Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, October 31, 2011

உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட குழந்தை பிறப்பு !!

உலக மக்கள் தொகை 700 கோடியை தொட்டது. 700 கோடியாவது குழந்தை இந்தியாவில் உள்ள உத்தரபிரதேச மாநிலம் பாக்பட் மாவட்டம் சன்ஹோபி கிராமத்தில் இன்று பிறக்கும் எனது ஐக்கிய நாடுகள் அமைப்பான பாப்புலேசன் பண்ட் பிரிவு தெரிவித்து இருந்தது.

ஆனால் 700-வது கோடி குழந்தை பிலிப்பைன்ஸ் நாட்டில் பிறந்தது. உலகமே ஆவலடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த 700-வது கோடி குழந்தை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்தது.

கேமிலி தலுரா என்ற பெண் இந்த குழந்தையை பெற்றெடுத்து பெருமையை பெற்றார். அந்த பெண் குழந்தையின் பெயர் டேனிசாமே. நேற்று நள்ளிரவுக்கு சற்று முன்பு இந்த குழந்தை பிறந்தது. இந்த குழந்தைதான் 700-வது கோடி குழந்தை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த குழந்தை 2.5 கிலோ எடையுடன் பிறந்தது. குழந்தையை பெற்றெடுத்த கேமிலி, இது தொடர்பாக கூறும்போது உலகின் 700-வது கோடியாவது குழந்தை என்பதை என்னால் நம்ப இயலவில்லை எனது குழந்தை மிகவும் அழகாக உள்ளது என்றார்.

ஈழ போர் குற்ற அறிக்கை தயார் ! சமரச குழு !!

கொழும்பு, அக்.31: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்து முடிந்த போர் குறித்த அறிக்கை தயாராகிவிட்டது.

அந்நாட்டின் சமரச குழு தயாரித்த அறிக்கை அடுத்த 15 நாள்களுக்குள் அதிபர் மகிந்தா ராஜபட்சவிடம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

2010-ம் ஆண்டு எல்எல்ஆர்சி-யை அதிபர் ராஜபட்ச அமைத்தார். 2002-ம் ஆண்டு நார்வே அமைதிக் குழு ஏற்படுத்திய சமாதான திட்டம் முறிந்துபோனது முதல் 2010-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வரையான நிகழ்வுகளை ஆராயுமாறு இக்குழுவை அவர் கேட்டுக் கொண்டார்.

அறிக்கையில் 1,000 வாய்மொழி தகவல்களும், 5,000 எழுத்துபூர்வ தகவல்களும் இடம்பெற்றுள்ளன. பல தரப்பட்ட மக்களும் தங்களது கருத்துகளை அளித்துள்ளதாக விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

இலங்கையில் நிகழ்ந்த போர் குறித்து சர்வதேச அளவில் கடுமையான விமர்சனம் எழுந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எல்எல்ஆர்சி-ஐ இலங்கை அரசு அமைத்தது. இருப்பினும் சுயேச்சையான விசாரணை தேவை என்று பல்வேறு குழுக்கள் வலியுறுத்தி வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை போர் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.

போர் குற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார். இந்நிலையில் அரசு அமைத்த சமரச தீர்வு குழுவின் போர் அறிக்கை வெளியாக உள்ளது.

இனப்படுகொளையாளக்கு எதிராக அறிக்கை எந்த அளவுக்கு இருக்கும் என்பது வந்ததும்தான் தெரியும்., இதுபோல் மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இக்கொடியவனுக்கு நெருக்கடிகள் கொடுத்துக்கொண்டு இருக்கவேண்டும் நம் தாயகத்தின் துயர் துடைக்க.,செய்வோமா.

காசிமட காணாமல் போன சாமிகளுடன் கலவாணி சாமியாரும் மீட்பு?

கொச்சி : கவுடா சரஸ்வதா பிராமண சமூகத்தின் ஆன்மீக மையமான காசி மடத்திலிருந்து விலைமதிப்பான சிலைகளுடன் தலைமறைவான ராகவேந்திர தீர்த்தா(வயது 39) ஆந்திராவில் கடப்பா போலீசாரால் கைதுச்செய்யப்பட்டார்.

கடப்பாவில் ஒரு ப்ளாட்டில் சந்தேகத்திற்கிடமான சூழலில் தங்கியிருந்த இவரை அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போலீஸார் கைதுச்செய்தனர்.

காசிமடத்திலிருந்து காணாமல்போன விலைமதிப்பான சிலைகளும்,ரத்தின கிரீடமும் ராகவேந்திர தீர்த்தாவிடமிருந்து போலீஸ் கைப்பற்றியதாக கருதப்படுகிறது. ராகவேந்திரா தீர்த்தாவின் மீது வாரிசுரிமை தொடர்பாக கேரள மாநிலம் எர்ணாகுளம் மத்திய போலீஸ் நிலையத்திலும் வழக்கு உள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு தனக்கு பாதகமாக வெளிவந்தவுடன் கொச்சியில் புதுக்குல வெட்டத்தில் துவாரகா என்ற ஆசிரமத்தில் வசித்த ராகவேந்திரா, கடந்த மார்ச் மாதம் இங்கிருந்து தலைமறைவானார்.

Sunday, October 30, 2011

தொடைக்கு தடை வருமா !!?

திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறவர்கள் இனிமேல் சம்பந்தப்பட்ட படத்தின் விஷயங்களையும், அதன் பாடல்களை பற்றியும் தான் பேச வேண்டும்.

படத்திற்கு சம்பந்தமில்லாத விஷயங்களைப் பற்றி பேசக்கூடாது. அவ்வாறு சம்பந்தமில்லாத விஷயங்களை பேசும்போது பிரச்சனை வேறு விதமாக திரும்பிவிடுகிறது.

எனவே இப்படி ஒரு நடவடிக்கை வேண்டும் என்று இயக்குநர்கள் சங்கம் தீர்மானித்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகிவுள்ளது. கூடவே, நடிகைகள் தொடை தெரியும் அளவிற்கு அணியும் கவர்ச்சி உடைகளுக்கும் தடை விதிக்கப்படும் என்ற தகவலும் பரவியுள்ளது.,நடக்குமா?

இவர்கள் பப்ளிசிட்டிக்கும், பைசாவுக்கும் உடம்பு கூசும் அளவுக்கு ஆடைகள் அணிகிறார்கள்.

மணிக்கு 15 அதிலும் திருமணமானவர்கள் முன்னிலை வகிக்கிறார்கள் !!

புதுடெல்லி : இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 தற்கொலைகள் நிகழ்கின்றன. வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை முடிவை தேர்ந்தெடுப்பவர்களில் 69.2 சதவீதம் பேரும் திருமணம் புரிந்தவர்களாவர். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள சூழ்நிலை புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

இந்தியாவில் நடக்கும் குற்றச்சம்பவங்கள், விபத்துகள் குறித்த தகவல்கள் தேசிய குற்ற ஆவண காப்பகம் மூலம் சேகரிப்படுகிறது. கடந்த 2010-ம் ஆண்டில் நடந்த குற்ற சம்பவங்கள் குறித்த அறிக்கையை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது : கடந்த ஆண்டில் இந்தியா முழுவதும் 1,34,599 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில் சுமார் 70.5 சதவீதம் பேர் திருமணமான ஆண்கள், 67 சதவீதம் பேர் திருமணமான பெண்கள். தற்கொலையில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 16,561 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2009-ம் ஆண்டு 14,424 பேர் தற்கொலை செய்துள்ளனர். 2009ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2010ல் கூடுதலாக 14.8 சதவீதம் பேர் தற்கொலை செய்துள்ளனர்.

சென்னையில் மட்டும் கடந்த ஆண்டு 1,325 பேர் தற்கொலை செய்துள்ளனர். மகாராஷ்டிராவில் 15,916 பேரும், பெங்களூரில் 1,778 பேரும், டெல்லியில் 1,242 பேரும், மும்பையில் 1,192 பேரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இந்தியாவில் 1 மணி நேரத்துக்கு 15 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேச மாநிலங்களில் 60 வயதை கடந்த பலர் தற்கொலை செய்கிறார்கள். கடந்த ஆண்டு 60 சதவீதம் பேர் முதுமை காரணமாக தற்கொலை செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 1 ஆண்டில் மட்டும் 64,996 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் 835 பேர் பலியாகியுள்ளனர். மாலை 6 மணியில் இருந்து 9 மணி வரை அதிக அளவில் விபத்துகள் நடைபெறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மத்திய பிரதேசத்தில் அதிகமாகியுள்ளது. அங்கு கடந்த ஆண்டில் 3,135 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 414 பேரும், மும்பையில் 194 பேரும், பூனேயில் 91 பேரும் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் தற்கொலை தலைநகர் என்ற பெயரை பெங்களூர் தொடர்ந்து இரண்டாவது முறையாக பெற்றுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டில் பெங்களூரில் மட்டும் 1,778 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

Saturday, October 29, 2011

எச்சரிக்கை இல்லாததால் இணையதளத்தில் பணம் இழப்பு

சென்னை, வடபழனி ராகவன் காலனியைச் சேர்ந்தவர் அஸ்வின்குமார்; டாக்டர். இவர், சமீபத்தில், கம்ப்யூட்டரில் இன்டர்நெட் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது, ஆன்-லைன் மூலம் பொருட்கள் விற்பனை செய்யும் வெப்சைட் ஒன்றைப் பார்த்துள்ளார்.

அதில், தற்போது விற்பனைக்கு வந்துள்ள "ஐபோன் எஸ்.4' நான்கை, 95 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம் என்று விளம்பரம் வந்தது. ஆன்-லைன் மூலம் அந்த போன்களை வாங்குவதற்கு, குறிப்பிட்ட வங்கிக் கணக்கில், 95 ஆயிரம் ரூபாய் பணத்தை அஸ்வின்குமார் செலுத்தியுள்ளார்.
ஆனால், பணம் போனதே தவிர, ஐ போன் கைக்கு வரவில்லை.

இது தொடர்பாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் அஸ்வின் குமார் புகார் அளித்தார். புகாரில், சுப்ரமணியம் மற்றும் கவுதம் ஆகியோர் தன்னை ஏமாற்றிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதே போல், கடந்த சில தினங்களுக்கு முன், ஒரு ஆன்-லைன் வர்த்தக இணையதளத்தில் பார்த்து, கேமரா ஒன்றிற்கு 15 ஆயிரம் ரூபாய் செலுத்தி, இன்னும் கேமரா வந்து சேரவில்லை என, மற்றொரு இளைஞர் புகார் அளித்துள்ளார்.

கிரெடிட், டெபிட் கார்டு மோசடியைத் தொடர்ந்து, புதியதொரு மோசடிக் கும்பல் தங்கள் கைவரிசையைக் காட்டத் துவங்கியுள்ளதாக, போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த புகார்கள் தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

எத்தனை முறை எச்சரித்து ஊடகங்களில் செய்தி வந்தாலும் இவர்களுக்கு விழிப்புணர்வு என்பது இல்லை படித்தவர்களையும் இந்த வலையில் மாட்டிக்கொள்ளுகிரார்கள்.

விஜய் படத்தில் ஜெயா புகழ் பாடுவது கட்சிக்கா! அல்லது ஆட்சிக்கா !?

ஊடகம் சம்பந்தப்பட்ட படம் என்பதால், டைட்டில் கார்டில் ஜெயா டிவிக்கு நன்றி என்பதில் தொடங்கி, ஜெயா டிவி, ஜெயா நியூஸ் என்று படம் முழுக்க ஜெயா மயம்தான்.

என் கட்சி ஒரேகட்சி.....என்று சின்ன இடைவெளி விட்டு ’தங்கச்சி’ என்று அரசியல் வெடிக்கிறார் விஜய். இன்னும் நிறைய வெடிக்கின்றன.


