Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, November 10, 2011

இந்தியாவின் முன்னேறும் முதன்மை மாநிலம் !?

அஹ்மதாபாத்: 2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது சர்தார்புராவில் 33 பேரை உயிரோடு தீவைத்து கொலைச் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 73 பேரில் 42 நபர்களை குஜராத் விரைவு நீதிமன்றம் விடுவித்துள்ளது. மீதமுள்ள 31 பேர் குற்றவாளிகள் என அறிவித்தது.

2002 பிப்ரவரி 28-ஆம் தேதி இரவில் இவ்வழக்கு தொடர்பான மிகக் கொடூரமான சம்பவம் நிகழ்ந்தது.சர்தார்புரா வீடுகளில் அத்துமீறி நுழைந்த ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் வீடுகளை தீவைத்துக் கொளுத்தினர். இதில் வீடுகளிலிருந்த 20 பெண்கள் உள்பட 33 பேர் உடல் கருகி இறந்தனர்.

கொலை, கொலைமுயற்சி, கலவரம், தீவைப்பு, குற்றகரமான சதித்திட்டம் ஆகிய வழக்குகள் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன., இதற்கு முழு காரணம் குஜராத் அரசையே சாரும் ஏனென்றால்., சம்பவம் நேரும்போது குஜராத் அரசும், அரசு அதிகாரிகளும் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

இது அனைத்தும் எதார்த்தமாக நடந்தது அன்று, திட்டமிட்டு சிறுபான்மையினரை கொள்ளவும், அவர்கள் சொத்துக்களும் சூறை ஆடவும் இந்த ஹிந்துத்துவா தீவிரவாதிகளால் திட்டமிட்ட சதி, இதுதான் ஜன நாயக நாடு நம்புவோம். குஜராத்தை ஆள்வது முதல்வர் முகமூடியில் இருக்கும் ஒரு கேடி.

Reactions:

4 comments :

மிகத்தவறான வாதம் உண்மையிலேயே மோடி குற்றவாளி என்று குஜராத் முஸ்லீம்கள் நம்புவார்களேயானால் அடுத்து வந்த தேர்தலில் முஸ்லீம் தீவிரவாத கட்சிகளே வெற்றி பெற்றிருக்க வேண்டும் ஆனால் மீண்டும், மீண்டும் மோடி தேர்ந்தெடுக்கப் படவேண்டிய காரணம் என்ன...???உண்மை யென்னவெனில் குஜராத்திற்கு வெளியில் உள்ள உம்மைப்போன்ற ஆட்கள்தான் வன்முறைக்குக் குடைபிடிக்கிறீர்கள்...குஜராத் முஸ்லீம்களுக்குத் தெரியும் யார் நல்லவர்கள் என்று.... நீங்களா மோடியா என்று...???நீங்கள் இதை பிரசுரித்தாலும் இல்லையென்றாலும் உண்மை இதுதான்...நன்றி...

கருத்து தந்தமைக்கு நன்றி, ஒரு தீவிரவாதிக்கு இத்தனை சப்பைக்கட்டு எதற்கு. இந்த தீவிரவாதியைப்பற்றி தெறியவேண்டுமா? தொகல்கா பத்திரிகை இவனைப்பற்றி புட்டு புட்டு வைத்துள்ளது.

visit.
http://tmpolitics.wordpress.com/

பாம்பையும் பாப்பானையும் கண்டால் பாப்பானை அடினு பெரியார் சொன்னது தப்பே இல்ல, எப்படி இவர்களால் மோடியை நியாயப்படுத்தமுடிகிறது.

மோடி தனக்கு திருமணம் ஆனதை மட்டும்தானா மறைத்துள்ளார்.? தனது ஆட்சியில் பாதுகாக்க வேண்டிய முஸ்லிம்களை படுகொலை செய்ய உதவியதை, போலி என்கவுண்டர்களை மறைத்தார் ! ஊழல் அதிகாரிகளை, சமூக குற்றவாளிகளுக்கு புகலிடம் அளித்ததை மறைத்தார் !.அரசு நிலங்களையும்,விவசாயநிலங்களையும் கார்பரேட்டு கம்பனிகளுக்கு அடிமாட்டு விலைக்கு கொடுத்ததை,அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதை மறைத்தார்,!

சிறுபான்மையினருக்கு அரசு வழங்கும் சலுகைகளை வழங்க மனமின்றி திருப்பி அனுப்பினார்.! ஒட்டு மொத்த குஜராத்தில் ஏழைகளின் அவலத்தை வளர்ச்சியாக காட்டி ஏமாற்றுகிறார்.! குடிக்க தண்ணீர் இன்றி குஜராத் மக்கள் அவதி படுவதையும் அபரிதமான வளர்ச்சியாக காட்டி ஏமாற்றி வரும் மோடி ஒரு மோசடிக்காரர்.! பச்சை பொய்யன்.!

மோடி தான் மறைத்த உண்மைகளை ஒப்புகொண்டால்.. உலகின் சர்வதேச பயங்கரவாதி போல தெரிவார்.! Ellai

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!