கலை வாரிசுகள் ஜெயிப்பதும் தோற்பதும் அவரவர் திறமையையும் அதிர்ஷ்டத்தையும் பொறுத்தது. ஆனால் இப்படி வருகிற எல்லாருமே தங்களுக்கு பாதை அமைத்துக் கொடுத்த மூத்தவர்களின் பாணியை பின் பற்றுவதே இல்லை. சொந்த சரக்கு மட்டுமே அவர்களின் முன்னேற்றத்திற்கு கை கொடுத்திருக்கிறது.
அப்படி ஒரு சொந்த சரக்காளராக வந்து சேர்ந்திருக்கிறார் அபிநய். இவர் காதல் மன்னன் ஜெமினி கணேசன், சாவித்ரியின் கலை வாரிசு. இவர் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படம்தான் வினை. இவர் ஏற்கனவே ஒரு தெலுங்கு படத்தில் அறிமுகமாகி நடித்திருக்கிறாராம். தமிழில் அவர் நடித்து வெளிவரப்போகும் முதல் படம் இந்த வினைதான்.
அடிப்படையில் இசைக்குழு வைத்திருக்கும் நால்வர் ஒரு பாடகியுடன் மலேசியா செல்கிறார்கள். சில தினங்களில் இந்த நால்வரும் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள். கொல்வது யார்? ஏன்? என்ற கேள்வியோடு விறுவிறுப்பாக நகருமாம் படம்.
இந்த படம் முழுக்க மலேசியாவில்தான் படமாக்கப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் இந்தியாவிலும் மலேசியாவிலும் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அபிநய்யை எப்படி தேர்ந்தெடுத்தார் டைரக்டர் பாலசுதன் என்றால் அதுவே பெரிய கதையாக இருக்கிறது.
ஒரு விறுவிறுப்பான கதையை தயார் செய்துவிட்டு சென்னைக்கு வந்திறங்கியவர், இங்குதான் ஹீரோ தேடும் படலத்தையே ஆரம்பித்தார். அப்போதுதான் சினிமா டைரி ஒன்றில் அபிநய்யின் புகைப்படத்தை பார்க்க நேர்ந்தது. பார்த்தவுடன் பிடித்துப் போகிற முகமாக இருந்ததால் உடனே அவரது செல்போனில் தொடர்பு கொண்டு வரவழைத்தாராம்.
வந்த பிறகுதான் தெரிந்ததாம் அவர்தான் காதல் மன்னன் ஜெமினியின் வாரிசு என்று. அப்புறமென்ன? பெருமையோடு அறிமுகப்படுத்தி விட்டார்கள் அவரை. தாத்தா பாட்டியின் ஆசி பேரனுக்கு கிடைக்குமல்லவா?
அபிநய்க்கு ஜோடியாக பிரதிக்ஷா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். சித்தார்த் யுவராஜ் இசையமைத்திருக்கிறார்கள். உரூஜ் புரடக்ஷன்ஸ் சார்பாக அப்துல் அஜீஸ் தயாரித்திருக்கிறார்.
0 comments :
Post a Comment