இந்த மண்ணை ஆண்டாரு..மக்களை ஆண்டாரு...அடுத்து மாநிலத்தையே..... என்று கிரேன் மனோகர் சொல்லிக்கொண்டிருக்கும் போது, அதற்கு மேல் சொல்ல வேண்டாம் என்று விஜய் சைகை செய்ய, நீங்க வேண்டாம்னு சொல்லுறதால சொல்லல என்று நிறுத்திக்கொள்கிறார்.

இது போதாது என்று க்ளைமாக்ஸ் காட்சியில் பல்லாயிரக்கணக்கான விஜய் மக்கள் இயக்க கொடிகள்., அம்மா புகழ் பாடி கட்சியில் நுழைந்து ஆட்சி அதிகாரத்தை கை பற்றவா?

இது போன்ற காரணங்களாலும் ஆண்மை குறைவு ஏற்படலாம்

ஆண்மைக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களில் 100 பேரை வகைப்படுத்தி ஆராய்ந்தபோது அவர்கள்..

* உடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம் பேர் ஆண்மைக்குறைவுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

* மனஉளைச்சல் மற்றும் வேலை தரும் அழுத்தத்தால்- 28 சதவீதம் பேர் இந்த பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

* முரண்பாடான வாழ்க்கை முறையால் ஆண்மைக் குறைவுக்கு உள்ளானவர்கள்- 14 சதவீதம்.

* தவறான உணவுப் பழக்கத்தால் 12 சதவீதம் பேருக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட்டுள்ளது.

* அதிக அளவில் மது அருந்துவதால் 8 சதவீதம் பேருக்கு ஆண்மைக் குறைவு உருவாகியுள்ளது.

* இதர காரணங்களால் 7 சதவீதம் பேருக்கு ஆண்மைக்குறைபாடு தோன்றுவதாக தெரியவந்துள்ளது. இந்த குறைபாட்டை கவனிக்காமலே விட்டுவிட்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் இதய பாதிப்பு தொடங்கிவிடும். இதய பாதிப்பு என்கிற யானை வரும் முன்பே, அதை உணர்த்துகின்ற மணியோசையாக ஆண்மைக்குறைவு தோன்றுகிறது.

திருமணமான ஆண்கள் மனைவியிடம் நல்லுறவை பேண முடியாமல் குழம்புவதும் மன உளைச்சலுக்கான முக்கியமாக காரணமாகிறது. 2020-ம் ஆண்டில் உலகிலே மன அழுத்ததம்தான் பெரிய நோயாக இருக்கும் என்று எச்சரிக்கிறது இன்னொரு புள்ளிவிபரம்.

Friday, October 28, 2011

சாதித்து காட்டிய ஷாருக் !!!

படம் வெளி வரும் முன்பு பல விமர்சனங்கள் குவிந்த வண்ணமிருந்தது, அதையெல்லாம் மீறி பெரும் வெற்றி பெற்று சாதனை படைத்தது இப்படம்.

ஷாருக்கான் நடித்த “ரா ஒன்” படம் தீபாவளியன்று ரிலீசானது. இப்படம் திரையிட்ட இரண்டு நாளில் ரூ.62 1/2 கோடி வசூலித்து சாதனை புரிந்தது. முதல் நாளில் 26 1/2 கோடியும், மறுநாளில் ரூ.36 கோடியும் வசூலித்தது.

வேறு எந்த இந்தியப் படமும் இவ்வளவு வசூல் சாதனை படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்கொல்லி நீரிழிவு நோய்! 7 செகண்டுக்கு ஒருவர் மரணிக்கின்றனர்!!

உலகில் காணப்படும் ஆட்கொல்லி நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

ஆரம்ப காலங்களில் இந்நோய் தொடர்பான விழிப்புணர்வு நம்மிடையே போதியளவு காணப்படாத போதிலும் தற்போது அந்நிலை மாற்றமடைந்து வருகின்றது.

நீரிழிவு நோய் தொடர்பிலும் அதன் வகை தொடர்பிலும் அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பது தொடர்பிலும் நாம் அறிவோம்.

இந்நிலையில் சர்வதேச நீரிழிவு ஸ்தாபனம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியவற்றினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் சிலவற்றைக் காணலாம்.

உலகம் பூராகவும் சுமார் 366 மில்லியன் பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நீரிழிவு ஸ்தாபனம் தெரிவிக்கும் அதேவேளை 344 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிடுகின்றது.

வருடாந்தம் 4.6 மில்லியன் பேர் இதனால் உயிரிழக்கின்றனர். அதாவது 7 செகண்டுக்கு ஒருவர் வீதம் இந் நோயினால் மரணிக்கின்றனர்.

வருடாந்தம் 465 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நீரிழிவு நோய் எதிர்ப்புக்காக செலவழிக்கப்படுகின்றது., 2004 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 3.4 மில்லியன் பேர் நீரிழிவு நோயால் உயிரிழந்தனர்.

இந்நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளில் 80% குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தைக் கொண்ட நாடுகளிலேயே ஏற்படுகின்றது.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 50 சதவீதத்தினர் இதயம் சம்பந்தப்படட நோய்களாலும், பக்கவாதம் போன்ற நோய்களாலுமே இறப்பைத் தழுவ நேரிடுகின்றது.

நீரிழிவு நோயாளிகளில் 2 சதவீதமானவர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு 15 வருடங்களின் பின்னர் தமது பார்வையை இழப்பதுடன், 10 % பார்வைக் குறைபாடுகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.

நீரிழிவு நோயாளர்களில் 10 – 20 சதவீதமானவர்கள் சிறுநீரக கோளாறினால் இறக்கின்றனர்.

Thursday, October 27, 2011

இளம் பெண்களுக்கு வலைவிரிக்கும் இணையதளம்! அதிர்ச்சி ரிப்போர்ட்!!

இ-மெயில் மூலம் நட்பு வலைவிரித்து இளம் பெண்களை வீழ்த்தி பணம் பறிக்கும் இ-பயங்கர வாதம் அதிகரித்து விட்டது. உலகளாவிய தொடர்புகளால் குற்றவாளிகளை பிடிப்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலாக உள்ளது.

எளிய நகரங்களில் மட்டும் அல்லாது, சிறிய ஊர்களில் கூட இன்று இன்டர்நெட் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தவிர, வசதி படைத்தவர்கள் வீடுகளிலேயே இன்டர்நெட் இணைப்பை வைத்துள்ளனர். இன்டர்நெட் கலாச்சாரம் பெருகி விட்டது. இன்டர்நெட் நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டது போக, இன்று பல்வேறு குற்றங்களுக்கு ஊற்றுக் கண்ணாக மாறிப் போய் விட்டது.

சமூக விரோதிகள் விரிக்கும் வலையில் சிக்கி இளம் பெண்களும், குடும்ப பெண்ணும் வெளியில் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர். குடும்ப கவுரவம், சமூக அந்தஸ்து இவற்றை கருதி பிளாக் மெயில் பேர் வழிகள் கேட்கும் பணத்தை, பொருளை கொடுத்து, வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றனர். இதுவே பிளாக்மெயில் பேர் வழிகளுக்கு உரமிட்டது போல் ஆகி விடுகிறது. இப்படி பல விஷயங்ககள் அமுக்கப்படுவதால், இன்டர்நெட் குற்றவாளிகளை பிடிப்பது சைபர்கிரைம் போலீசாருக்கு சவாலாக உள்ளது.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த 10 வயது பள்ளிச்சிறுமி இன்டர்நெட் மூலம் கிடைத்த நட்பு வலையில் சிக்கி, பல்வேறு அவஸ்தைகளை அனுபவித்த சம்பவம் இப்போது வெளியாகி உள்ளது. சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகள் அபி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 10 வயதான இவள் நகரில் உள்ள பிரபல பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கிறாள். இந்த வயதிலேயே இன்டர் நெட்டில் இவள் புகுந்து விளையாடுவதை பார்த்து இவளது பெற்றோர் பூரித்துப் போனார்கள்.

இவளது இ.மெயில் முகவரிக்கு தினமும் நிறைய மெசேஜ்கள் வந்தன. அந்த முகவரிக்கு இவளும் பதில் அனுப்புவாள். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இவளது இ-மெயிலுக்கு உனது நட்பு தேவை என்று மெசேஜ் வந்தது. அதனுடன் அதை அனுப்பி இருந்தவர், தானும் ஒரு பள்ளி மாணவி என்றும், ஒரு சமயத்தில் அபியுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவள் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து, அந்த முகம் தெரியாத பெண்ணை அபி நண்பராக ஏற்றுக் கொண்டாள். இருவரும் அடிக்கடி ஆன்-லைனில் பேசிக் கொண்டனர். இப்படியே தொடர்ந்து பழக்கம் சில நாளில் திசை மாறியது. நைசாக பேசி அபியை சில நடவடிக்கைகளுக்கு அவர் உட்படுத்தினாள்.

வெப்-கேமரா முன்பு தனது அங்கங்களை காட்டினாள். இதை விளையாட்டாகவே அபி நினைத்தாள். ஆனால், இவளது செய்கைகள் அனைத்தும் வெப்- காமிராவில் படம் பிடிக்கப்பட்டு, எதிர் முனையில் பதிவு செய்யப்பட்டது. இந்த விஷயத்தை அபி தன் பெற்றோரிடம் சொல்லவும் இல்லை, மகளின் நடவடிக்கைகளை அவர்கள் கண்காணிக்கவும் கிடையாது. இப்படியே 3 மாதங்கள் கடந்த நிலையில், அபியின் தந்தைக்கு மிரட்டல் இ- மெயில் வந்தது. அதில் ரூ.50 லட்சம் தரவேண்டும். இல்லை எனில் அபியின் ஆபாச வீடியோவை யூடியூப்பில் போட்டு விடுவேன். போலீசுக்கு போனால் நிலைமை இன்னும் விபரீதம் ஆகும்.

மற்ற இணையத்தளங்களிலும் ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என்றும் மிரட்டப்பட்டார். இதனால் போலீசுக்கு செல்ல தயங்கினார். பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல் இ-மெயில்கள் வந்த வண்ணம் இருந்தன. அபியின் பெற்றோர், தனியார் துப்பறியும் ஏஜென்சியை அணுகி விபரத்தை தெரிவித்தனர். அவர்கள் சைபர் குற்றங்களை கண்டு பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். அவர்கள் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

நெதர்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சைபர் குற்றங்களை நவீன தொழில் நுட்பம் மூலம் சுலபமாக கண்டுபிடித்து விடுகின்றனர். ஆனால், இந்தியாவில் போலீசாருக்கு போதிய பயிற்சியும், நுட்பமும் இல்லாததால், சைபர் குற்றங்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உள்ளது.

இணைய தளத்தில் சாட்டிங்கில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக பெண்கள் முன் ஜாக்கிரதையாக கையாண்டால், இது போன்ற சிக்கல்களை தவிர்க்க முடியும். வெளிநாடுகள் அல்லது தூரத்தில் இருக்கும் தெரிந்து நட்பு மற்றும் உறவு வட்டாரங்களில் மட்டுமே இ-மெயிலில் பேச வேண்டும். முகம் தெரியாதவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வது, பின்பு பல சிக்கல்களுக்கு வழி ஏற்படுத்தி விடும்., வீட்டிலே இணையதள வசதிகள் செய்து கொடுப்பது நல்லதுதான், அப்ப அப்ப என்ன செய்கிறார்கள் எந்த தளம் அவர்கள் உபகிக்கிரார்கள் என்பதில் கவனமாக இருப்பது பெற்றோரின் கடமை.

Wednesday, October 26, 2011

தியேட்டரை விட்டு திருட்டு விடியோ சிடியை நாட இதுதான் காரணமோ !?

சினிமாத் தொழில் நசிந்து வருவதற்கும் தியேட்டர்களில் முன்பு போல் கூட்டம் கூடாததற்கும் அங்கு வசூலிக்கப்படும் அடாவடியான டிக்கெட் கட்டணமே காரணம் என்பதுதான் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையில் பிரதானமாக இருக்கிறது.

