Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, January 12, 2012

இந்தியாவில் முதலீடு செய்ய வெறுக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்!!

சிங்கப்பூர்: ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம், ஆசிய நாடுகளில், எந்த நாட்டில் அதிகார முறைமை சிறந்த முறையில் செயல்படுகிறது, எந்த நாட்டில் மிக மோசமாக செயல்படுகிறது என்பதைக் கண்டறிய சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியது.

இதன் படி, மொத்தம் 10 இடங்களில், 2.25 புள்ளிகள் பெற்று சிங்கப்பூர் முன்னணியில் உள்ளது. இதையடுத்து ஹாங்காங், தாய்லாந்து, தைவான், ஜப்பான், தென் கொரியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. மலேசியாவை அடுத்து, சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் உள்ளன. ஆனால் 9.21 புள்ளிகள் பெற்று இந்தியா கடைசியில் உள்ளது.

இதுகுறித்து அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவில் உள்ள அதிகார வர்க்கம் அதாவது அதிகாரிகள் திறமை குறைந்தவர்களாக உள்ளனர். இவர்கள் மீது, ஊழல் உள்ளிட்ட மிகப் பெரியளவிலான புகார்கள் கூறப்படுகின்றன. இது இந்தியாவில் முதலீடு செய்ய வரும் அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு மிகப் பெரிய தலைவலியாக உள்ளது. குறிப்பாக, இந்திய அதிகார முறைமையில், போதுமான உட்கட்டமைப்பு வசதி இல்லாதது, ஊழல், அதிகாரிகள் லஞ்சத்துக்கு ஆசைப்படுவது போன்றவை பெரும் பிரச்னைகளாக உள்ளன.

நிறுவனங்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதன் மூலம், தங்களுக்கு சாதகமான காரியங்களை நிறைவேற்றிக் கொள்கின்றன. மேலும், இந்தியாவில், தாறுமாறான மற்றும் கடும் சுமையை ஏற்படுத்தக் கூடிய வரிகள், சுற்றுச் சூழல் மற்றும் பிற கட்டுப்பாடுகள் ஆகியவை, அந்நிய நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதைத் தடுக்கின்றன. இதனால் அந்நிறுவனங்களுக்குப் பெருமளவில் செலவு ஏற்படுகிறது. இந்திய கோர்ட்டுகளுடன் மல்லுக்கட்டுவதை விட அவற்றைத் தவிர்ப்பதையே நிறுவனங்கள் விரும்புகின்றன. தவறான முடிவுகள் எடுக்கப்படும் போது அதற்கு இந்திய அதிகாரிகள் பொறுப்பேற்பதே இல்லை.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!