புது தில்லி, ஜன.4: செல்போனில் நம்பர் போர்டபிளிட்டி எனும் வசதி சமீபத்தில் அறிமுகமானது. இதனால் செல்போன் எண்ணை மாற்றாமலேயே விரும்பும் செல்போன் சேவையளிக்கும் நிறுவனத்துக்கு மாறிக் கொள்ளலாம்.
இதேபோன்ற வசதியை வங்கிகளில் சேமிப்புக் கணக்கில் அமல்படுத்துவது குறித்து ஆராயப்படுகிறது. இந்த விஷயத்தில் இப்போது சில தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளன. அவை என்னவென்று கண்டறியப்பட்டுவிட்டது. விரைவிலேயே அவை தீர்க்கப்பட்டு இத்தகைய வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று நிதிச் சேவைப்பிரிவு செயலர் டி.கே. மித்தல் தெரிவித்தார்.
நிதியமைச்சகக் கூட்டத்தில் பொருளாதார விவகாரத்துறைச் செயலர் ஆர். கோபாலன், நிதித்துறைச் செயலர் ஆர்.எஸ். குஜ்ரால், தலைமை பொருளாதார ஆலோசகர் கெüஷிக் பாசு ஆகியோர் பங்கேற்றனர்.
வங்கிகள் அடையாளக் குறியீடு, உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள் படிவம் (கேஒய்சி), வங்கித் தீர்வு ஆகியன சேமிப்புக் கணக்கைப் பராமரிப்பதில் பின்பற்றப்படும் முக்கிய அம்சமாகும். இவை முறையாக இருந்தால் வேறு வங்கிகளுக்கு மாற்றுவது எளிதாகும்.
0 comments :
Post a Comment