Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, November 20, 2011

ஆட்டம் போட்ட நித்ய சாமியின் கொட்டம் அடங்குமா?

கோவையை சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் அவருடைய மனைவி ஆகியோரை நித்யானந்தா அவதூறாக பேசியதாக புகார் கூறப்பட்டது.

அப்போது நடிகை ரஞ்சிதாவும் உடன் இருந்ததாக கூறப்பட்டது. இதற்கு அர்ஜூன் சம்பத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நித்யானந்தாவை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

இதைதொடர்ந்து தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அர்ஜூன் சம்பத் கடந்த 8.8.2011 அன்று நித்யானந்தாவுக்கும், நடிகை ரஞ்சிதாவுக்கும் வக்கீல் நோட்டீசு அனுப்பினார். ஆனால் அந்த நோட்டீசுக்கு அவர்கள் 2 பேரும் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதனால் நித்யானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா மீது அர்ஜூன் சம்பத் கோவை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில் நித்யானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா ஆகியோர் தனக்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு சத்தியமூர்த்தி 23-ந் தேதி மனு மீதான விசாரணை நடைபெறும் என்று கூறி தள்ளிவைத்தார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!