மல்டிபிளக்ஸ் காம்ப்ளக்ஸ்களில் வசதி படைத்தவர்கள்தான் செல்ல முடியும் என்ற நிலை. சரி... சாதாரண, நடுத்தர வசதியுள்ள திரையரங்குகளுக்கோ, புறநகர்ப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளுக்கோ செல்லலாம் என்றால் அங்கு நடக்கும் கூத்து இதை விட பயங்கரமாகவுள்ளது.

ரூ.10, ரூ.15-க்கு டிக்கெட் கொடுப்பார்கள்; ஆனால் நம்மிடம் ரூ.50 முதல் ரூ.80 வரை வசூலித்துவிடுகிறார்கள். அதிலும் நட்சத்திர நடிகர்களின் படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம்; குறைந்த பட்சம் ரூ.100 முதல் ரூ.500 வரை கறந்துவிடுகிறார்கள். ஆனால் நமக்குத் தருவது ஒரு ரிசர்வேஷன் ஸ்லிப்பையோ அல்லது ரூ.15, ரூ.20 என அச்சிடப்பட்ட டிக்கெட்டையோதான்.,நமக்குத் தரும் அந்த ரூ.15, ரூ.20 டிக்கெட் கட்டணத்தின் அடிப்படையில்தான் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை அளிக்கிறார்கள். அதைத்தான் டி.சி.ஆர் எனப்படும் டெய்லி கலெக்ஷன் ரிப்போர்ட்டிலும் குறிப்பிடுகிறார்கள்.

அதிகமாக வசூலிக்கும் தொகையை தியேட்டர்காரர்கள் எடுத்துக்கொள்கிறார்களா? விநியோகஸ்தர்கள் எடுத்துக்கொள்கிறார்களா? அதில் தயாரிப்பாளர்களுக்குப் பங்கு இருக்கிறதா என்பதெல்லாம் சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் வெளிச்சம்., இப்படி திரையரங்குகளில் கொள்ளை நடக்கும்போது நடுத்தர மக்கள் திருட்டு வி.சி.டி. பக்கம்தான் செல்வார்கள்!

ஊரறிந்த இந்த ரகசியம் அரசுக்குத் தெரியாதா? சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்குத் தெரியாதா? என்பதுதான் பலருடைய கருத்து.,தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார்களா சினிமா நடிகர்கள் போல இந்த அதிகாரிகள்.

இந்தியா ஒரு பாசிச நாடா? அல்லது பயங்கரவாத காடா??

புதுடெல்லி : கஷ்மீர் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட அடையாளம் தெரியாத கல்லறைகளை குறித்தும், மாநிலத்திலிருந்து காணாமல் போன் ஆயிரக்கணக்கான நபர்களைக்குறித்தும் முழுமையான விசாரணையை நடத்த மத்திய அரசு தயாராகவேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

பீப்பிள்ஸ் யூனியன் ஃபார் சிவில் லிபர்டீஸ்(பி.யு.சி.எல்), பீப்பிள்ஸ் யூனியன் ஃபார் டெமோக்ரேடிக் ரைட்ஸ்(பி.யு.டி.ஆர்) ஆகிய அமைப்புகள் இணைந்து டெல்லியில் நடத்திய கருத்தரங்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. குற்றவாளிகள் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன்னால் கொண்டுவர அரசு தயங்கக்கூடாது என கருத்தரங்கம் கோரிக்கை விடுத்தது.

காணாமல் போனவர்கள் தொடர்பான ஐ.நாவின் சட்டத்தை அங்கீகரிக்க இந்தியா இனிமேலாவது தயாராகவேண்டும். சித்திரவதை தடுப்பு ஒப்பந்தம் மசோதா-2010இல் திருத்தங்களை அரசு மேற்கொள்ளவேண்டும். அடக்கம் செய்யப்பட்ட அடையாளம் தெரியாத உடல்கள் தீவிரவாதிகளுடையது என அரசு கூறுவதை அங்கீகரிக்க இயலாது.

பத்தாயிரம் பேர் கஷ்மீரில் காணாமல் போன சூழலில் அவர்களை குறித்த தெளிவான விபரங்களை வெளியிடவேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. கஷ்மீரின் வேறு சில பகுதிகளிலும் அடையாளம் தெரியாத கல்லறைகள் இருப்பதாக அறிக்கைகள் வெளியான சூழலில் இவ்விவகாரத்தில் வெளிப்படையான விசாரணைக்கு அரசு ஏன் தயாராகவில்லை? என மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.

இக்கருத்தரங்கில் குர்ரம் பர்வேஷ், பரம்ஜித் கவுர் கத்ரா, நித்யா ராமகிருஷ்ணன், உஷா ராமநாதன், நீதிபதி ராஜேந்திர சச்சார், ப்ருந்தா க்ரோவர் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

@இங்கு சில தகவல்களை பார்க்கலாம் : சிங்கள இன வெறியர்களுக்கு இந்தியாவிலிருந்து இந்திய இராணுவத்தையும் ராணுவ தளவாடங்களையும் அனுப்பி சொந்த ( ஈழ ) மக்களை கொன்று குவிக்க பெரும் உதவி செய்தது, (இன்று வரை பாதிக்கப்பட்ட ஈழ மக்களளுக்கு மீள் குடி ஏற்றம் ஏதும் செய்து தரவில்லை என்பது குறுப்பிட தக்கது), 

அதேபோல் குஜராத்தில் சிறுபான்மையரை கொன்று அவர்களின் சொத்துக்களை சூறையாடிய குஜராத் முதல்வன் நரேந்திர கேடியும், இவனுடைய அரசும், அரசு அதிகாரிகளும் துணை போனது ஒவ்வொரு நாளும் தினசரிகளில் வந்த வண்ணம் இருக்கிறது, இந்த உலக கேடியை இந்திய சட்டமோ சட்டத்தை சார்ந்தவர்களோ இதுவரை இவனுக்கு தண்டனை வாங்கித்தரவில்லை வாங்கித்தரவும் மாட்டார்கள் ஏன் என்றால் இந்தியா ஒரு பயங்கரவாத நாடு என்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்., சிந்திக்கட்டும் நடுநிலையாளர்கள் !?.

உடல் ஆரோக்கியம் பெருக தினம் ஒரு ஆப்பில்

இரத்தத்திற்குச் செந்நிறம் தரும் ‘‘ஹீமோக்கிளோ பின்” ஆப்பிளில் மிகுதி. உதிரப் போக்கை நிறுத்தும் சக்தியும், இரத்தத்தைச் சுத்தி செய்யும் ஆற்றலும் இதற்குண்டு.

தினமும் ஆப்பிளை மென்று சாப்பிட்டு வந்தால், பற்கள் வலுவடையும். ஈறுகளில் புண்கள், வலி, இரத்தம் வருதல் போன்றவற்றை ஆப்பிள் தடை செய்யும்.

கல்லீரலைச் சுறுசுறுப்பாக்கும் ஆற்றலும், குடற் கிருமிகளைக் கொல்லும் சக்தியும் இதற்குண்டு.

இதில் உள்ள பாஸ்பரச் சத்து, மூளைக்கு வலிமையும், தெளிவும் தரும். வாத நோய்க்கும் அரு மருந்து.

நரம்புத் தளர்ச்சி, உறக்கம் வராமை, தூக்கத்தில் நடத்தல், புலம்பல் போன்ற நரம்புக் கோளாறுகளுக்கு காலை, மாலை ஓர் ஆப்பிள் வீதம் சாறு பிழிந்து கொடுத்தால் குணம் தெரியும்.

Tuesday, October 25, 2011

மெகா பட்ஜெட்டை கண்டு கடைசியில் கழன்று கொண்ட படங்கள் !!

வேலாயுதம், ரா-1, ஏழாம் அறிவு தவிர சிம்புவின் ஒஸ்தி, தனுஷின் மயக்கம் என்ன, புகழேந்தி தங்கராஜின் உச்சிதனை முகர்ந்தால் உள்ளிட்ட படங்களும் தீபாவளி ரேஸில் கலந்து கொள்ள இருந்தது.

இதில் மெகா பட்ஜெட்டை கண்டு கடைசி நேரத்தில் கழண்று கொண்ட சிம்புவின் ஒஸ்தி, தனுஷின் மயக்கம் என்ன, புகழேந்தி தங்கராஜின் உச்சிதனை முகர்ந்தால் உள்ளிட்ட படங்கள்.

இதற்கு முக்கிய காரணம் மேற்படி ரிலீசாக இருக்கும் மெகா பட்ஜெட் படங்கள் மற்றும் தியேட்டர் பற்றாக்குறை போன்றவை தான். இருந்தாலும் துணிச்சலாக கவர்ச்சியை நம்பி "அவளுக்கு அது புதுசு" எனும் அந்தமாதிரி படமும், புதுமுகங்களின் "காதல் கொண்ட மனசு" எனும் சின்ன பட்ஜெட் படமும் கிடைத்த தியேட்டர்களில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருப்பதுதான் இப்போதைய நிலவரம்! இதில் கடைசிநேர மாற்றங்களும் நிகழலாம் என்று சின்னதாய் பேசவும் செய்கிறது பெரிய அளவில் பரந்து விரிந்த கோடம்பாக்கம்! அதையும் பார்ப்போம்.

இந்த ரேசில் அதிக சிலவில்லாத சிறிய பட்ஜெட் படங்கள் வெற்றி பெற்றுவிடும் வெயிட் அண்ட் சி.

அமெரிக்க விசாவுக்கு 6 இந்திய மொழிகளில் நேர்காணல்

புதுடில்லி : கல்வி, சுற்றுலா, வர்த்தகம் உள்ளிட்ட காரணங்களுக்காக அமெரிக்கா செல்வோரின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

இந்த காரணங்களுக்காக விண்ணப்பித்த 4 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு, அமெரிக்க தூதரகம், நடப்பு நிதியாண்டில் விசா வழங்கியுள்ளது.இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 4.3 சதவீதம் அதிகம். டில்லி, மும்பை,சென்னை, கோல்கட்டா, ஐதராபாத் ஆகிய அமெரிக்க தூதரக அலுவலகங்கள் மூலம், இந்த விசா வழங்கப்பட்டுள்ளது.

விசா வேண்டி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், 60 சதவீத ஊழியர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளனர். விசா நேர்காணல் மொழியை, விண்ணப்பத்தாரர்கள் தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளில் தேர்வு செய்யவும் தற்போது வசதி செய்யப்பட்டுள்ளது.

குடல் மார்பக புற்று நோய்யை தடுக்க சில வழிகள்

லண்டன் : பொதுவாக மனிதர்களை மார்பக மற்றும் நுரையீரல் புற்று நோய் தாக்கி வருகிறது. அதற்கு அடுத்த நிலையில் குடல் புற்று நோய் உள்ளது. இந்த குடல் புற்று நோய் எப்படி உருவாகிறது என கண்டறிய முடியவில்லை. எனவே ஆராய்ச்சி நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.

பல் சொத்தை மற்றும் தோலில் புண் போன்றவற்றை ஒரு வித பாக்டீரியாக்கள் ஏற்படுத்துகின்றன. அந்த கிருமிகளுக்கும், குடல் புற்று நோய்க்கும் சம்பந்தம் இருக்கலாம் என கண்டு பிடித்துள்ளனர். இந்த புற்று நோய் வருவதை முன் எச்சரிக்கையுடன் தடுக்க முடியும்.

உடல் எடை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளுதல், இறைச்சியை குறைந்த அளவு சாப்பிடுதல், நார்சத்து உணவை அதிக அளவு உட்கொள்ளுதல் போன்றவற்றால் குடல் புற்று நோய் வராமல் தடுக்கலாம். இந்த தகவலை இங்கிலாந்தை சேர்ந்த புற்று நோய் ஆராய்ச்சி நிபுணர் சாரா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

Monday, October 24, 2011

S P சரணுடன் கிசு கிசுக்கப்பட்ட சோனா மீண்டும்

நடிகை சோனாவுக்கும், பின்னணிப் பாடகர் எஸ்.பி.சரணுக்கும் இடையே மங்காத்தா மது விருந்தின்போது மோதல் ஏற்பட்டது.

