புது தில்லி, நவ.24: புகழ் பெற்ற டாடா குழுமத்தின் தலைவராக 20 ஆண்டுகளாக இருந்த ரத்தன் டாடா, அந்தப் பதவியிலிருந்து விடைபெறுகிறார். அவருக்கு பதிலாக புதிய தலைவராக சைரஸ் மிஸ்டிரி பதவியேற்கவுள்ளார்.
2012-ம் ஆண்டு டிசம்பரில் மிஸ்டிரி பதவியேற்பார் எனத் தெரிகிறது. அதுவரை ஒர் ஆண்டுக்கு ரத்தன் டாடாவுடன் இணைந்து அவர் பணி செய்வார்.
74 வயதுடைய ரத்தன் டாடா ஹார்வர்டு வர்த்தகப் பள்ளியில் மேலாண்மை பயின்றவர். 1962-ம் ஆண்டு டாடா குழுமத்தில் சேர்ந்த ரத்தன் டாடா, 1981-ம் ஆண்டு டாடா இண்டஸ்டிரீஸ் தலைவராகவும், 1991-ம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
பியட் ஸ்பா, அல்கோ, போன்ற சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களின் வாரியத்திலும் அவர் உறுப்பினராக உள்ளார். மிட்சுபிஷி, ரோல்ஸ் ராய்ஸ், போன்ற நிறுவனங்களின் ஆலோசனை குழுவிலும் அவர் உறுப்பினராக உள்ளார்., மேலும் அவர் இந்திய அரசின் பத்ம விபூஷண் விருதையும் பெற்றுள்ளார்.
0 comments :
Post a Comment