Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, November 4, 2011

மத்திய அரசை மிரட்டும் மம்தா !!

மத்தியில் ஆளும் கூட்டணியில் ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு என்பது முற்றிலுமாக இல்லை. காங்கிரஸ் கட்சியை எந்த விதத்திலும் நாங்கள் சார்ந்திருக்கவில்லை. மத்தியில் ஆளும் காங்கிரஸ்தான், திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை நம்பி ஆட்சி நடத்தி வருகிறது.

இப்படி கூறுவதால், மத்திய அரசை நான் மிரட்டுகிறேன் என்று அர்த்தம் இல்லை. தொடர்ந்து பெட்ரோல் விலையை உயர்த்தி வருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது மக்களை பெரிதும் பாதிக்கும் விஷயம். கடந்த ஓராண்டில் 11 முறை பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை.

இப்போதைய விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற்றாக வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை தொடர்ந்து உயர்த்துவதைத்தான் நடைமுறையாக வைத்துள்ளனர். இதனை ஏற்கவே முடியாது.

பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ஜெய்ராம் ரமேஷ், ஆனந்த் சர்மா ஆகியோரிடம் பேசினேன். எங்கள் கட்சியின் முகுல் ராய், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் பேசினார்., ஆனால் இது விஷயத்தில் தன்னால் எதுவும்செய்ய முடியாது என்று பிரணாப் கூறிவிட்டார் என்றார் மம்தா.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!