சரண் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார்; அவரை கைது செய்யும் வரை நான் ஓய மாட்டேன் என்றெல்லாம் வீராவேசமாக வசனம் பேசிய சோனா, சரணிடம் நான் எதிர்பார்த்தது கிடைத்து விட்டது; அவர் கடிதம் மூலம் வருத்தம் தெரிவித்து விட்டார், என்று கூறிய கையோடு புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டு வெளிநாட்டுக்கு போய் விட்டார்.

இதையடுத்து சோனா தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி இருக்க முடிவு செய்திருப்பதாக அவரது வட்டார தகவல்கள் தெரிவித்தன. கடைசி வரை சோனா - சரண் விஷயத்தில் நடந்த உண்மை என்ன என்பது தெரியாத நிலையில் மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார் சோனா. சோக்காலி என்ற படத்தில் நடிக்கிறாராம். இதில் அவருக்கு முக்கிய வேடமாம்.

இதுகுறித்து சோனா அளித்துள்ள பேட்டியில், இந்த மாதம் ஷூட்டிங்கைத் தொடங்குகிறார்கள். முக்கிய வேடத்தில் நான் நடிக்கிறேன். வில்லத்தனமாகவும், நல்லதனமாகவும் இதில் நான் வித்தியாசமாக நடிக்கிறேன். இது கிட்டத்தட்ட எனது நிஜ கேரக்டர் மாதிரியே இருப்பதால் ஈடுபாட்டுடன் நடிக்கிறேன், என்று கூறியுள்ளார்.

மத்திய மாநில அரசுக்கு எதிராக இரு பெண் முதல்வர்கள்!?

புதுடெல்லி : மத்திய அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. குஜராத் மாநிலம் வளர்ச்சியில் மிகவும் முன்னேறியுள்ளதாக கூறும் நரேந்திரமோடியின் கூற்றில் உண்மையில்லை என உ.பி. முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் நடத்திய உரையில் இருவரும் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டனர். மாநில அரசுகளை தரம் தாழ்த்தும் மத்திய அரசின் நடவடிக்கை ஜெயலலிதாவை கோபமடையச் செய்தது.

அதேவேளையில் குஜராத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாக போலியாக சித்தரித்து பிற மாநிலங்களை மட்டம் தட்டும் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியின் நடவடிக்கை மாயாவதியை கோபமடையச் செய்தது. மிகச்சிறந்த மாநிலமாக குஜராத்தை உயர்த்திப் பிடிப்பதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவும், ஊடகங்களும் பொய்யான செய்திககளை வெளியிடுகிறது என்று மாயாவதி தெரிவித்தார்.

@ இந்திய அரசு பயங்கரவாதம் சிங்கள வெறியர்களோடு சேர்ந்து ஈழ தமிழர்களை கொன்று குவித்தது,அமைதிப்படை என்ற போர்வையில், அதேபோல் குஜராத் கேடி, முதல்வர் என்கிற போர்வையில் ஒளிந்து கொண்டு ஹிந்துத்துவா தீவிரவாதிகளுடன் சேர்ந்து சிறுபான்மையினரை கொன்று குவித்தான் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இறுக்கியது இந்திய சட்டம் என்கிற சாக்கடை, சட்டம் தன் கடைமையை செய்யாவிடில் மக்களுக்கு எப்படி இந்திய சட்டத்தை மதிக்க தோன்றும் சிந்திப்பீர்?

செம்பருத்தியின் மருத்துவ தன்மை

இதோட தாவரவியல் பேரு ஹைபிஸ்கஸ் ரோசா சைனன்சிஸ். இது இந்தியாவில் தோட்டங்களில் வளர்க்கப்படுது. வேலித் தாவரமாகவும் வளர்க்கிறாங்க.

இதோட நுனி இலைகள் பற்கள் போன்ற அமைப்புடன் காணப்படும். ஒளிர் பச்சை நிறத்தில் இருக்கும்., இதோட இலைகள், வேர் மற்றும் மலர்கள் பயன்தரக்கூடியவை. இதோட இலையின் சாறு மேக நோய்க்கு உகந்த மருந்து.

தலைமுடியை கறுப்பாக மாற்றுது. இதோட வேர் இருமலைப் போக்கும். மலர் மொட்டுக்கள் ஆண்மை பலத்தை பெருக்கும். மலர்கள் குளிர்ச்சி தரும். இதழ்களின் வடிசாறு காய்ச்சலில் உள்ள தீவிரத்தைக் கட்டுப்படுத்தும்.

சிறுநீர் போக்கின் போது உண்டாகும் வலியைக் குணப்படுத்தும். செம்பருத்தியோட இளம் இதழ்களின் எண்ணெயுடன் சம அளவு ஆலிவ் எண்ணெயை கலந்து, தலை வழுக்கை போக தடவுவாங்க.

Sunday, October 23, 2011

மங்கிப்போயிருந்த வெங்கட் பிரபுவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய கமல்

மங்காத்தாவில் ஜாக்பாட் அடித்தாலும் சோனா விவகாரத்தில் மங்கிப் போயிருந்த வெங்கட் பிரபு, தற்போது படு குஷியாக இருக்கிறார்.

காரணம்..., சமீபத்தில் அவர் கமல்ஹாஸனை சந்தித்துப் பேசியதுதானாம். தனக்கு வயதானாலும் இளம் தலைமுறை இயக்குனர்களுடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்பது கமலின் ஆசை.

இளம் தலைமுறை ப்ளஸ் விறுவிறு காமெடி... இதற்கு வெங்கட் பிரபு - பிரேம்ஜி டீம் பக்காவாக பொருந்தும் என்பதால், வெங்கட்டை அழைத்துப் பேசியிருக்கிறார் கமல்ஹாசன். ஒன்லைன் கதையை கேட்டதும் கமல்ஹாசனுக்கு பிடித்து விட்டதாகவும், விரைவில் இந்த இணைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

இல்லறம் இனிக்க இதோ சில டிப்ஸ் பெண்களுக்கு!

இன்று உள்ள காலகட்டத்தில் (சில வீடுகளில் இருவரும் வேலைக்கு செல்கிறார்கள்) குடும்பத்தை நடத்தும் பொறுப்பு, பணிச்சுமை போன்ற பலவிதமான காரணங்களால் கணவன், மனைவி இருவரும் தங்களுக்குள் அன்பையோ, பிரச்சனைகளையோ பரிமாறிக் கொள்வது குறைந்து வருகிறது.

மனம் ஒத்த தம்பதிகளாக நூற்றுக்குப் பத்து பேர் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இருவரும் விட்டுக் கொடுத்து வாழ மனமில்லாமல் தங்களில் யார் பெரியவர் என்ற மனநிலையிலேயே காலத்தை கழித்து விடுகின்றனர். காலப்போக்கில் கணவன், மனைவி இருவருமே குழந்தைகளுக்காக மட்டுமே வாழ்கிறோம் என்ற சூழ்நிலை உருவாகி விடுகிறது. ஆனால் அப்படி இல்லாமல் வாழும் காலம் வரை கணவன் மனைவிக்காகவும், மனைவி கணவனுக்காகவும் மட்டுமே வாழ வேண்டும். இப்படி இல்லறத்தை நடத்துபவர்களும், இல்லற வாழ்க்கையில் ஈடுபடப் போகின்றவர்களும் கீழே உள்ளதைப் படித்து இல்லறத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பெண்களுக்கே உரிய பழக்கத்தில் இதை வாங்கிக் கொடுங்கள்., அதை வாங்கிக் கொடுங்கள் என்று அவரை நச்சரிக்கதீர்கள். அவருக்கு உரிய கடமைகளை முறையாகச் செய்யுங்கள்., கணவர் மனம் வருந்தும்படி எந்த நாளும் ஒரு செய்கையும் செய்யாதீர்கள். எப்போதும் கனிவான வார்த்தைகளையே பேசுங்கள். அவர் ஊரில் இல்லை என்றால், தன்னை அலங்கரித்து கொள்ளாதீர்கள். கணவருக்கு எந்த ஒரு தொந்தரவையும் தரதீர்கள். கணவருக்குப் பிடித்ததை மட்டுமே சமையுங்கள். பணி நிமித்தம் கணவர் வெளியே எங்காவது சென்றிருந்தால், அவர் திரும்பி வரும்வரை தெய்வ வணக்க வழிபாட்டில் இருங்கள்.

அசதியின் காரணமாக அவர் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும்போது எத்தகைய முக்கியமான செய்தி என்றாலும், அவரை எழுப்பாதீர்கள். எனக்குப் பணம் தாருங்கள் என்று அவரிடம் எந்த நாளும் கேட்க்காதீர்கள். (இதைப் படிக்கும் கணவன்மார்களுக்கு, தங்களது மனைவியும் இப்படி இருந்தால் எத்தனை சுகமாக இருக்கும் என்கிற ஏக்கம் வருவது இயற்கை! உண்மை! எதிர்பார்ப்பு) ஆனால், . இல்லறம் என்பது கணவனும் மனைவியும் இணைந்து நடத்துகிற நல்லறம்! அதில் கண்ணீரும், கவலையும் கலந்து விடாமல் இருக்க வேண்டும்! கணவனும் மனைவியும் ஒருவர் மீது மற்றொருவர் செலுத்துகிற அன்பே, இந்த இல்லறத்தின் மூலதனம் ! இதயம் மட்டும் உறுதி கொண்டதாக அமைந்து விட்டால், ஒரு சுண்டெலிகூட யானையைத் தாக்கி விடும் என்பது மேலைநாட்டுப் பழமொழி. உங்கள் இதயங்களை உறுதி கொண்டதாக ஆக்குங்கள். இல்லறம் நல்லறமாக மாறும்!

@ எல்லாம் சரி, ஏய் இவளே எங்கடி உன் அப்பன் வருகிற தீபாவளிக்கு டூ வீலர் வாங்கி தருவாருள்ளே? இல்லேன்னு வச்சுக்கோ உனக்கு பிறந்த வீடுதான் கெதி சாக்கிரதை !!

Saturday, October 22, 2011

நல்ல முடிவு எடுத்த நடிகர்கள் சங்கம் ?

சென்னை, அக் 22 : ஆதரவின்றி தவிக்கும் வயதான நடிகர், நடிகைகளுக்கு முதியோர் இல்லம் கட்ட நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.

நடிகர் லூஸ் மோகன் வயதான காலத்தில் மகன் தன்னை கவனிக்கவில்லை என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் அளித்தார். பராமரிக்க யாரும் இன்றி தவிப்பதாக அப்போது கண்ணீர் வடித்தார். இது போல் வயதான நடிகர், நடிகைகள் பலர் ஆதரவின்றி கஷ்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாஞ்சில் நளினி, எம்.ஆர்.பி. சந்தானம், எஸ்.சுப்பு லட்சுமி, மதுரை ஜெயந்தி, வி.ஆர். நாதன்,நெல்லை சாரதி, எம்.கே. குள்ளமணி, பி.நீலா, என அவர்கள் பட்டியல் நீள்கிறது. மொத்தம் 131 வயதான நடிகர், நடிகைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு மாதம் தோறும் நடிகர் சங்கம் ரூ.500 ஓய்வூதியம் வழங்கி வருகிறது. 2010-ம் ஆண்டு இவர்களுக்கு ரூ.7.86 லட்சம் பென்சன் ஆக வழங்கப்பட்டு உள்ளது.

