கடந்த 30ம் தேதி முதல், மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழக அரசு மீட்புப் பணிக்காக, பேரிடர் மேலாண்மை திட்ட இயக்குனர் அபூர்வா தலைமையில், ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். புயலுக்குப் பின், கடலூர் நகரில் எங்கு பார்த்தாலும் சுழலும் விளக்குகள் பொருத்தப்பட்ட கார்கள், "ஜி' பொறிக்கப்பட்ட வாகனங்கள் சுழன்று வந்து கொண்டிருக்கின்றன.
மீட்புப் பணியே முடியாததால், மாவட்ட நிர்வாகத்தால் நிவாரணப் பணிக்குச் செல்ல முடியவில்லை. மின் துறையில் தினமும் 1,000 பேர் இரவு பகலாக பணியாற்றி, வெறும் 35 டிரான்ஸ்பார்மர்கள் மட்டுமே சரிசெய்து, இதுவரை 2 கி.மீ., தூரம் தான் மின்சாரம் கொண்டு வரப்பட்டுள்ளது. கிராம சாலைகளில் விழுந்துள்ள மின் கம்பங்கள், மரங்களை அப்புறப்படுத்தாததால், தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடந்து ஐந்து நாட்களாகியும், கிராமப் பகுதிகளில் மீட்புப் பணி துவக்கப்படாததால், மக்கள் அரசின் (ஜெயலிதா) மீது கடும் கோபம் கொண்டுள்ளனர்.
இடைத்தேர்தல் பாணியை மீட்புப் பணியில் காட்டலாமே! : இடைத்தேர்தல் என்றால், கிராமத்திற்கு ஒரு அமைச்சர், தெருவுக்கு ஒரு எம்.எல்.ஏ., என தொகுதியை முற்றுகையிட்டு, ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சில கோடி ரூபாயை செலவிட்டு, அப்பகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து ஓட்டுகளைப் பெறுகின்றனர்.
அதேபோன்று, "தானே' புயலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் முகாமிட்டு, ஒவ்வொருவரும் சில கிராமங்களைப் பிரித்துக் கொண்டு, நிவாரணப் பணியை மேற்கொண்டிருந்தால், அதிகாரிகளும் துரிதமாக செயல்படுவர். அதைக் கண்டு, அந்தந்த பகுதி மக்களும் விழுந்த மரங்கள் மற்றும் மின் கம்பங்களை அகற்றவும், புதிய மின் கம்பங்களை நடுவதற்கும் தாமாகவே முன் வருவர். இதனால், ஓரிரு நாட்களிலேயே மீட்புப் பணியை முழுமையாக நிறைவேற்ற முடியும். மக்களும் இயல்பு நிலைக்கு திரும்புவர். அதன் பிறகு, புயலால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு மேற்கொள்ள வேண்டிய புனரமைப்புப் பணியைத் துவக்க, அரசுக்கும் வசதியாக இருக்கும்.
0 comments :
Post a Comment