சென்னை: அந்த நகரை சேர்ந்த அரசு அதிகாரியின் மகன் ஒரு சாப்ட்வேர் பொறியாளர். மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., அனுப்பி, ஒரு பெண்ணிடம் நட்பு வயப்பட்டார். கொடைக்கானலில் சந்திக்க விரும்புவதாக அப்பெண்ணிடமிருந்து வந்த எஸ்.எம்.எஸ்.,ஐ நம்பி சென்றார். அவரை அழைத்தது பணம் பறிப்புக் கும்பல் என அங்கு சென்ற போதுதான் தெரிந்தது. பின் அக்கும்பலால் அவர் கொலை செய்யப்பட்டார்.
மதுரை வாலிபர் செந்தில்: கிருஷ்ணன் மொபைல் போனில் உங்களுக்கு ஏழரை லட்சம் பவுன்ட் (இந்திய மதிப்பு ரூ.5.50 கோடி) பரிசு தொகை விழுந்திருப்பதாக எஸ்.எம்.எஸ்., தகவல் வந்தது. பரிசுதொகை வழங்க ரூ.ஐந்தரை லட்சம் பண பரிவர்த்தனை செலவுக்கு கொடுக்கும்படியும் தெரிவிக்கப்பட்டது.
அவரும் அத்தொகையை இரு தவணைகளாக அனுப்பி வைத்தார். ஆனால் பரிசு தொகை கிடைக்கவில்லை. பின்னர் ஏமாற்றப்பட்டது தெரிந்து புகார் செய்தார். மொபைல் போன், இன்டர்நெட், கிரெடிட், ஏ.டி.எம்., கார்டுகள் மூலம் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப நவீன மோசடிகள் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருகின்றன. அறுபது சதவீத இளைஞர்கள் மொபைல் போன்களில், ஆபாச படங்களை டவுன் லோடு செய்கின்றனர் என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
2 comments :
sir, very useful and alarming messages.
O . Carfull sasi
Post a Comment