வதை தற்போதைய தொழில்நுட்பம் சுலபமாக்கி இருக்கிறது. திரவ இயற்கை எரிவாயு சில்லறை பயன்பாட்டை குஜராத் மாநிலத் தில் சோதனை ரீதியில் செயல்படுத்த டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட் ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான, முயற்சியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கான ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படும்.
இந்த ஆண்டுக்குள் சோதனை ரீதியில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துவிடும். திரவ இயற்கை எரிவாயுக்கான கருவிகளை வாங்க, இந்த கருவிகளை தயாரிக்கும் அமெரிக்காவின் “சார்ட்” என்ற நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
0 comments :
Post a Comment