லண்டன்: ஆண்டுதோறும், உயர் கல்விக்காக, இந்திய மாணவர்கள் பிரிட்டனுக்குச் சென்று, அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சேர்கின்றனர். ஆனால், தற்போது, இந்தியாவில் இருந்தபடியே பிரிட்டனில் படிப்பதற்குத் தான் மாணவர்கள் விரும்புகின்றனர்.
இதுகுறித்து, பிரிட்டனின் உயர்கல்வி புள்ளிவிவர ஏஜென்சி (எச்.இ.எஸ்.ஏ.,) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 2010- 11ம் கல்வியாண்டில், 8 ஆயிரத்து 340 இந்திய மாணவர்கள், இந்தியாவில் இருந்தபடியே பிரிட்டனில் படித்துள்ள தாகவும், இது கடந்தாண்டுகளை விட மிக அதிகம் எனவும் தெரிவித்தார். இந்த உயர்கல்வியில், தொலை தூரக் கல்வி மற்றும் இந்தியாவில் கிடைக்கும் பிரிட்டன் படிப்புகள் இரண்டும் அடங்கும்.பிரிட்டனில், கல்விக்கான செலவுகள் அதிகமாக உள்ளதால், அவற்றைத் தவிர்ப்பதற்காகத் தான், இந்திய மாணவர்கள் இந்த முடிவை எடுக்கின்றனர்.
அதோடு,படிப்பு முடிந்த பின், அதற்கான செலவுகளை, மேலும் இரண்டு ஆண்டுகள் அங்கேயே தங்கியிருந்து, ஏதாவது வேலை பார்த்து அடைப்பதற்காக, முன்பு, "போஸ்ட் விசா ஒர்க்' என்ற விசா தரப்பட்டது. ஆனால், தற் போதைய பிரதமர் டேவிட் கேமரூன், அந்த விசாவை இந்தாண்டு ஏப்ரல் முதல் ரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இதுவும், மாணவர்களின் முடிவுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.தற்போதைய புள்ளிவிவரப்படி, இந்த கல்வியாண்டில் மட்டும், 45 ஆயிரம் இந்திய மாணவர்கள், பிரிட்டனில் படித்து வருகின்றனர்.
0 comments :
Post a Comment