லண்டன்: கறுப்பு இனத்தவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு ஹாலிவுட் பாரபட்சம் காண்பிப்பதாக பிரபல இயக்குநர் ஜார்ஜ் லூக்காஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது புதிய திரைப்படமான ‘ரெட் டைல்ஸ்’ முழுமையடைய 20 வருடங்கள் தேவைப்பட்டதற்கு முக்கிய காரணம் இந்த இனரீதியான பாரபட்சம்தான் என லூக்காஸ் ‘டெய்லி ஷோ’ வுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
‘ரெட் டைல்ஸ்’ திரைப்படத்தில் நடித்த அனைவருமே கறுப்பர்கள் ஆவர். ஆகையால் ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் வேண்டுமென்றே பாரபட்சம் காண்பித்தன. இத்தகையதொரு திரைப்படத்திற்கு மார்க்கெட்டிங் செய்வது சிரமமானது என பலரும் அவருக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஹாலிவுட்டில் விநியோகதஸ்தர்கள் இத்திரைப்படத்தை வாங்க தயாராகவில்லை என்பதால் லூக்காஸ் தனது நிறுவனத்திடமே விநியோக பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.
1 comments :
அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இது போன்றவைகள் நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன.இதில் யாரை சொல்லி யாரை திருத்துவது...தகவலுக்கு நன்றி.
Post a Comment