சினிமாத் தொழில் நசிந்து வருவதற்கும் தியேட்டர்களில் முன்பு போல் கூட்டம் கூடாததற்கும் அங்கு வசூலிக்கப்படும் அடாவடியான டிக்கெட் கட்டணமே காரணம் என்பதுதான் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையில் பிரதானமாக இருக்கிறது.
மல்டிபிளக்ஸ் காம்ப்ளக்ஸ்களில் வசதி படைத்தவர்கள்தான் செல்ல முடியும் என்ற நிலை. சரி... சாதாரண, நடுத்தர வசதியுள்ள திரையரங்குகளுக்கோ, புறநகர்ப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளுக்கோ செல்லலாம் என்றால் அங்கு நடக்கும் கூத்து இதை விட பயங்கரமாகவுள்ளது.
ரூ.10, ரூ.15-க்கு டிக்கெட் கொடுப்பார்கள்; ஆனால் நம்மிடம் ரூ.50 முதல் ரூ.80 வரை வசூலித்துவிடுகிறார்கள். அதிலும் நட்சத்திர நடிகர்களின் படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம்; குறைந்த பட்சம் ரூ.100 முதல் ரூ.500 வரை கறந்துவிடுகிறார்கள். ஆனால் நமக்குத் தருவது ஒரு ரிசர்வேஷன் ஸ்லிப்பையோ அல்லது ரூ.15, ரூ.20 என அச்சிடப்பட்ட டிக்கெட்டையோதான்.,நமக்குத் தரும் அந்த ரூ.15, ரூ.20 டிக்கெட் கட்டணத்தின் அடிப்படையில்தான் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை அளிக்கிறார்கள். அதைத்தான் டி.சி.ஆர் எனப்படும் டெய்லி கலெக்ஷன் ரிப்போர்ட்டிலும் குறிப்பிடுகிறார்கள்.
அதிகமாக வசூலிக்கும் தொகையை தியேட்டர்காரர்கள் எடுத்துக்கொள்கிறார்களா? விநியோகஸ்தர்கள் எடுத்துக்கொள்கிறார்களா? அதில் தயாரிப்பாளர்களுக்குப் பங்கு இருக்கிறதா என்பதெல்லாம் சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் வெளிச்சம்., இப்படி திரையரங்குகளில் கொள்ளை நடக்கும்போது நடுத்தர மக்கள் திருட்டு வி.சி.டி. பக்கம்தான் செல்வார்கள்!
ஊரறிந்த இந்த ரகசியம் அரசுக்குத் தெரியாதா? சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்குத் தெரியாதா? என்பதுதான் பலருடைய கருத்து.,தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார்களா சினிமா நடிகர்கள் போல இந்த அதிகாரிகள்.
2 comments :
சினிமா சம்பந்தப்பட்ட அனைவரும் நடிப்பில் தேர்ந்தவர்களாகத்தானே இருக்கவேண்டும்? கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா?
மிகச் சரியான கேள்வி..இந்த டிக்கட் கொள்ளையை தடுக்க வேண்டும்.
Post a Comment