Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, November 2, 2011

பாலியலுக்கு ஆளாகும் பருவ குழந்தைகள்! அதிர்ச்சி தகவல்!!

நியூ டெல்லி : நாட்டின் பல இடங்களில் கடந்த வருடம் மட்டும் 5,484 குழந்தைகள் பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், 1,408 குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிக்கையில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியிடபட்டுள்ளது..

மத்திய பிரதேசத்தில் 1,182 குழந்தைகள் பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட அதே சமயத்தில், உத்திர பிரதேசத்தில் 315 குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த இரு குற்றங்களில் இதுவே மிக உயர்ந்த எண்ணிக்கை என்றும் தெரிவித்து உள்ளது.

மகாராஷ்டிராவில் 211 சம்பவங்களில் குழந்தைகள் கொலை செய்யப்பட்டும், பீகாரில் 200 மற்றும் மத்திய பிரதேசத்தில் 124 குற்றங்களும் நடந்துள்ளது. மேலும் கடந்த வருடத்தில் மட்டும் மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசம் முறையே 747, 451 மற்றும் 446 சம்பவங்களில் அப்பாவி குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் நடை பெற்றுள்ளது. சட்டீஸ்கரில் 382-ம் மற்றும் ராஜஸ்தானில் 369 என பாலியல் கொலைகள் நடந்துள்ளது என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் தலைமையகம் டெல்லியில் மட்டும் 29 குழந்தைகள் கொலை செய்யப்பட்டும், மற்றும் பல சம்பவங்களில் 304 குழந்தைகள் பாலியியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பீகாரில் 1359-ம் , உத்திர பிரதேசத்தில் 1225-ம், மகாராஷ்டிராவில் 749-ம், ராஜஸ்தானில் 706-ம், ஆந்திர பிரதேசத்தில் 581-ம் மற்றும் குஜராத்தில் 565 குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளதாக தேசிய மூலதன அறிக்கை தெரிவிக்கிறது., மேற்சொன்ன தகவல் புகார் அளித்தவை மட்டும்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!