லண்டன் : சிரிப்பு தான் உலகின் சிறந்த மருந்து என்பது நமக்குத் தெரிந்ததுதான். ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று, மூளைக் கோளாறால் (டிமென்ஷியா) பாதிக்கப்பட்ட வயதானோருக்கு சிரிப்பு அருமருந்தாகப் பயன்படுவதாகத் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள 36 மருத்துவமனைகள் மற்றும் 400 வீடுகளில், கடந்த மூன்றாண்டுகளாக வயதானோரிடையே ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நடத்திய இதில், விளையாட்டுகள், நகைச்சுவை மற்றும் பாடல்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. ஆய்வாளர்கள் தினசரி மருத்துவமனைகள் மற்றும் வீடுகளுக்குச் சென்று வயதானோருடன் பேசி சிறிது நேரம் இருப்பர். அப்போது, விளையாட்டு, நகைச்சுவை போன்றவற்றை அவர்களுடன் பகிர்ந்து கொள்வர்.
இந்த ஆய்வில், 200 வீடுகளில் உள்ள வயதானோரைச் சந்திக்கும் ஆய்வாளர்கள், விளையாட்டு போன்ற எதையுமே பயன்படுத்தாமல் வெறுமனே பேசி விட்டு வந்து விடுவர். ஆய்வின் இறுதியில், வயதானோர் குறிப்பாக, பல்வேறு நோய்களால் மூளைக் கோளாறு ஏற்பட்டு அதனால் பாதிக்கப்பட்டோர், விளையாட்டு, நகைச்சுவை போன்றவற்றால் மூளைக் கோளாறின் பாதிப்பில் இருந்து, 20 சதவீதம் விடுபட்டது தெரியவந்தது
2 comments :
உடல் நலத்தகவல்கள் தொடரட்டும்.
நல்ல தகவல்கள். தொடருங்கள்
Post a Comment