இவர்களுக்கு முதியோர் இல்லம் கட்டப்பட்டால் கடைசி காலத்தை சந்தோஷமாக கழிப்பார்கள் என்று நடிகர் சங்கம் கருதுகிறது. ஒரு ஏக்கர் நிலபரப்பில் இந்த இல்லத்தை கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான நிலத்தை ஒதுக்கீடு செய்து தரும்படி அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அத்வானியின் ரத்த யாத்திரையை கேலி செய்யும் ஹிந்துத்துவா கட்சிகள்

புதுடெல்லி:பா.ஜ.க ஊழலில் சிக்கி தவிக்கும் வேளையில் ஊழலுக்கு எதிரான போராளியாக களமிறங்கியுள்ள பாப்ரி மஸ்ஜித் இடிப்பு புகழ் எல்.கே.அத்வானியின் ர(த்)த யாத்திரையை அவரது குடும்ப யாத்திரை என பா.ஜ.கவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ், மற்றும் ஹிந்துதுவா கட்சிகள்
எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் அத்வானியின் ஜனசேதனா யாத்திரைக்கு பேரணிகள் தேவையில்லை என சங்க்பரிவார தலைமை உத்தரவிட்டுள்ளது. ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிரான மக்களின் உணர்வுகளை ஆதாயமாக்க குடும்பத்தினருடன் ரதயாத்திரை கிளம்பியுள்ள 84 வயதான அத்வானிக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் எதிர்ப்பால் வரவேற்பு மங்கியுள்ளது.

பீகாரில் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்த ஊரான ஸிதாப் தியராவிலிருந்து ரதயாத்திரையை துவக்கிய அத்வானியுடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர். 84 வயதான அத்வானி பிரதமர் வேட்பாளராக மாற குடும்பத்தினருடன் நடத்தும் பரிவார யாத்திரை என ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் வர்ணித்துள்ளார்.

யாத்திரையின் பொறுப்பு வகிக்கும் பா.ஜ.கவின் தேசிய பொதுச்செயலாளர் அனந்தகுமார் மட்டுமே அத்வானியுடன் இருக்கும் ஒரே கட்சி தலைவர். வரவேற்பு கூட்டங்களில் உரை நிகழ்த்த ஹைடெக் ரதத்தின் மேலே செல்ல லிஃப்டில் அத்வானி ஏறுவது அவருடைய மகள் பிரதீபா உடனாகும். உரைநிகழ்த்தும் பீடத்திற்கு அருகே இதர பா.ஜ.க தலைவர்களை அத்வானி அண்டவிடமாட்டார். சங்க்பரிவார தலைமை மற்றும் கட்சியுடனும் ஆலோசனை நடத்தாமலேயே சுயமாக அத்வானி ரதயாத்திரையை அறிவித்தார். ஆர்.எஸ்.எஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமையகம் அமைந்திருக்கும் நாக்பூருக்குச் சென்று ஆர்.எஸ்.எஸ் தலைவரை சந்தித்துவிட்டு இது பிரதமர் பதவிக்கான யாத்திரை அல்ல என அத்வானி விளக்கம் அளித்தார் ஆனால் யாத்திரை துவங்கியவுடன் அடுத்த தேர்தலில் பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளருக்கான யாத்திரையாக அத்வானி மாற்றினார்.

உடல்நலம் அனுமதிக்குமானால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவேன் என அத்வானி வெளியிட்ட அறிக்கை ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் குறித்து உரிய நேரத்தில் சங்க்பரிவார தலைமை முடிவெடுக்கும் என ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் சுனில் ஜோஷி தெரிவித்துள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தி (VACSINATION)

பாக்டீரியாக்கள் நம்மைச் சுற்றி அனைத்து இடங்களிலும் உள்ளன. அவை எல்லா நேரங்களிலும் நமது உடலில் இருக்கின்றன. நமது மூச்சுக் காற்று அல்லது நம் தோலில் ஏற்படும் காயங்கள் மூலமாக பாக்டீரியாக்கள் உடலுக்குள் நுழைந்து விடுகின்றன. ஆனால் அவற்றில் இருந்து ரத்த வெள்ளையணுக்கள் நம்மை பாதுகாக்கின்றன. இவை `பாகோசைட்' என்று அழைக்கப்படுகின்றன.

இவை நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களை கொன்று விடுகின்றன. பாகோசைட் பாக்டீரியாக்களை எப்படி கொல்கிறது என்று தெரியுமா? முதலில் இது பாக்டீரியாவை நேருக்கு நேர் சந்திக்கிறது. பின்னர், பாக்டீரியா ரத்தத்தால் பக்குவமாக்கப்படுகிறது. அதன்பின்னர்தான் பாக்கோசைட் பாக்டீரியாவை அழிக்கிறது.

ரத்தத்தில் இருந்து கொண்டு நுண்ணுயிரிகளைப் பதப்படுத்தும் பொருளுக்கு `ஆப்ஸனின்' என்று பெயர். ரத்தத்தில் ஒரு துளியை எடுத்து அதை மைக்ரோஸ்கோப் வழியாகப் பார்த்தால், அதில் உள்ள ஆப்ஸனின் என்ற பொருளின் வீரியம் தெரிந்து விடும்.

ரத்தம், பாகோசைட், ஆப்ஸனின் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் குறைபாடு ஏற்பட்டால், உடலினுள் பாக்டீரியா புகுந்து நோய் உண்டாக்கி விடும். இதுபோன்ற நேரங்களில், ரத்தத்தில் வாக்சீனைச் செலுத்தி, நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யலாம்.

Friday, October 21, 2011

சொந்த சரக்கு உள்ளவர்களே வண்ணத்திரையில் மின்ன முடியும்

கலை வாரிசுகள் ஜெயிப்பதும் தோற்பதும் அவரவர் திறமையையும் அதிர்ஷ்டத்தையும் பொறுத்தது. ஆனால் இப்படி வருகிற எல்லாருமே தங்களுக்கு பாதை அமைத்துக் கொடுத்த மூத்தவர்களின் பாணியை பின் பற்றுவதே இல்லை. சொந்த சரக்கு மட்டுமே அவர்களின் முன்னேற்றத்திற்கு கை கொடுத்திருக்கிறது.

அப்படி ஒரு சொந்த சரக்காளராக வந்து சேர்ந்திருக்கிறார் அபிநய். இவர் காதல் மன்னன் ஜெமினி கணேசன், சாவித்ரியின் கலை வாரிசு. இவர் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படம்தான் வினை. இவர் ஏற்கனவே ஒரு தெலுங்கு படத்தில் அறிமுகமாகி நடித்திருக்கிறாராம். தமிழில் அவர் நடித்து வெளிவரப்போகும் முதல் படம் இந்த வினைதான்.

அடிப்படையில் இசைக்குழு வைத்திருக்கும் நால்வர் ஒரு பாடகியுடன் மலேசியா செல்கிறார்கள். சில தினங்களில் இந்த நால்வரும் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள். கொல்வது யார்? ஏன்? என்ற கேள்வியோடு விறுவிறுப்பாக நகருமாம் படம்.

இந்த படம் முழுக்க மலேசியாவில்தான் படமாக்கப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் இந்தியாவிலும் மலேசியாவிலும் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அபிநய்யை எப்படி தேர்ந்தெடுத்தார் டைரக்டர் பாலசுதன் என்றால் அதுவே பெரிய கதையாக இருக்கிறது.

ஒரு விறுவிறுப்பான கதையை தயார் செய்துவிட்டு சென்னைக்கு வந்திறங்கியவர், இங்குதான் ஹீரோ தேடும் படலத்தையே ஆரம்பித்தார். அப்போதுதான் சினிமா டைரி ஒன்றில் அபிநய்யின் புகைப்படத்தை பார்க்க நேர்ந்தது. பார்த்தவுடன் பிடித்துப் போகிற முகமாக இருந்ததால் உடனே அவரது செல்போனில் தொடர்பு கொண்டு வரவழைத்தாராம்.

வந்த பிறகுதான் தெரிந்ததாம் அவர்தான் காதல் மன்னன் ஜெமினியின் வாரிசு என்று. அப்புறமென்ன? பெருமையோடு அறிமுகப்படுத்தி விட்டார்கள் அவரை. தா‌த்‌தா‌ பா‌ட்‌டி‌யி‌ன்‌ ஆசி‌ பே‌ரனுக்‌கு கி‌டை‌க்‌குமல்‌லவா‌?

அபிநய்க்கு ஜோடியாக பிரதிக்ஷா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். சித்தார்த் யுவராஜ் இசையமைத்திருக்கிறார்கள். உரூஜ் புரடக்ஷன்ஸ் சார்பாக அப்துல் அஜீஸ் தயாரித்திருக்கிறார்.

நடிகையுடன் காதல் விரைவில் டும் டும்! ஹர்பஜன் !!

இங்கிலாந்தில் வசித்து வரும் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர் கீதா பஸ்ரா. இவர் தற்போது மும்பையில் தங்கியுள்ளார்.

தில் தியா ஹை படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான கீதா, "டிரையின்" எனும் படத்தில் கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்ணாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். இதுதவிர சில ஆல்பங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் கீதா பஸ்ராவுக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், சுழற்பந்து வீச்சாளருமான ஹர்பஜன் சிங்கிற்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும், இந்த காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டதால் இப்போது திருமணம் வரை சென்றுவிட்டதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கபோவதாக கூறப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

தனிமை சிறைக்கு தடை விதிக்கச்சொல்லும் ஐ ந !?

ஐ.நா:நீண்டகாலமாக தனிமைச் சிறையில் அடைப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என சித்திரவதைகளைக் குறித்து விசாரணை நடத்தும் ஐ.நா குழு தெரிவித்துள்ளது.

தனிமைச்சிறை மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் சிறைக் கைதிகளுக்கு பிரச்சனைகளை உருவாக்கும் என விசாரணைக் குழுவிற்கு தலைமை வகித்துள்ள ஜுவான் மென்ட்ஸ் ஐ.நா சபையின் மனித உரிமை கவுன்சிலில் தெரிவித்துள்ளார்.

சிறைக் கைதிகளுக்கு மனோரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் சித்திரவதை முறைகளை பயன்படுத்தக்கூடாது. சிறைக் கைதியின் பாதுகாப்பிற்கு தனிமைச்சிறை தேவை என்றாலும் 15 தினங்களுக்கு மேலான தனிமைச் சிறைக்கு தடை விதிக்க வேண்டும்.

பல நாடுகளும் சிறைக் கைதிகளை தனிமைச் சிறையில் அடைத்துள்ளனர். குறைந்த நாட்கள் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களிடம் நடத்திய ஆய்வில் மனோரீதியாக-உடல்ரீதியாக பிரச்சனைகளை கண்டறிந்ததாக வாஷிங்டனில் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் சட்ட பேராசிரியரான மென்ட்ஸ் கூறுகிறார்.

அமெரிக்காவில் 25 ஆயிரம் பேர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சீன அரசு அரசு ரகசியங்களை வெளிநாட்டினருக்கு கசியச்செய்த அளித்த வழக்கில் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட பெண்ணை இரண்டு ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைத்துள்ளது என மென்ட்ஸ் தெரிவித்தார்.

Thursday, October 20, 2011

தேர்தல் முடிவுகள் ஆன்-லைனில், தேர்தல் கமிஷன் ஏற்பாடு

சென்னை : தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஆன்-லைன் மூலம் வெளியிடப்படுகிறது.

இரண்டு கட்டமாக நடந்த உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தனித்தும், தே.மு.தி.க., போன்றவை கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன.

முதல்கட்ட தேர்தல் 17ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் 19ம் தேதியும் நடந்தன. இந்த தேர்தல் முடிவுகள், மாநில தலைமை தேர்தல் கமிஷன் மூலமாக, ஆன்-லைனில் வெளியிடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் கமிஷன் செய்துள்ளது.

வாதநோய் மூன்று மடங்கு அதிகமாகும் புகைப்பவர்களுக்கு!

