Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, January 9, 2012

பெரும் த(ல)லைகள் படம் சீசனில் மட்டும்?

பெரும்பாலான தியேட்டர்களில் பெரிய நடிகர்களின் படங்கள் ஆக்கிரமிப்பதால், சிறு பட்ஜெட் படங்கள் முடங்கி வருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு, இனி பண்டிகை நாட்களில் மட்டுமே பெரிய நடிகர்கரின் படங்களை ரிலீஸ் செய்வதென்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து இயக்குநரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான தியேட்டர்‌களை பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நடிகர்களின் படங்கள் ஆக்கிரமித்து கொள்கிறது. இதனால் சின்ன பட்ஜெட் படங்கள் பல முடங்கி போய் உள்ளன. கடந்த ஆண்டு தணி‌க்கை செய்யப்பட்டு கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாகமால் முடங்கி போய் உள்ளன.

இதனால் படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம். இந்த நிலைமையை சரிசெய்யும் பொருட்டு, பெரிய நடிகர்களின் படங்களை ஏப்ரல் 14, மே 1, ஆகஸ்ட் 15, தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய 5 தினங்களில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். இதன் மூலம் சின்ன பட்ஜெட் படங்களுக்கும் போதிய தியேட்டர் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!