Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, January 20, 2012

ஒய் திஸ் கொலவெறி ஜனவரியில் அதிகம் லண்டனில் ?

லண்டன்,: ஜனவரி மாதத்தில் பனியும் குளிரும் அதிகம். அதனால் கணவனும் மனைவியும் வீட்டில் அதிக நேரம் (சுமார் 15 மணி நேரம்) ஒன்றாகத் தங்க நேர்கிறது. (இந்த ஒரு காரணம் போதாதா, சண்டை ஏற்பட?) மோசமான பருவநிலை, நீண்ட இரவுகள், செலவுகள் அதிகமாவதால் சேமிப்பும் கையிருப்பும் குறைந்துவிட்ட நிலை போன்றவற்றால் மோதல்கள் வெடிக்கின்றன.

பணம் சம்பாதிக்கும் ஆற்றல் கணவனுக்கு எவ்வளவு குறைவு என்பதை மனைவி அறியவும், செலவழிக்கும் ஆற்றல் மனைவியிடம் எவ்வளவு அதிகம் என்று கணவன் உணரவும் இந்த மாதம் பெரிதும் உதவுகிறது. எனவே பொருளாதாரப் பிரச்னைகளாலேயே பூசல் தொடங்குகிறது. வெயில் காலங்களில் ஒரு நாளில் 10 மணி நேரம்தான் இருவரும் சேர்ந்து வீடு தங்குகிறார்கள். அதிலும் பெரும்பாலும் தூங்குவதில் போய்விடுவதால் சண்டைக்கு போதிய அவகாசம் கிடைப்பதில்லை.

ஜனவரி மாதத்தில் சராசரியாக 38% வீடுகளில் மோதல்கள் ஏற்படுகின்றன. 25 வயதுக்குக் குறைவானவர்களிடையே 48% அளவுக்கு மோதல்கள் முற்றுகின்றன. ஜனவரியில்தான் மன உளைச்சல்கள் அதிகம் என்று பெரும்பாலான தம்பதியர் குறிப்பிட்டனர்.

வருமானம் குறைவு, புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை குறைவு போன்ற காரணங்களால் 65% தம்பதியர் விவாகரத்துவரைகூட போகின்றனர். இனி இவரோடு வாழக்கூடாது என்று புத்தாண்டிலேயே தீர்மானித்துவிடுவதாக 7% பேர் ஒப்புக்கொண்டனர். காலையில் சீக்கிரம் எழுந்துகொள்ளவே முடிவதில்லை என்று 59% பேர் கூறியுள்ளனர். ஜனவரி மாதத்தில் குளிர் அதிகம், சூரிய வெளிச்சம் குறைவு என்பதால் சோம்பலும் மன வெறுமையும் அதிகமாக இருக்கும் என்று உளவியலாளர் டோனா டாசன் தெரிவிக்கிறார்.

பண முடை, வேலையில்லாமல் வெட்டியாக இருக்கும் நேரம் அதிகரிப்பு, சோம்பல், உற்சாகம் இன்மை, அடுத்து என்ன செய்வது என்ற இலக்கு இல்லாமை போன்ற காரணங்களால் ஜனவரி மாதத்தில் கணவன், மனைவியரிடையே பூசல்கள் அடிக்கடி தோன்றுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

கொலை வெறியை இதனால் ஜனவரியை "ஜனவெறி' என்றால் தவறு என்ன?

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!