புதுடில்லி : வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான டில்லி டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள போதிலும், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் 76 ரன்னில் ஆட்டமிழந்து சத சாதனையை இப்போட்டியிலும் தவற விட்டிருப்பது அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள், 1 டுவென்டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்துள்ளது. டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டில்லியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 304 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடிய போதிலும், மற்ற வீரர்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் இல்லை.
நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் எல்பிடபிள்யூ முறையில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். 2ம் இன்னிங்சில் இந்திய வீரர்கள் சிறப்பாக பந்துவீச, வெஸ்ட் இண்டீஸ் அணி, 180 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனையடுத்து, 276 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கான 276 ரன்களை எடுத்து 5 விக்கெட் வி்த்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், தொடரில் 1-0 கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
0 comments :
Post a Comment