Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, October 8, 2011

மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்த ஜெயா! ஸ்டாலின் !!

திருச்சி : திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை, தி.மு.க.பொருளாளர் ஸ்டாலின் இன்று துவக்கினார்.

மாலை 04.30 மணியளவில், திருச்சி காஜாமலை காலனியில் பிரசாரத்தை துவக்கிய ஸ்டாலின், எம்.எல்.ஏ. வேட்பாளர் கே.என்.நேரு, மேயர் வேட்பாளர் விஜயா, கவுன்சிலர் வேட்பாளர் சித்ரா உள்ளிட்டோரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது, மாற்றம் வேண்டும் என்று அ.தி.மு.க.விற்கு ஓட்டளித்த தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தி.மு.க. வின் சாதனைத் திட்டங்கள் தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதென்றால், அ.தி.மு.க. அரசு கடந்த 5 மாதங்களில் ஒரு நல்ல திட்டத்தை கூட செயல்படுத்தவில்லை. அதற்கு மாறாக, தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை பொய் வழக்குகளின் மூலம் சிறையில் அடைத்து கட்சியினரை அச்சுறுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

திருச்சி மக்களுக்கு தற்போது நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. வரும் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து அ.தி.மு.க. அரசிற்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.

பரமக்குடியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு, அனைத்து கட்சிகளும் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டுக் கொண்டபோதும், அதற்குமாறாக, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான கமிஷனை அமைத்து கள்ள நாடகம் ஆடி வருகிறது. தி.மு.க. ஆட்சியில், ஒருபோதும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக எவ்வித தீங்கும் நடைபெறவில்லை என்பதை நான் உறுதியாகச் சொல்வேன்.

கோட்டையில் பணிபுரிய வேண்டிய அமைச்சர்கள் எல்லாம், தற்போது திருச்சியில் முகாமிட்டுள்ளனர். தற்போது இங்கு நடைபெறப் போவது சட்டசபை தேர்தல் இல்லை என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். இது தேர்தல் விதிமுறை மீறல்களுக்கு சமமானது என்று அவர் பேசினார். திருச்சி காஜாமலை காலனியில் பிரசாரத்தை துவக்கிய ஸ்டாலின், மேலபஞ்சப்பூடி, கீழபஞ்சப்பூடி, ராமச்சந்திரா நகர், எடமலைப்பட்டி புதூர், கருமண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். பின், அவர் நாகப்பட்டினம் செல்கிறார்.

சட்டசபை தேர்தலின் மூலம் மாற்றம் வேண்டும் விரும்பிய மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தார் ஜெயா! என்று திருச்சியில் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!