Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, October 6, 2011

செய்த தவறை மீண்டும் செய்யாதிருங்கள் ! குஷ்பூ வேண்டுகோள் !!

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் இம்மாதம் நடைபெறுகிறது. திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை ஆதரித்து நடிகை குஷ்பு 05.10.2011 அன்று திருச்சியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பேசினார்.

பிரச்சாரத்தில் பேசிய குஷ்பு : ஒரு வருத்தமான செய்தியோடு என்னுடைய பேச்சை ஆரம்பிக்கிறேன். அதிமுகவின் அமைச்சர் மரியம் பிச்சை அவர்கள் ஒரு எதிர்பாராத விபத்தில் மரணம் அடைந்தது வருத்தமான விஷயம். எதிர்பாராத மரணத்தினால் இந்த தொகுதிக்கு மீண்டும் தேர்தல் வந்திருக்கிறது. ஒரு ஐந்து மாதம் கூட இல்லாமல், மீண்டும் உங்களை சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை.

பொதுத்தேர்தல் முடிந்தவுடன் நான் அப்பொழுதே பத்திரிகைக்கு பேட்டி அளித்தேன். மக்கள் ஒரு தவறு செய்துவிட்டார்கள். அதை இந்த ஐந்து வருடத்திற்குள் உணர்வார்கள் என்று சொன்னேன். ஆனால், அதை நீங்கள் மூன்றே மாதத்தில் உணர்ந்திருப்பீர்கள்.

தப்பு செய்வது மனித இயல்புதான். நான் கூட சினிமா உலகத்துக்கு வரும்போது, சின்ன சின்ன தவறுகள் செய்திருக்கிறேன். தமிழ் தெரியாமல், தமிழ்க் கலாச்சாரப்படி சேலை உடுத்த தெரியாமல், தமிழ் பேச தெரியாமல் என்னை வைத்து இயக்கிய தயாரிப்பாளர்கள், ஆலோசகர்கள் கொடுத்த அறிவுரையை ஏற்று என்னை மாற்றிக்கொண்டேன்.

தாமஸ் ஆல்வா எடிசன் கூட பல்பை கண்டுபிடித்தார். இப்ப அந்த பல்பு உங்கள் வீட்டில் எரியாது. அது வேற விஷயம். அந்த பல்பை கண்டுபிடிப்பதற்கு முன் 990 தடவை அவர் தவறு செய்தார். ஆனால் அவர் சரிசெய்த போதுதான் உலகம் பிரகாசித்தது. நீங்களும் செய்த தவறை திருத்துவதற்கு ஒரு சரியான வாய்ப்பு. அந்த வாய்ப்பு திருச்சி மேற்கு தொகுதி மக்களுக்கு மட்டும் கிடைத்திருக்கிறது. இவ்வாறு குஷ்பு பேசினார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!