Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, November 11, 2011

குடியில் மூழ்கிய தமிழக முதல்வர் !!

வீதிகள் தோறும் நமது அரசு மதுபானகடைகளை திறந்து வைத்துள்ளது. இப்போது தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலமாக கடந்த ஆண்டு 14,965 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும். இந்த வருமானத்தை அடுத்த அண்டில் 20 ஆயிரம் கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது தமிழக அரசு.

இதையடுத்து வியாபாரத்தை அதிகப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு மாவட்ட தலை நகரங்களிலும், நவீன வசதிகளுடன், குளிரூட்டப்பட்ட பிரமாண்டமான அளவில் இருக்கும் “எலைட் ஷாப்” என்ற பெயரில் மதுபான கடைகளை திறக்கவும், அது தவிர மாவட்டம் தோறும் ஐந்து இடங்களில் சாதாரண மதுபானகடைகளை திறக்கவும் கோட்ட முதுநிலை மேலாளருக்கு அதிகாரம் அளித்துள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஐந்து சாதாரண டாஸ்மாக் கடைகளையும், இரண்டு “எலைட் ஷாப்” கடைகளையும் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து வருகிறார்கள் மண்டல மேலாளர்கள்.

இந்த “பார்”களில் மற்ற “டாஸ்மாக்” பாரில் இருப்பதை காட்டிலும் கொஞ்சம் கூடுதல் “சேவை”க்கட்டணம் வசூலிக்கப்படும் என்று பெயர் சொல்ல விரும்பாத ஒரு அலுவலர் கூறினார்.

அரசு மக்களுக்கு செய்யும் “நல்ல சேவை” மக்களை போதையில் ஆழ்த்தியால்தான் நாட்டை பற்றி நினைக்காமல் அடுத்த தேர்தல் வந்தால் இவரையே முதல்வர் ஆக்குவார்கள் மக்கள்., வாழ்த்துக்கள் முதல்வரே.

2 comments :

"குடி"மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதுதான் ஒரு நல்ல முதலமைச்சருக்கு அழகு.தொடரட்டும் தங்கள் பணி.
கோன் உயர "குடி" உயர்கிறது.
தொடரட்டும் குடிமக்களுக்கான தங்கள் பணி.

வாழ்க முதல்வர் !!!

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!