ரஷ்யாவின் உக்ளிக் நகரில், அடுத்த மாதம்(நவம்பர்) நான்கு நாட்கள் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில் தமிழ் படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.
அதில் சிவாஜி கணேசனின் "தில்லானா மோகனாம்பாள்" படத்தையும் திரையிடுகின்றனர். சிக்கல் சண்முகசுந்தரம் எனும் கேரக்டரில் நாதஸ்வர வித்வானாக சிவாஜியும், மோகனா எனும் கேரக்டரில், நாட்டிய பெண்ணாக பத்மினியும் நடித்து இருந்தனர். இவர்களுடன் பாலையா, தங்கவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் ஹிட்டானது.
அப்படத்தில் இடம்பெறும் “நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம் தானா”, “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” போன்ற பாடல்கள் இன்றும் காலத்தால் அழியாதவையாக இருக்கின்றன. இந்நிலையில் சிவாஜியின் பிறந்தநாளையொட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் இந்தபடம் திரையிடப்படுகிறது.
இந்தியா-சோவியத் வர்த்தக சபை இணைந்து நடந்தும் இத்திரைப்படவிழாவில், "தில்லானா மோகனாம்பாள்" படத்துடன் கோ, தென்மேற்கு பருவக்காற்று, பாஸ் என்ற பாஸ்கரன், அங்காடித்தெரு உள்ளட்ட படங்களும் திரையிடப்படுகின்றன.
1 comments :
no more sivaji or any one
Post a Comment