Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, October 29, 2011

எச்சரிக்கை இல்லாததால் இணையதளத்தில் பணம் இழப்பு

சென்னை, வடபழனி ராகவன் காலனியைச் சேர்ந்தவர் அஸ்வின்குமார்; டாக்டர். இவர், சமீபத்தில், கம்ப்யூட்டரில் இன்டர்நெட் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது, ஆன்-லைன் மூலம் பொருட்கள் விற்பனை செய்யும் வெப்சைட் ஒன்றைப் பார்த்துள்ளார்.

அதில், தற்போது விற்பனைக்கு வந்துள்ள "ஐபோன் எஸ்.4' நான்கை, 95 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம் என்று விளம்பரம் வந்தது. ஆன்-லைன் மூலம் அந்த போன்களை வாங்குவதற்கு, குறிப்பிட்ட வங்கிக் கணக்கில், 95 ஆயிரம் ரூபாய் பணத்தை அஸ்வின்குமார் செலுத்தியுள்ளார்.
ஆனால், பணம் போனதே தவிர, ஐ போன் கைக்கு வரவில்லை.

இது தொடர்பாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் அஸ்வின் குமார் புகார் அளித்தார். புகாரில், சுப்ரமணியம் மற்றும் கவுதம் ஆகியோர் தன்னை ஏமாற்றிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதே போல், கடந்த சில தினங்களுக்கு முன், ஒரு ஆன்-லைன் வர்த்தக இணையதளத்தில் பார்த்து, கேமரா ஒன்றிற்கு 15 ஆயிரம் ரூபாய் செலுத்தி, இன்னும் கேமரா வந்து சேரவில்லை என, மற்றொரு இளைஞர் புகார் அளித்துள்ளார்.

கிரெடிட், டெபிட் கார்டு மோசடியைத் தொடர்ந்து, புதியதொரு மோசடிக் கும்பல் தங்கள் கைவரிசையைக் காட்டத் துவங்கியுள்ளதாக, போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த புகார்கள் தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

எத்தனை முறை எச்சரித்து ஊடகங்களில் செய்தி வந்தாலும் இவர்களுக்கு விழிப்புணர்வு என்பது இல்லை படித்தவர்களையும் இந்த வலையில் மாட்டிக்கொள்ளுகிரார்கள்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!