லண்டன் : பொதுவாக வெளியில் கிளம்புவதென்றாலே, "இன்னுமா அலங்காரம் முடியவில்லை. சீக்கிரம் தயாராகக் கூடாதா?' என்று அன்பாகவும், மிரட்டியும் ஆண்கள்தான் தங்கள் மனைவிகளை விரட்டிக் கொண்டிருப்பார்கள். லண்டனில் இப்போதெல்லாம், இந்தக் கேள்வியை ஆண்களைப் பார்த்து பெண்கள் கேட்கின்றனராம்!
லண்டனில் உள்ள "டிராவலாஜ்' என்ற நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விவரம் வெளியாகியுள்ளது.
ஆய்வில் தெரியவந்துள்ளதாவது : உடலைச் சுத்தப்படுத்த, முகச்சவரம், சிகையலங்காரம், முகத்தில் கிரீம்களைத் தடவ, தகுந்த ஆடைகளை தேர்ந்தெடுக்க ஒரு நாளைக்கு 81 நிமிஷங்களை ஆண்கள் செலவிடுகின்றனராம். அதுவே பெண்கள், தங்களை அழகுபடுத்திக் கொள்வதற்கும், ஆடைகளை அணிவதற்கும் 75 நிமிஷங்கள்தான் எடுத்துக் கொள்கின்றனராம்.
குளிப்பதற்கு ஆண்கள் 23 நிமிஷங்களும், பெண்கள் 22 நிமிஷங்களும் (ஒரு நிமிஷத்தில் ஆண்களை முந்திவிட்டீர்களே) செலவிடுகின்றனராம். ஆடைகளைத் தேர்ந்தெடுக்க ஆண்களுக்கு 13 நிமிஷங்களும், பெண்களுக்கு 10 நிமிஷங்களும் ஆகின்றதாம்.
இதே நிறுவனம் மேற்கொண்ட மற்றொரு ஆய்வில், பயணத்தின்போது ஆண்கள் கொண்டு செல்லும் "டாய்லெட் பேக்'கில் சராசரியாக 156 பவுண்ட் மதிப்புள்ள டூத் பிரஷ், பேஸ்ட், சீப்பு, முகச்சவரத்துக்கான ரேஸர், பல்வேறு வகையான கிரீம்கள், லோஷன்கள் உள்ளிட்ட பொருள்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
2 comments :
அடடா அப்போ அழகுசாதனப்பொருட்கள் விற்பனை அமோகமாக அதிகரிச்சிருக்கா? மொத்தத்தில் அனைத்து மக்களுக்கும் தங்கள் மீதுள்ள தன்நம்பிக்கையைவிட அழகுசாதனப்பொருட்கள்மீதான நம்பிக்கை அதிகரிக்கிறதா? வாழ்க விளம்பர யுக்திகள்.
இந்தியாவிலேயும் இப்படி ஒரு சர்வே எடுத்தா தேவலாம். ஆண் நண்பர்கள் கூடினாலே, வீட்டுப் பெண்கள் அலங்காரம் தான் அரைபடுகிறது
Post a Comment