அத்தியாவசிய பொருட்களான, பஸ் கட்டண உயர்வு, ஆவின் பால் விலை உயர்வு, மின் கட்டணத்தை உயர்த்த முடிவு உள்ளிட்ட அறிவிப்புகளை, கடந்த 17ம் தேதியன்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.
கட்டண உயர்வுக்கு தி.மு.க., - காங்., - பா.ம.க., - ம.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. கடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., அணியில் போட்டியிட்ட தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் உதிரி கட்சிகளும் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதற்கிடையில் மதுரையில் ஒரு திருமண விழாவில் பங்கேற்று பேசிய எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் , தமிழகத்தில் விலை உயர்வை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். மேலும் மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. தற்போது தமிழகத்தில் குடும்ப ஆட்சி போய் கும்பல் ஆட்சி நடக்கிறது என்றார்.
தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்கை காப்பாறாமல் சொன்னது ஒன்று இப்போது செய்வது வேறு இரட்டை வேடமிடுகிறார் ஜெயலலிதா., விலைவாசியில் கிடைக்கும் பணத்தை கொண்டு மக்களுக்கு இனாம் தரத்தான் இந்த விலைவாசி உயர்வு நாடகம் என்றார் விஜயகாந்த்.
எது எப்படியோ நாமும் இதையெல்லாம் மறந்து அடுத்த தேர்தலில் நூறு, இருநூறுக்கு நம் ஓட்டை விற்றுவிட்டு இவரையே தேர்ந்தேடுப்போம்., இவரை (ஜெயா) புறக்கணியுங்கள் அல்லது இலவசத்தை புறக்கணியுங்கள். இதற்கும் ஒரு "ஜே' "ஜே' போடுங்க.
0 comments :
Post a Comment