லண்டன். சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் 3 மடங்கு அதிகம் தாக்கும். இதனால் புற்றுநோய், காசநோய் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் சிகரெட் பிடிப்பதால் பக்கவாத நோய் ஏற்படும். அதுவும் மற்றவர்களை விட சிகரெட் புகைப்பவர்களுக்கு 3 மடங்கு கூடுதலாக ஏற்படும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

கனடாவில் உள்ள ஓட்டோவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் 950 பக்கவாத நோயாளிகளிடம் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களில் 700 பேர் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் 250 பேர் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

சிகரெட் பிடிப்பதால் உடலில் உள்ள ரத்த நாளங்களில் ஓடும் ரத்தம் உறைந்து விடுகின்றன. இதனால் அவர்களுக்கு மற்றவர்களை விட பக்கவாத நோயின் பாதிப்பு 3 மடங்கு கூடுதலாக இருக்கும் என கணித்துள்ளனர்.

மேலும், சிகரெட் புகைப்பவர்களுக்கு 58 வயதிலும், சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு 67 வயதிலும் பக்கவாத நோய் ஏற்படுகிறது என்றும் கண்டறிந்துள்ளனர்.

@ நம்மில் சிலபேர் அதிகாமாக சிகரெட் பிடிப்பது டென்சன் என்பர், அதுதான் இல்லை மேலும் அதிகமாக்குவதுதான் புகை பழக்கம்.

Wednesday, October 19, 2011

பெரிய தியேட்டர்களில் போனி ஆகாத வேலாயுதம் ?

சென்னை மற்றும் புறநகரங்களில் மட்டும் 30க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வேலாயுதம் ரிலீசாக இருக்கிறது. இந்தமுறை தீபாவளிக்கு வெளிவர இருந்த மயக்கம் என்ன, ஒஸ்தி போன்ற படங்கள் தீபாவளி ரேஸில் இருந்து விலகிவிட்டன. இதனால் வேலாயுதம், ஏழாம் அறிவு, ரா-1 படங்கள் மட்டுமே வெளிவர இருக்கின்றன.

இந்நிலையில் சென்னையில் உள்ள முக்கிய திரையரங்குகள் அனைத்திலும் ஏழாம் அறிவு, மற்றும் ரா-1 படங்கள் தான் புக்காகி உள்ளன. இதனால் விஜய்யின் வேலாயுதம் படத்திற்கு பெரிய தியேட்டர்கள் எதுவும் அவ்வளவாக கிடைக்கவில்லை. இது விஜய் ரசிகர்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதனால் சுமார் 100க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள், சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேவி ‌தியேட்டர் காம்ப்ளக்ஸில் உள்ள நான்கு திரையரங்குகளில், தேவி மற்றும் தேவி பாரடைஸ் ஆகிய இரு பெரிய அரங்குகளும் ஏழாம் அறிவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டன. இந்த இரண்டு பெரிய அரங்குகளில் ஒன்றை வேலாயுதம் படத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குறைந்த சிலவில் வெளிநாடுகளுக்கு பேசும் வசதிகளுடன் அறிமுகம்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம், தனது 2ஜி, 3ஜி “பிரி பெய்டு” வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பேசும் வசதிக்கு பூஸ்டர் கார்டுகளை அறிமுகம் செய்துள்ளது.

கனடா, அமெரிக்கா, ஹாங்ஹாங், சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளுக்கு நிமிடத்துக்கு 1.49 செலவில் பேச மாதம் ரூபாய் 41-க்கு பூஸ்டர் கார்டு உபயோகிக்கவேண்டும். இதே வசதியை 7 நாட்களுக்கு மட்டும் வேண்டுமானால் ரூபாய்-18.கான பூஸ்டர் கார்டுகளை பயன்படுத்தலாம்.

பூஸ்டர் கார்டு இல்லாமல் பேசுபவர்களுக்கு நிமிடத்திற்கு ரூபாய் 7.20, கட்டணம் வசூலிக்கப்படும்.

இதேபோல, வங்கதேசம், ஜெர்மனி, மலேசியா ஆகிய நாடுகளுக்கு நிமிடத்திற்கு ரூபாய் 2.99 செலவில் பேச மாதத்திற்கு ரூபாய் 27.க்கான பூஸ்டர் கார்டு உபயோகிக்கவேண்டும்.

பக்ரைன், பிரான்சு, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை ஆகிய நாடுகளுக்கு நிமிடத்துக்கு 4.49 கட்டணத்தில் ஒரு மாதத்திற்கு பேச, ரூபாய் 38,க்கு பூஸ்டர் கார்டு பயன்படுத்த வேண்டும். இதே நாடுகளுக்கு ஒரு வாரத்துக்கு மட்டும் பேச ரூபாய்-16,க்கான பூஸ்டர் பயன்படுத்தினால் போதும்.

மேற்கண்ட நாடுகளுக்க் சாதாரணமாக இப்போது பேசும் திட்டத்தில் நிமிடத்திற்கு 9 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது., ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, பூட்டான், குவைத், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு நிமிடத்திற்கு 6.49 செலவில் பேச, மாதம் 24 ரூபாய்க்கான “பூஸ்டர் கார்டு” உபயோகிக்கவும்.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேடு ஆகிய நாடுகளுக்கு நிமிடத்திற்கு 4.80 கட்டணத்தில் பேச மாதம் 26- ரூபாய்க்கான “பூஸ்டர் கார்டு” போட வேண்டும்.

இந்த ஐந்து “பூஸ்டர்” கார்டுகளையும் ஒரே நேரத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று பி.ஏ.என்.எல் சேலம் கோட்ட மேலாளர் வழங்கிய செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த நோய் உள்ளாவார்கள் இதெல்லாம் சாப்பிடலாம்

அனைத்து வகைப் பச்சை இலைக் காய்கறிகள், சாலட் வகைகள், கொத்தமல்லி, புதினா, கீரை வகைகள், முட்டைக்கோசு, வெள்ளரிக்காய், நீர்ச்சத்துள்ள காய்கறி புடலங்காய், சுரைக்காய், பாவற்காய், காளிஃப்ளவர், சௌ சௌ, நூல்கோல், முருங்கைக்காய், தக்காளி,

முள்ளங்கி, முளைகட்டிய தானிய வகைகள், வெங்காயம், வாழைப்பூ, வாழைத் தண்டு, மோர், ஆடை எடுக்கப்பட்ட பால், காய்கறி சூப். அளவுடன் சாப்பிடலாம்!

தானிய வகைகள், பருப்பு வகைகள்.

காய்கறிகளில் பச்சைப் பட்டாணி, பீட்ரூட், பீன்ஸ், வாழைக்காய், காரட், சுண்டைக்காய்.

பழவகைகளில் தர்பூசணி, திராட்சை, கொய்யா, ஆரஞ்சு, பப்பாளி, ஆப்பிள், எலுமிச்சை, ப்ளம்ஸ், வாழைப்பழம், சப்போட்டா, அன்னாசி மற்றும் உலர் பழ வகைகள்.

ஆடை எடுக்கப்பட்ட பால் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்பட்டவை. முட்டையின் வெள்ளைக்கரு, கோழி இறைச்சி, மீன், சுத்தமான சூப் வகைகள்.

பழங்களானால் ஒரு சில துண்டுகள் (ஒரு நாளில் 100 கிராம் அளவு) பால் ஒரு நாளைக்கு 1/2 லிட்டருக்கு மேற்படக்கூடாது. (மோர், தயிர் மற்றும் இதர பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களைச் சேர்த்து) தொடக்கூடாது!

சர்க்கரை, வெல்லம், தேன், இனிப்பு பிரெட், ஜாம், குளூக்கோஸ், கஸ்டர்ட் கலந்த இனிப்பு வகைகள், கேக் வகையறாக்கள்.

பால் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகள்.

கொழுப்புச் சேர்ந்த எண்ணெய், பாலாடைக் கட்டி, ஐஸ்க்ரீம் மற்றும் லட்டு, பர்ஃபி, பாயாசம் போன்ற வகைகள்.

கார்ன்ஃப்ளவர், ஆரோரூட் மாவு, ஜவ்வரிசி, வேரிலிருந்து விளையக்கூடிய கிழங்கு வகைகள்.

பருப்பு, எண்ணெய் வித்துக்கள், வியாபார ரீதியில் தயாரிக்கப்படும் பானங்களான ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா போன்றவை.

குறிப்பு: முழுமையான கோதுமை மாவு ஒரு நாளைய மெனுவில் இருக்கவேண்டும். ஒரு உணவிற்கும் மறுமுறை உட்கொள்ளும் உணவிற்கும் குறிப்பிட்ட இடைவெளி அவசியம் இருக்க வேண்டும்.

எந்த நோய் என்று சொல்லவே இல்லை என்று யோசிக்கிறீர்களா அதாங்கே வேறண்ணே நீரிழிவுதான் இன்னுமா புரியலை ? (Sugar).

Tuesday, October 18, 2011

முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம், F - 1

உலகளவில் கார்பந்தயத்தில் முன்னிலையில் உள்ளது "பார்முலா-1'. ஆண்டு முழுவதும், உலகின் 19 முன்னணி நகரங்களில் போட்டி நடக்கிறது.

மொத்தம் 12 அணிகளில் இருந்து தலா 2 வீரர்கள் பங்கேற்பார்கள். இதன் முடிவில் ஒவ்வொரு வீரரும் பெறும் புள்ளிகள் அடிப்படையில், முதலிடத்தை பெறுபவர் ஒட்டுமொத்த "சாம்பியன்ஷிப்' பட்டம் வெல்லலாம்.

இதுவரை நடந்த 17 சுற்று போட்டிகளில், 10ல் முதலிடம் பெற்ற "ரெட் புல் ரெனால்ட்' அணி வீரர் செபாஸ்டியன் வெட்டல் மொத்தம் 349 புள்ளிகள் பெற்று, சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே நடந்து வந்த இந்த பந்தயம், முதன் முறையாக வரும் 30ம் தேதி, டில்லியில் நடக்கவுள்ளது. இந்த ஆண்டின் 17வது பந்தயத்தை நடத்த, உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் 875 ஏக்கர் நிலப்பரப்பில், புதிதாக "புத்தா சர்வதேச சர்கியூட்' மைதானம் அமைக்கப் பட்டுள்ளது.

மொத்தம் 5.14 கி.மீ., சுற்றளவு கொண்ட, இந்த போட்டியின் பந்தய தூரம் 308.4 கி.மீ., ஆகும். இம்மைதானத்தில் சராசரியாக 210.03 கி.மீ., வேகத்தில் செல்லும் போது, இந்த ஒரு சுற்றை ஒரு நிமிடம், 27.02 வினாடியில் கடக்கலாம்.

மொத்தம் 60 சுற்றுகள் சுற்ற வேண்டும். வீரர்கள் மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் செல்ல முடியும் என்பதால், இது உலகின் இரண்டாவது அதிவேக மைதானம் என்று பெயர் பெற்றுள்ளது. இந்த போட்டியை ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

ஈழத்திற்காக எதையும் செய்ய துடிக்கும் ஜெயா ? கவர்னர் !?

நெல்லூர் மாவட்டம், காவலி அடுத்த முசுனூரு என்ற இடத்தில், நிருபர்களிடம் பேசிய கவர்னர் ரோசய்யா : இலங்கையில், தமிழர்கள் தாக்குதலுக்குள்ளாவது குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

தங்களுக்கு அநியாயம் நடந்ததாக எவரேனும் எனது கவனத்திறகு கொண்டு வந்தால், அதற்கு தீர்வு காண, மாநில அரசுக்கு ஆலோசனை தெரிவிக்க தயாராக உள்ளேன்.

தமிழகத்தில் வாழும் தமிழர்களுடன், தெலுங்கு தாய் மொழியாக கொண்டவர்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கவர்னராக பொறுப்பு வகித்து வரும் எனக்கு, அனைவரும் சமமானவர்கள் தான்.சில விஷயங்களில், மாநிலங்களிடையே சரியான புரிந்துணர்வு இருப்பது மிகவும் முக்கியம். இரு மாநிலத்தவர்களும் பக்கத்து மாநிலங்களின் தேவையை அறிந்து கொள்ள வேண்டும்.

