தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. தி.மு.க. தோழமைக் கட்சிகளை ஆதரித்து, நடிகர் வடிவேலு நத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் க. விஜயனுக்கு ஆதரவாக நத்தம் பஸ் நிலையத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாகக் கூட்டத்தைக் கூட்டியதாக வடிவேலு மற்றும் தி.மு.க. வேட்பாளர் க. விஜயன் மீது 143 மற்றும் 158 பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நத்தம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்ததைத் தொடர்ந்து, இருவரும் ஆஜராயினர்.
இதனைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 14-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி ஆனந்தன் உத்தரவிட்டார். பின்னர் நடிகர் வடிவேலு செய்தியாளர்களிடம் கூறுகையில், வழக்கு மற்றும் தற்போதைய மாநில அரசின் ஆட்சி தொடர்பாகக் கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை. விரைவில் உங்களை ஹீரோவாக வந்து சந்திக்கிறேன். தொடர்ந்து மக்களை சிரிக்க வைப்பேன் என்று கூறினார்.
0 comments :
Post a Comment