Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, January 13, 2012

இலக்கியத்துக்காக இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற இந்தியர்கள்

லண்டன்: மான் ஏசியன் அவார்ட் இலக்கிய விருதிற்கான இறுதிப் பட்டியலில் மூன்று இந்தியர்களின் நாவல்கள் இடம்பெற்றுள்ளன.

அமிதவ் கோஷின்ரிவர் ஆஃப்ஸ் மோக், ராஹுல் பட்டாச்சாரியா வின்த ஸ்லை கம்பெனி ஆஃப் பீப்பில் ஹூக்யர், ஜஹ்ன விபரூவாவின் ரிபெர்த் ஆகிய நாவல்கள் 2011-ஆம் ஆண்டிற்கான மான் ஏசியன் இலக்கிய விருதிற்கான இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

பாகிஸ்தானின் ஜமீல் அஹ்மத், தென்கொரியாவின் க்யூங்க் சுக்ஷின், சீனாவின் யான் லியாங்கே, ஜப்பானின் பனானா யோஷி மோட்டோ ஆகியோரும் இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

ஆசிய நாடுகளைச் சார்ந்த எழுத்தாளர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவலுக்கு 30 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும். உள்ளூர் மொழிகளில் எழுதப்பட்ட நாவல் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்க்கப்பட்டாலும் அவற்றையும் பரிசுக்காக பரிந்துரைக்கலாம்.

இறுதிப் பட்டியலில் இடம் பிடித்த நூல்கள் எல்லாம் மிகச்சிறந்த தரம் வாய்ந்தவை என விருது தேர்வு கமிட்டி கூறியுள்ளது. நவம்பரில் வெளியிட்ட பட்டியலில் 5 எழுத்தாளர்கள் இடம்பெற்றனர்.அருந்ததிராய், தெஹல்கா எடிட்டர் தருண் தேஜ்பால் ஆகியோர் இறுதிப் பட்டியலில் இடம்பெறவில்லை.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!