தேர்தலுக்கு முன்பு ஈழத்திற்கு எதையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று மார் (ராப்பு ) தட்டியவர் ஜெயா., பதவியில் அமர்ந்ததும் ஒரு வார்த்தை கூட ஈழத்தை பற்றி பேசாதது ஏன். பதவிக்காக காளை பிடிப்பதும் பதவியில் அமர்ந்ததும் எட்டி உதைப்பதுதான் அரசியல் சூட்சுமமோ.

தமிழர்களே ஒன்று திரளுங்கள் அரசியலும், அரசியல் வாதிகளும் செய்யாததை நாம் செய்வோம் நம் ஈழ உறவுக்காக., தமிழன் என்கிற உணர்வு நம்மிடம் மீதம் இருந்தால்.

Monday, October 17, 2011

மூட நம்பிக்கை முட்டாள்களிடம் காசு பார்க்கும் சாமியார்கள் !!

கல்வி அறிவில் பின் தங்கிய தர்மபுரி மாவட்ட மக்களின் அறியாமையை பயன்படுத்தி பல கிராமங்களில் கோவில் பூசாரிகள், அருள் வாக்கு சொல்லுவதும், பேய் ஓட்டுதல், சூனியம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு மாந்திரீக முறைகளை பயன்படுத்தி ஏழை மக்களிடம் பூஜை என்ற பெயரில் பணம் கறப்பதும் இங்கு அதிகம் நடந்து வருகிறது.

மூட நம்பிக்கையில் ஊறி போன மக்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் பல்வேறு மூட நம்பிக்கையை கையில் எடுத்து கொண்டு மருத்துவ சிகிச்சை எடுக்காமல் அவதிப்படும் சம்பவங்களும் அதிகம் நடக்கிறது. கிராம பகுதிகளில் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால், மருத்துவமனைக்கு செல்வதை விட கிராம பகுதிகளில் உள்ள பூசாரிகளை நாடி செல்வதோடு, அவர்கள் கூறும் பரிகார பூஜை நடத்துவதும் அதிகம் நடக்கிறது.

உடல் நலம் பாதிக்கப்படுவோரை பூசாரிகளிடம் அழைத்து செல்லும் போது, பூசாரிகள் பூஜை செய்து விதி வழங்குவதோடு, கிராம மற்றும் நகரப்பகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் செல்லும் போது பயந்து விட்டதாகவும், கறுப்பு அடித்து விட்டதாகவும் கூறி பரிகார பூஜைகள் செய்ய சொல்கின்றனர்.

பரிகார பூஜையே வித்தியாசமாக இருக்கிறது. பரிகார பூஜைக்கு கோழி, பப்பாளி பழம், வெள்ளை பூசனி உள்ளிட்டவைகளை வாங்கி வந்து அதை உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களில் தலையை சுற்றி பயந்ததாக கூறப்படும் எடுத்துக்கு உச்சி நேரத்தில் (பகல் 12 மணிக்கு) சென்று அந்த பகுதியில் சிறு, சிறு கற்களை வைத்து வீடு போல் கட்டி அதில் பெரிய கல்லுக்கு சந்தனம், குங்குமம் வைத்து ஊதுபத்தி, கற்பூரம் காட்டி, அந்த இடத்தில் கோழியை பலியிட்டு, அதன் ரத்தத்தை ஊற்றி விட்டு பப்பாளி மற்றும் வெள்ளை பூசணியை உடைத்து கல்லால் கட்டிய வீட்டின் நான்கு முளையிலும் வைத்து விட்டு திரும்பி பார்க்காமல் வந்து விடுவார்கள்.

இந்த பரிகார பூஜைக்கு, "பொட்டு வைத்தல்' என, பெயரிட்டுள்ளனர். இது போன்று செய்த பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டவர் குணம் அடைவதாக கிராம மக்கள் மத்தியில் அபார நம்பிக்கை உள்ளது. அதே போல் பல இடங்களில் அருள் வாக்கு என்ற பெயரில் குறி கேட்பவர்களின் வீடுகளில் இறந்தவர்கள் பெயரில் குறி சொல்வது உண்டு.இது போன்ற மூட நம்பிக்கையின் காரணமாக பல நேரங்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் உடல் நலம் தேறாமல் மிக மோசமான நிலைக்கு வந்த பின் மருத்துவமனைக்கு அழைத்து வரும் கொடுமைகள் அதிகம் நடந்து வருகிறது.

மூட நம்பிக்கை ஒரு பக்கம் இருப்பதை போல் கிராம பகுதியில் போலி டாக்டர்களுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதும் அடகம் உள்ளது.கல்வி அறிவில் தெளிவு பிறக்கும் வரையில், தர்மபுரி மாவட்டத்தில் இது போன்ற கொடுமைகளை தடுக்க முடியாது என்பதால் தான் மாவட்ட நிர்வாகம் கல்வியறிவுக்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த காலங்களை ஒப்பிடும் போது மூட பழக்க, வழக்கம் குறைந்திருந்த போதும், மக்கள் முன்னேற்றத்துக்கு அடியோடு மூட நம்பிக்கை ஒழிய வேண்டும்., நம் அனைவரின் எதிர்பார்ப்பு.நடக்குமா?

ஓட்டு சாவடியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட நடிகர் செந்தில்

அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்து வந்த நகைச்சுவை நடிகர் செந்தில் வீடு சென்னை சாலிகிராமத்தில் உள்ளது.

இன்று (17.10.2011) காலை இவர் ஓட்டுப் போடுவதற்காக மனைவி மகன்களுடன் சாலிகிராமம் காவேரி பள்ளி கூடத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு சென்றார். வாக்காளர் அடையாள அட்டையையும் கொண்டு சென்று இருந்தார்.

ஆனால் வாக்காளர் பட்டியலில் அவரது பெயரோ, குடும்பத்தினர் பெயரோ இல்லை. இதனால் செந்தில் அதிர்ச்சி அடைந்தார். அதிகாரிகளுடன் அவர் வாக்குவாதம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வாக்காளர் பட்டியல் புத்தகம் முழுக்க அலசி தேடிப்பார்த்தார்கள். ஆனால் பெயர் இல்லை. ஒரு வேளை பக்கத்து வாக்கு சாவடியில் பெயர் இருக்கும் என அதிகாரிகள் கூறினார்கள். இதனால் செந்தில் பாரதிதாசன் தெரு வாக்கு சாவடிக்கு சென்று பார்த்தார். அங்கும் அவரது பெயர் இல்லை., 2 மணிநேர அலைக்கழிப்புக்கு பிறகு நடிகர் செந்தில் ஓட்டுபோட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

Sunday, October 16, 2011

தொடர்ந்து தோல்வியால் கலக்கத்தில் தமன்னா

கோலிவுட்டில் நம்பர்-1 நாயகியாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. தமிழில் பிரபல நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டதாலும், அந்த காதல் கைகூடாததாலும், தமிழ் சினிமாவே வேண்டாமென்று தெலுங்கு பக்கம் போய் செட்டிலாகியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இதனிடையே தமன்னாவின் வரவு தெலுங்கில், அவருக்கு நிறைய படவாய்ப்புகளை பெற்று தந்தது. பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார். ஆனால் அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகி கொண்டிருக்கிறதாம்.

கடைசியாக ஜூனியர் என்.டி.ஆர் உடன் நடித்த ஓசரவள்ளி படமும் ப்ளாப் ஆனதால் ரொம்பவே அப்செட் ஆகியுள்ளார். மேலும் அவருடைய மார்க்கெட் ரேட் ரொம்ப குறைந்து விட்டதாம். இதனால் மிகுந்த கலக்கத்தில் இருக்கிறாராம் தமன்னா.

ஆளும் கட்சியை தோற்கடிப்பேன் கேப்டன் ஆவேசம் !

உள்ளாட்சித் தேர்தல் குறித்து தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்., அவ்வறிக்கையில், ‘’உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனித்தனியே போட்டியிடுகின்றது. தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து கூட்டாக இந்தத் தேர்தல்களில் போட்டியிடுகிறது., இத்தேர்தலில் ஆளும் கட்சியை தோற்கடிப்பேன் என்று கேப்டன் ஆவேசமாக பேசினார்.

அரசியலில் உள்ளாட்சித் தேர்தல் ஒரு புதிய மாற்றத்தை தமிழ்நாட்டு மக்கள் கொண்டு வருவார்கள் என்கின்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஏற்கனவே உள்ளாட்சி மன்றங்களில் பொறுப்பு வகித்து, ஆதிக்கம் செலுத்திய அரசியல் கட்சிகள், தங்களை எல்லா வகையிலும் பலப்படுத்திக் கொண்டு உள்ளது மட்டுமல்ல, இந்தத் தேர்தல்களிலும் தாங்களே பதவிகளை கைப்பற்ற முனைந்துள்ளனர்.

சாம, பேத, தான, தண்டம் என்கின்ற நான்கு வகை உபாயங்களையும் கையாண்டு வருகின்றனர். பல இடங்களில் வாக்காளார்கள் பட்டியல் சரிவர இல்லை. சில இடங்களில் வேட்பாளர்கள் மிரட்டப்படுகிறார்கள்.

வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் ஸ்லிப்புகள் கட்சி சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கக் கூடாது என்று விதி இருந்தும், ஆளும் கட்சியினர் இந்த விதியினை மீறி கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட பூத் ஸ்லிப்புகளை வழங்கி வருகிறார்கள்.

அதே போல தேர்தல் ஆணையரால் எதிர்க்கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் அடங்கிய சி.டியை விட, ஆளும் கட்சியினருக்கு தரப்பட்டு இருக்கிற, இது ஜன நாயகத்துக்கு எதிரானது சி.டி. சுமார் 400 வாக்காளர்களை கூடுதலாக பெற்றிருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை பெருநகரத்தில் இருந்து தமிழகத்தின் சிற்றூர்கள் வரை இத்தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தல்கள் சென்ற முறைபோல அமையாமல் நேர்மையாகவும், முறையாகவும் நடத்தப்பட வேண்டுமென்று மக்கள் விரும்புகிறார்கள்.

மேலும் நிதி நிறுவனம் மூலம் அதிமுக பண பட்டுவாடா செய்த அதிகாரி பிடிபட்டுள்ளார்.

வாக்கு போட விடாமல் தடுப்பதும், வாக்குச் சாவடிகளில் கலாட்டா செய்வதும், வாக்குகள் எண்ணிக்கையின்போது கலவரத்தில் ஈடுபடுவதும், தோற்ற வேட்பாளர்களை வெற்றி பெற்றவர்களாக அறிவிப்பதும் போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகள் கடந்த கால வரலாறாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், பணபலம், அதிகாரபலம், படைபலம் போன்ற தீய சக்திகள் இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலை சீர்குலைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

Saturday, October 15, 2011

அதிகம் செல் போனில் தேடிய நடிகை !!

வியூகிளிப் வீடியோ நிறுவனம் சமீபத்தில் ஒரு புள்ளி விபர அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, உலகளவில் முதல் 10 பிரபலங்களில் பாலிவுட் நடிகை, கத்ரீனா கைப் முதல் இடத்திலும், பிரிட்டினி ஸ்பியர் 2வது இடத்திலும், லிண்டசாய் லோகன் 3வது இடத்திலும், கரீனா கபூர் 4வது இடத்திலும் (இந்தியா) மற்றும் சோனக்ஷி சின்ஹா 6வது இடத்திலும் ​​(இந்தியா) உள்ளனர்.

மேலும், இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் அஜய் தேவ்கான் நடிப்பில் வெளியான ராஸ்கல்ஸ் படத்தில் கங்கனா ரணாவத் நீச்சல் உடையில் வருவது, வித்யா பாலன் நடிக்கும் டர்ட்டி பிக்சர்ஸ், நடிகை ராக்கி சாவந்த் யோகா குரு பாபா ராம்தேவை திருமண செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தது ஆகியவை பிரபலமாக பார்க்கப்பட்டது என வெளியிட்டுள்ளது. உலகளவில், ஆப்பிள் ஐ-போன், பிளாக் பெர்ரி, நோக்கியா செல்போன்கள்.

கூடுதல் தகவல், பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பைத்தான் மொபைல் வீடியோக்களில் அதிகம் பேர் தேடியிருப்பதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது. இதுபோல் நீங்களும் முயற்சிக்கலாம்.

பியூட்டி பார்லரும் பலான விசயங்களும் ? எச்சரிக்கை !?

சென்னையில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் பியூட்டி பார்லர் ஸ்பா என்ற போர்வையிலும் அழகு கலை நிபுணர்கள் பெயரிலும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் அபய்குமார்சிங் ஆகியோர் உத்தரவிட்டனர்.

விளம்பரங்களில் வெளி வந்த தொலைபேசி எண்களில் வாடிக்கையாளர்கள் போல போலீசார் தொடர்பு கொண்டு பேசினர்.

அதற்கு மறுமுனையில் பதிலளித்த நபர் ஆழ்வார் பேட்டையில் எல்டாம்ஸ் ரோடு சந்திப்பிற்கு அழைத்து மாறு வேடத்தில் இருந்த போலீசாரை வாடிக்கையாளர்கள் என தவறாக நினைத்து தங்களது ஆழ்வார்பேட்டை-எல் டாம்ஸ் ரோட்டில் இயங்கி வந்த சுகோஸ்பா பியூட்டி பார்லருக்கு அழைத்து சென்று அங்கிருந்த அழகிகளை காட்டி ரூ. 5 ஆயி ரம் கொடுத்தால் உல்லாச மாக இருக்கலாம் என்று கூறினர்.

விபசாரம் நடப்பதை உறுதிபடுத்திக் கொண்ட போலீசார் பியூட்டி பார்லர் பொறுப்பாளர் சுனிதா என்பவரை கைது செய்து அங்கிருந்த அசாம் மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த 4 இளம்பெண்களை மீட்ட னர்.

மேலும் விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் பிரபல விபசார பெண் தாதாவும் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவருமான கேரளாவைச் சேர்ந்த சுபா என்ற ஆன்சியின் மசாஜ் சென்டருக்கும் மாறு வேடத்தில் சென்ற போலீசார் விபசாரம் நடப்பதை உறுதி செய்து அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை நடத்தி ஆன்சி மற்றும் அவருக்கு துணையாக செயல்பட்ட பாலாஜி (23) என்பவர்களை கைது செய்து அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்த வைத்திருந்த மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 7 இளம்பெண்களை மீட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். சென்னை மாநகரில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் மற்றும் பியூட்டிபார்லர் என்ற போர்வையிலும் மற்றும் அழகு கலை நிபுணர்கள் என்ற பெயரிலும் வாடிக்கையாளர்களை மயக்கி கவர்ந்து விபசார தொழிலில் ஈபட்டு வரும் குற்றவாளிகள் மீதும் அவர்களுக்கு துணைபோகும் சமூக விரோதிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது போன்ற போலி விளம்பரங்களை கண்டு வாலிபர்கள் தவறான வழிகளில் சென்று ஏமாந்து போகக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Friday, October 14, 2011

உடலுக்கு உற்சாகமும் மகிழ்ச்சியும் தரும் உடற் பயற்சி !

* மூளை செல்களின் ஆயுள் நீட்டிக்கப்படுகிறது.

* மூளையின் நரம்பு செல்களின் எண்ணிக்கை பெருகுகிறது.

* நரம்பு செல்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கிறது.

* ரத்த ஓட்டம் செம்மைப்படுத்தப்படுகிறது.

* அல்ஸைமர், டெம்னீஷியா போன்ற நினைவாற்றல் தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

* வயதாவதால் ஏற்படும் மறதியைக் குறைக்கிறது.

* பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் உதவுகிறது.

* நினைவாற்றல், கவனம் செலுத்துதல், மனத்தை ஒருமுகப்படுத்துதல், ஆகியவற்றை மேம்பாடு அடையச் செய்கிறது.

* உற்சாகமும் மகிழ்ச்சியும் கொண்ட மனோ நிலையைத் தருகிறது.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு இனியாவை இயக்கம் இமயம் !?

வாகைசூட வா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கி இருப்பவர் இனியா. முதல்படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி வாகை சூடியுள்ளார்.

இதன் பிரதிபலனாக பாரதிராஜா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது இனியா. தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் என்று போற்றப்படும் டைரக்டர் பாரதிராஜா, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் அன்னக் கொடியும் கொடி வீரனும்.

இப்படத்தின் நாயகனாக பார்த்திபன் நடிக்கிறார். இவருடன் நடிகை மீனாள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் படத்திற்கான நாயகி மட்டும் முடிவாகாமல் இருந்தநிலையில், வாகைசூட வா படத்தில் இனியாவின் நடிப்பை பார்த்து வியந்துபோய், அவரையே நடிக்க வைக்க இருக்கிறார் பாரதிராஜா. விரைவில் படத்தை பற்றிய முழுஅறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

Thursday, October 13, 2011

தேர்தலில் ஜெயிக்க குடி மகனுக்கு டோர் டெலிவரி !!

செஞ்சி : உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவியை விட, ஊராட்சி தலைவர் பதவிக்கே, போட்டி அதிகமாகி உள்ளது.

இவர்கள் பதவியை பிடிக்க, ஓட்டுக்கு பணம், பரிசுப் பொருள் கொடுப்பது ஒரு பக்கம் இருந்தாலும், குடிமகன்களை திருப்திபடுத்த தவறுவதில்லை. இதுவரை வேட்பாளர்களை தேடிச் சென்ற குடிமகன்களுக்கு மட்டுமே, "குவார்ட்டர்' பாட்டில் கிடைத்து வந்தது. இந்த முறை, செஞ்சி ஒன்றியம் சிங்கவரம் கிராமத்தில், தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் சிலர், மாலை நேரமானதும், குடிமகன்களின் வீடுகளுக்கே, "குவார்ட்டர்' பாட்டில்களை, "டோர் டெலிவரி' செய்துள்ளனர்.

இத்தகவல் மற்ற கிராமங்களுக்கும் பரவி, "திட்டத்தை நம்ம ஊரிலும் அமல்படுத்தினால் நல்லா இருக்குமே...' என, மற்ற ஊரில் உள்ள குடிமகன்கள் பலரும் ஆதங்கப்படுகின்றனர்.

தீவிரவாதத்தை காட்டும் தீவிரவாதிகள் ??

ஊழல் ஒழிப்பு மற்றும் பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் சமூக சேவகர் அன்னா ஹசாரேயின் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் முக்கியமானவர் பிரசாந்த் பூஷன். பிரபலமான சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர். இவர் நேற்று மாலை சுப்ரீம் கோர்ட்டிற்கு எதிரேயுள்ள, புதிதாக கட்டப்பட்ட வழக்கறிஞர்கள் சேம்பரில் உள்ள தன் அறையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, பிரசாந்த் பூஷனை சந்திக்க தாங்கள் அனுமதி வாங்கியிருப்பதாகக் கூறிக் கொண்டு, இரண்டு வாலிபர்கள் (ஸ்ரீராம்சேனா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்) அவரது அலுவலகத்திற்குள் வேகமாக நுழைந்தனர். உள்ளே நுழைந்த இரண்டு பேரும் பிரசாந்த் பூஷனை சரமாரியாக தாக்கினர்; அடித்து, உதைத்தனர். அவரை நாற்காலியில் இருந்து கீழே இழுத்துப் போட்டு தாக்கியதோடு, நெஞ்சிலும் மிதித்தனர். இந்தத் தாக்குதலில், பூஷனின் சட்டை கிழிந்ததோடு, அவரின் மூக்குக் கண்ணாடியும் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்தத் திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத, பூஷன் அலுவலக ஊழியர்களும், மற்றவர்களும் அங்கு கூடி, தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க முற்பட்டனர். அதில், ஒரு வாலிபர் சிக்கினார்; மற்றொரு வாலிபர் தப்பி ஓடி விட்டார். பின்னர் பிடிபட்ட நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தாக்குதலுக்கு ஆளான பிரசாந்த் பூஷனை, ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்தியாவை பல மாநிலமாக உடைக்க போவது இந்துத்துவ தீவிரவாதிகள்தான் வேறு யாருமல்ல.

உணவு பழக்கம் சீராக இருந்தால் உடல் உறுப்புகளும் சீராக இயங்கும்!

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த ஆய்வில், நாம் எப்படி சாப்பிடுகிறோம்? என்ன சாப்பிடுகிறோம்? என்பனவற்றை பொறுத்தே நம் உடல் நலம் அமையும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

உணவு பழக்கம் சீராக இருந்தால் நம் உடல் உறுப்புகளும் சீராக இயங்கும். உங்கள் உடல் வாக்கு எத்தகைய உணவு வகைகள் சிறப்பாக உள்ளதோ அவற்றையே தேர்வு செய்தால் நோய் எதுவும் வராமல் வாழலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பொதுவாக எல்லாருக்கும் காய்கறி வகை உணவுகளே நல்ல பலன்களைத் தரும் என்று கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக சிறுநீரகம் நன்றாக இயங்க காய்கறி, சைவ உணவே சிறந்தது என்று அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

Wednesday, October 12, 2011

வியந்து நான் மீண்டும் விஜய்யுடன் நடிக்க ஆசை! பிரியங்கா!!

கடந்த சிலதினங்களுக்கு முன் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கட் இறுதிபோட்டியை காண வந்திருந்தார்.

அப்போது பேட்டியளித்த ப்ரியங்கா சினிமாவில் நான் அறிமுகமானது கொலிவுட்டில் தான். முதல்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்தேன். விஜய் மீது எனக்கு எப்பவும் தனி விருப்பம் உண்டு., அவருடன் நடித்ததை என்னால் மறக்க முடியாது. விஜய் மட்டுமல்லாது இங்குள்ள பல நடிகர்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

தமிழ் சினிமா முன்பை விட தற்போது பலமடங்கு மாற்றம் கண்டுள்ளது., சமீபத்திய சில தமிழ் படங்களை பார்த்து வியந்து போனேன். எனக்கும் தமிழ் படங்களில் நடிக்கவும், குறிப்பாக என்னுடைய முதல் நடிகர் விஜயுடன் மீண்டும் நடிக்க ஆர்வமாய் இருக்கிறேன். எனது கனவு நிறைவேறினால் மிகழ்ச்சியடைவேன்.

ஷெங்கன் விசாவுக்கு புது முறை அறிமுகம்! ஐரோப்பிய யூனியன்

லண்டன் : ஐரோப்பாவின் போர்ச்சுகல் முதல், நார்வே வரையிலான, 25 நாடுகள் கொண்ட நிலப் பரப்பு, "ஷெங்கன்' என அழைக்கப்படுகிறது.

இந்நாடுகளுக்குச் செல்ல, இந்நிலப்பரப்பைச் சேர்ந்தவர்களுக்கு எவ்வித விசாவும் தேவையில்லை. ஆனால், பிற நாட்டவர் செல்ல, "ஷெங்கன்' விசா வாங்க வேண்டும். இப்போது இந்த விசாவில் புதிய முறையை ஐரோப்பிய யூனியன் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, விரல் ரேகைகள், முகப் பதிவு உள்ளிட்ட, "பயோமெட்ரிக்' முறைகளைப் பயன்படுத்தி விசா வழங்கப்படும். இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் வெளியிட்ட அறிக்கையில், "இதன் மூலம் விசா விண்ணப்பங்கள் தங்கு தடையின்றி விரைவில் வழங்கப்படும். விசா மோசடிகளும் தடுக்கப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, 13 கோடி, "ஷெங்கன்' விசாக்கள் வழங்கப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!